கொரானா தேசியம்

தடுப்பூசி விலையை உயர்த்தி ஒன்றிய மோடி அரசு ஒப்பந்தம்; கோவிஷீல்டு ரூ.215, கோவாக்சின் ரூ.225

இந்தியாவில் தற்போது ரூ.150க்கு வாங்கப்பட்டு வரும் கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகளை முறையே ரூ.215, ரூ.225 என்ற அதிக விலைக்கு கொள்முதல் செய்ய ஒன்றிய பாஜக அரசு புதிய ஒப்பந்தம் செய்துள்ளது. இந்தியாவில் சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு, பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகளை ஒன்றிய அரசு நேரடியாக கொள்முதல் செய்து மக்களுக்கு செலுத்தி வருகிறது. முதலில் முன்களப் பணியாளர்கள், 45-60 வயதுக்கும் மேற்பட்டவர்கள் என தடுப்பூசி போடப்பட்டது. இதற்காக, மருந்து நிறுவனங்களுடன் 50% தடுப்பூசியை ஒன்றிய மேலும் வாசிக்க …..

கொரானா தேசியம் மருத்துவம்

அக்டோபா்-நவம்பா் மாதங்களில் கொரோனா 3வது அலை உச்சம் அடையும்- எச்சரிக்கும் விஞ்ஞானிகள் குழு

இந்தியாவில் கொரோனா 3வது அலை அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் உச்சம் பெறலாம், தினசரி பாதிப்புகள் 2 லட்சம் வரை இருக்கலாம் என ஒன்றிய அரசுக்கு ஆலோசனை வழங்கும் விஞ்ஞானிகள் குழு எச்சரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா 2வது அலையின் பாதிப்பு தற்போது படிப்படியாக குறைய ஆரம்பித்துள்ளது. பல்வேறு மாநிலங்களிலும் விதிக்கப்பட்டிருந்த கடுமையான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, மக்கள் மீண்டும் இயல்பு நிலையை நோக்கி நகர்ந்து வருகிறனர். இந்தியாவில் கொரோனா தொற்றால் இதுவரை 3,06,19,932 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மேலும் வாசிக்க …..

உலகம் கொரானா தேசியம்

ஊழல் குற்றச்சாட்டால் இந்தியாவிடமிருந்து கோவாக்சின் வாங்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்த பிரேசில் அரசு

இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனத்திடமிருந்து கோவாக்சின் தடுப்பூசி வாங்குவதற்கு போடப்பட்ட ஒப்பந்ததை தற்காலிகமாக ரத்து செய்வதாக பிரேசில் அரசு அறிவித்துள்ளது. இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிக்கு கடந்த பிப்ரவரி மாதம் பிரேசில் அரசு அனுமதி வழங்கியது. அதன்படி,பாரத் பயோடெக் நிறுவனத்திடமிருந்து முதற்கட்டமாக 4 லட்சம் கோவாக்சின் தடுப்பூசிகள் இறக்குமதி செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டது. மொத்தம் 2 கோடி அளவிற்கு தடுப்பூசிகளை வாங்கவும் பிரேசில் அரசு முடிவு செய்தது. ஆனால்,பிரேசிலில் கொரோனா இறப்பு எண்ணிக்கை 500,000ஐ மேலும் வாசிக்க …..

கொரானா சமூகம் தேசியம் மருத்துவம்

இந்தியாவில் டெல்டா பிளஸ் கொரோனா 3வது அலையை ஏற்படுத்தும்- எச்சரிக்கும் நிபுணர்கள்

இந்தியா உள்பட 9 நாடுகளில் டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ் பரவியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருந்த நிலையில், இந்தியாவில் டெல்டா பிளஸ் கொரோனா 6 மாவட்டங்களில் 22 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது. சீனாவில் 2019 ஆம் ஆண்டு இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறி வருகிறது. அந்த வகையில் இந்தியாவில் உருமாறிய கொரோனா வைரஸ்கள் கண்டுபிடிக்கப்பட்டன. முதலில் இந்தியாவில் கண்டறியப்பட்ட B.1.617.1 வைரஸுக்கு காப்பா என்றும், B.1.617.2 வைரசுக்கு டெல்டா என்றும் உலக சுகாதார நிறுவனத்தால் பெயர் மேலும் வாசிக்க …..

கொரானா சமூகம் தமிழ்நாடு திமுக

மாற்றுத்திறனாளிகள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள உதவி எண்கள் வெளியீடு- தமிழ்நாடு அரசு

மாற்றுத்திறனாளிகள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள 18004250111 மற்றும் 97007 99993 என்ற உதவி எண்களை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை மாநகராட்சி சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை வழங்கும் வகையில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, வரிசையில் காத்திருக்காமல், தகுந்த பாதுகாப்பு வழிமுறைகளுடன் விரைந்து தடுப்பூசி செலுத்தப்படுகிறது. மாற்றுத்திறனாளிகள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள 18004250111 என்ற உதவி எண் மற்றும் 97007 மேலும் வாசிக்க …..

அறிவியல் கொரானா சமூகம் தேசியம் மருத்துவம்

அலோபதி மருத்துவர்கள் கடவுளின் தூதுவர்கள்: பாபா ராம்தேவ் திடீர் பல்டி

அலோபதி மருத்துவர்கள் கடவுளின் தூதுவர்கள், உண்மையில் மருத்துவர்கள் பூமிக்குக் கிடைத்த ஆசீர்வாதம் என்று திடீரென பல்டியடித்துள்ளார் பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவ். பதஞ்சலி நிறுவனரான பாபா ராம்தேவ், பாஜக ஆதரவாளராக தன்னை முன்னிறுத்தி வருகிறார். அதேபோல் பதஞ்சலி நிறுவனத்தை பாஜக அரசு அதிகளவில் விளம்பரப்படுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது. கொரோனா முதல் அலையின் போது உலகமே தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் தீவிரமாக இயங்கி வந்த வேளையில், கொரோனா வைரஸை எதிர்க்கும் எனக் கூறி கொரோனியல் என்ற மருந்தை அறிமுகம் மேலும் வாசிக்க …..

அரசியல் சமூகம் தேசியம் மருத்துவம்

தாடியை வளர்த்தது போதும்; நாட்டின் வளர்ச்சியை முன்னேற்றுங்க: பிரதமருக்கு டீ கடைக்காரர் கடிதம்

பிரதமர் மோடிக்கு 100 ரூபாய் மணி ஆர்டரில் அனுப்பி, பிரதமர் மோடி தனது தாடியை ஷேவ் செய்துகொண்டு, அவர் நாட்டின் வளர்ச்சியை வளர்க்க வேண்டிக் கொள்கிறேன் என மகாராஷ்டிரா டீ கடைக்காரர் கடிதம் எழுதியுள்ளார். கொரோனா தொற்று காரணமாக கடந்த ஓராண்டுக்கும் மேலாக நாடு முழுவதும் பல்வேறு நிலைகளில் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் தொழில்கள் முடங்கி, வேலையின்மை வரலாறு காணாத அளவில் அதிகரித்தது. கொரோனா தொற்றாலும், அதைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்காலும் கோடிக்கணக்கான மக்கள் வறுமைக்கு மேலும் வாசிக்க …..

கொரானா சமூகம் தேசியம் மருத்துவம்

ஜூன் 21 ஆம் தேதி முதல் மாநிலங்களுக்கு இலவச தடுப்பூசி- பிரதமர் மோடி

ஒன்றிய அரசு ஜூன் 21 ஆம் தேதி முதல் மாநிலங்களுக்கு இலவசமாக தடுப்பூசி வழங்கும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா தொற்றின் 2வது அலை மக்களை கடுமையாக பாதித்து வருகிறது. நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர். தடுப்பூசி மற்றும் முழு ஊரடங்கு நடவடிக்கை தீவிரமானதையடுத்து கொரோனா வைரஸ் தொற்று பரவல் தற்போது சீராக குறைந்து வருகிறது. மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் மாநில அரசுகள் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன. ஆனால் ஒன்றிய அரசு போதுமான மேலும் வாசிக்க …..

கொரானா சமூகம் தேசியம்

தடுப்பூசி சான்றிதழில் நீக்கப்பட்ட பிரதமர் மோடி படம்- முதல்வர் மம்தா அதிரடி

மேற்கு வங்கத்தில் கொரோனா தடுப்பூசி சான்றிதழில் இடம்பெற்றிருந்த பிரதமர் மோடியின் படம் நீக்கப்பட்டு, எச்சரிக்கையாக இருங்கள், பாதுகாப்பாக இருங்கள் என்ற வாசகங்கள் பெங்காலி மற்றும் ஆங்கிலத்தில் இடம் பெற்றுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் இண்டாவது அலை தீவிரமடைந்ததை அடுத்து பொதுமக்களுக்குத் தடுப்பூசிகள் வேகமாகச் செலுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீட்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கு ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால், ஒன்றிய அரசு தடுப்பூசி திட்டத்தைச் சரியாக நடைமுறைப்படுத்தாததால், தற்போது மேலும் வாசிக்க …..

அரசியல் கொரானா தமிழ்நாடு தேசியம்

கோவின் இணையதளத்தில் தமிழ்மொழி புறக்கணிப்பு; வலுக்கும் கண்டனக் குரல்கள்

கொரோனா தடுப்பூசி பதிவு செய்யும் கோவின் இணையதளத்தில் மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்பட பல மொழிகள் இடம்பெற்றுள்ள நிலையில், அதில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டிருப்பது சர்ச்சையாகி உள்ளது. ஒன்றிய பாஜக அரசு அமைந்தது முதல் இந்தி மற்றும் சமஸ்கிருதத்தை திணிப்பதிலும், செம்மொழி அங்கீகாரம் பெற்ற தமிழ் மொழியை ஒவ்வொரு சமயங்களிலும் புறக்கணிப்பதையே குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறது. தற்போது இந்தியாவில் கொரோனா பெருந்தொற்றின் 2வது அலை பரவல் குறையத் தொடக்கி உள்ளது. கொரோனா பரவலை தடுக்க மேலும் வாசிக்க …..