ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் சமூகத்தின் மேம்பாடு வேண்டி திறந்த மனதுடன் உண்மையை தேடி விரும்பும் எழுத்தாளர்களின் சங்கம கூடலே splco.me. இது சமூக வலைதளத்தின் எழுத்தாளர்களின் கன்னி முயற்சியின் தொகுப்பு.
சமூகம் தமிழ்நாடு

தமிழ்நாட்டில் புதிய 19 நகராட்சிகள்; மாநகராட்சியாக உயரும் கும்பகோணம்

தமிழ்நாட்டில் 19 புதிய நகராட்சிகளையும், கும்பகோணம் நகராட்சியை தமிழ்நாட்டில் 19 புதிய நகராட்சிகளையும், கும்பகோணம் நகராட்சியை மாநகராட்சியாகவும் உருவாக்குவதற்கான உத்தரவை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் மக்கள் தொகை, பரப்பளவு உள்ளிட்டவை கொண்டு பேரூராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சிகளாக பிரிக்கப்படுகின்றன. அதன்படி தற்போது 15 மாநகராட்சிகள், 120 நகராட்சிகள், 528 பேரூராட்சிகள் உள்ளன. இவற்றின் வளர்ச்சியை பொருத்து பேரூராட்சிகள் நகராட்சிகளாகவும், நகராட்சிகள் மாநகராட்சிகளாகவும், தரம் உயர்த்தப்படுகின்றன. ஒரு சில பேரூராட்சிகளை ஒன்றிணைத்து நகராட்சிகளாகவும் அறிவிக்கப்படுகின்றன. அந்த வகையில் தமிழ்நாட்டில் மேலும் வாசிக்க …..

உலகம்

ஆப்கானிஸ்தான் மசூதியில் மீண்டும் பயங்கர குண்டு வெடிப்பு: 32 பேர் பலி

ஆப்கானிஸ்தானின் கந்தஹார் நகரில் உள்ள மசூதியில் வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகையின்போது நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் இதுவரை 32 பேர் பலியாகி உள்ளனர். ஆப்கானிலிருந்து அமெரிக்க, நேட்டோ படைகள் வெளியேறியபின் அந்நாட்டைத் தங்கள் பிடிக்குள் தலிபான்கள், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக அரசை அகற்றி இடைக்கால இஸ்லாமிய எமிரேட் அரசை நிறுவப்போவதாக அறிவித்தனர். அதற்கான அமைச்சரவைப் பட்டியலையும் கடந்த செப்டம்பர் 8 ஆம் தேதி அறிவித்தனர். ஆப்கானின் பிரதமராக முல்லா முகமது ஹசன் அகுந்த், அவருக்குத் துணையாக முல்லா அப்துல் கனி மேலும் வாசிக்க …..

சமூகம் தமிழ்நாடு

வனத்துறையினரின் விடா முயற்சி- 21 நாட்களுக்கு பிறகு உயிரோடு சிக்கியது ஆட்கொல்லி டி23 புலி

வனத்துறையினரின் 21 நாட்கள் தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு, மசினகுடி வனப்பகுதியில் சுற்றி திரிந்த ஆட்கொல்லி டி23 புலி இன்று (15.10.2021) மயக்க ஊசி செலுத்தி உயிருடன் பிடிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த மசினக்குடி, சிங்காரா வனப்பகுதியில் சுற்றி திரிந்த டி23 புலி அடுத்தடுத்து 4 மனிதர்கள் மற்றும் 30-க்கும் அதிகமான கால்நடைகளை அடித்து கொன்றுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அந்த புலியை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டனர். மேலும் வாசிக்க …..

அறிவியல் தமிழ்நாடு தேசியம்

அப்துல் கலாமின் 90வது பிறந்த தினம்- ராமேஸ்வரம் நினைவிடத்தில் பொதுமக்கள் அஞ்சலி

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் 90வது பிறந்த தினத்தை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் உள்ள கலாம் நினைவிடத்தில் அவரது குடும்பத்தினர், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினர். முன்னாள் குடியரசு தலைவரும், ஏவுகணை நாயகன் பாரத ரத்னா அப்துல் கலாமின் 90வது பிறந்த தினம் இன்று (15.10..2021) நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு, ராமேஸ்வரம் பேக்கரும்பில் அமைந்துள்ள கலாமின் தேசிய நினைவகம் முழுவதும் வண்ண விளக்குகளாலும், கலாம் அடக்கம் செய்யப்பட்ட இடம் வண்ண மேலும் வாசிக்க …..

காஷ்மீர் தேசியம்

காஷ்மீரில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு: 2 ராணுவ வீரர்கள் பலி

காஷ்மீரில் பாதுகாப்புப் படை வீரர்களுக்கும், பயங்கரவாதிகளுக்கும் தொடர்ந்து நடைபெற்று வரும் துப்பாக்கிச் சூட்டில், கடந்த 4 தினங்களில் 2 ராணுவ அதிகாரிகள் மற்றும் 5 பாதுகாப்பு படை வீரர்கள் பலியாகி உள்ளனர். ஜம்மு- காஷ்மீரில் சமீப காலமாக அப்பாவி மக்களை குறி வைத்து பயங்கரவாதிகள் தொடர் தாக்குதலில் ஈடுபட்டனர். 5 தினங்களில் நடந்த வெவ்வேறு துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் காஷ்மீர் பண்டிட் உள்பட 7 பேரை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர். இதனைத்தொடர்ந்து பயங்கரவாதிகளை தேடும் வேட்டையில் பாதுகாப்புப் படை மேலும் வாசிக்க …..

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள் – 2021

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் Sr. Manager (Finance), Manager (Finance) & Jr. Executive (Finance) பணிக்கான பணியிடங்கள் வெளியிட்டுள்ளன

உலகம் குரல்கள் சமூகம் தேசியம்

பாகிஸ்தான், நேபாளத்தை விட மோசம்- உலக பட்டினிக் குறியீட்டில் 101வது இடத்தில் இந்தியா

அதிகமான மக்கள் பட்டினியால் வாடும் நாடுகளின் பட்டியலில் மொத்தமுள்ள 116 நாடுகளில் இந்தியா 101வது இடத்தில் உள்ளது. பாகிஸ்தான், நேபாளம், பங்களாதேஷைக்காட்டிலும் இந்தியா பின்தங்கியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Global Hunger Index எனப்படும் உலக பட்டினிக் குறியீடு (GHI) என்பது, ஊட்டச்சத்து குறைபாடு, குழந்தை எடை, குழந்தை வளர்ச்சி மற்றும் குழந்தை இறப்பு ஆகிய நான்கு காரணிகளை கொண்டு கணக்கிடப்படுகிறது. தற்போது 2021 ஆம் ஆண்டுக்கான உலக பட்டினிக் குறியீட்டை ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ளது. மேலும் வாசிக்க …..

கல்வி சமூகம் தமிழ்நாடு

கடலூரில் பள்ளிக்கு வராத மாணவருக்கு அடி, உதை.. ஆசிரியர் மீது 5 பிரிவுகளில் வழக்கு பாய்ந்தது

சிதம்பரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவரை, ஆசிரியர் சுப்பிரமணியம் சரமாரியாகத் தாக்கிய சம்பவம் சர்ச்சையானதை அடுத்து, அவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உட்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கொரோனா பாதிப்பு காரணமாக தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் கடந்த ஆண்டு முதலே பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டன. இந்தச் சூழலில் தற்போது கொரோனா பாதிப்பு 2 ஆம் அலை முழுமையாகக் கட்டுக்குள் வந்துள்ள மேலும் வாசிக்க …..

அரசியல் சமூகம் தேசியம் விவசாயம்

விவசாயிகள் கொடூர படுகொலை விவகாரம்- ராகுல் காந்தி தலைமையில் குடியரசுத் தலைவரிடம் மனு

லக்கிம்பூர் விவசாயிகள் படுகொலைக்கு நீதி கேட்டு ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் தலைவர்கள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து மனு அளித்துள்ளனர். யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆளும் உத்தரப் பிரதேச மாநிலம் லக்கீம்பூர் கெரியில் கடந்த வாரம் விவசாயிகள் மீது ஒன்றிய உள்துறை இணை அமைச்சரின் கார் ஏற்றி கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவத்தில், 8 பேர் பலியாகினார்கள். மேலும் இச்சம்பவத்தை வீடியோ எடுத்த பத்திரிகையாளர் ஒருவரும் உயிரிழந்துள்ளார். நாடு முழுவதும் இந்த சம்பவம் பெரும் மேலும் வாசிக்க …..