அரசியல் கட்சிகள் காங்கிரஸ் தேசியம் தொழில்கள் பாஜக வணிகம் வர்த்தகம்

பெட்ரோல்,டீசல் விலை உயர்வு: பிரதமருக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடிதம்

பாஜக ஆட்சிக்கு வந்து 7 ஆண்டுகள் ஆன பின்னரும் பெட்ரோல்,டீசல் விலை உயர்வுக்கு முந்தைய அரசு மீது குறை கூறுவது வேதனையளிக்கிறது என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்ட எரிபொருட்கள் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதுகுறித்து பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், “பாஜக மேலும் வாசிக்க …..

அரசியல் தமிழ்நாடு தேசியம் தொழில்கள் வணிகம் வர்த்தகம்

வரலாறு காணாத பெட்ரோல், டீசல் விலை உயர்வு; காங்கிரஸ் அரசே காரணம் என சொல்கிறார் மோடி

2013 ஆம் ஆண்டு பெட்ரோல், டீசல் விலை ரூ.7 வரை உயர்ந்ததற்கு அப்போதைய காங்கிரஸ் மத்திய அரசே காரணம் எனக் கூறிய நிர்மலா சீதாராமன், 2021 ஆம் ஆண்டு பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கும் அரசுக்கும் தொடர்பில்லை எனக் கூறிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு ஆட்சி அமைந்ததில் இருந்து சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை நிலவரங்களின் அடிப்படையில் இந்தியாவில் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலை மாற்றியமைக்கப்படுகிறது. மேலும் வாசிக்க …..

தேசியம் தொழில்கள் வணிகம் வேலைவாய்ப்புகள்

தவறுக்கு மன்னிப்பு கோரி, ஐபோன் இந்திய நிறுவனத்தின் துணைத் தலைவரை நீக்கிய விஸ்ட்ரான்

ஊழியர்களுக்கு 8 மாதங்களாக சம்பளம் கொடுக்காததால் ஐபோன் உற்பத்தித் தொழிற்சாலை அடித்து நொறுக்கப்பட்ட விவகாரத்தில், விஸ்ட்ரான் நிறுவனம், ஐபோன் நிறுவனத்தின் இந்திய துணைத் தலைவரை பணி நீக்கம் செய்து உத்தரவிட்டு உள்ளது. கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் இயங்கும் ஐபோன் தொழிற்சாலையை தைவான் நாட்டைச் சார்ந்த விஸ்ட்ரான் நிறுவனம் நடத்தி வருகிறது. இந்த நிறுவனத்தில் பணியாற்றி வரும் தொழிலாளர்களுக்கு கடந்த 8 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை. இதுதொடர்பாக தொழிற்சங்கங்கள் மூலம் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும், ஊதியம் மேலும் வாசிக்க …..

கர்நாடகா தொழில்கள் வணிகம்

8 மாதங்களாக சம்பள பாக்கி: ஆப்பிள் ஐ போன் தொழிற்சாலையை சூறையாடிய ஊழியர்கள்

கடந்த 8 மாதங்களாக ஊதியம் கொடுக்காததால் கர்நாடகா மாநிலம் கோலார் மாவட்டத்தில் செயல்பட்டு வந்த ஆப்பிள் ஐபோன் தொழிற்சாலையை ஊழியர்கள் சூறையாடியதால் பரபரப்பு ஏற்பட்டது. முன்னணி மொபைல் போன் நிறுவனமான ஆப்பிள் ஐ போன்கள் தயாரிக்கும் தைவான் நாட்டைச் சேர்ந்த விஸ்ட்ரான் தொழிற்சாலை கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் செயல்பட்டு வருகிறது. அங்கு பணிபுரியும் நூற்றுக்கணக்கான தொழிலாளர்களுக்கு கடந்த 8 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. தொழிற்சங்கங்கள் மூலம் ஊதியம் வழங்கக்கோரி பல கட்ட பேச்சுவார்த்தை மேலும் வாசிக்க …..

தேசியம் தொழில்கள் வணிகம் வர்த்தகம்

ஜிஎஸ்டி மோசடியில் ஈடுபட்ட 1.63 லட்சம் நிறுவனங்களின் பதிவுகள் ரத்து- மத்திய அரசு

ஜிஎஸ்டி வரி செலுத்துவதில் போலியான இன்வாய்ஸ் மூலம் மோசடி செய்த 1.63 லட்சம் நிறுவனங்களின் பதிவுகளை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பு முறையை அமல்படுத்தும் நோக்கத்தில் புதிய சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) மத்திய மோடி அரசு 2017ஆம் ஆண்டின் ஜூலை மாதத்தில் அமல்படுத்தியது. அரசுக்கு வருவாய் இருந்த போதிலும், ஜிஎஸ்டி நடைமுறையில் சிக்கல்கள் இருப்பதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தன. அதேபோல் வரி மோசடிகளும் அதிகமாக நடைபெற்று உள்ளன. இதையடுத்து, மேலும் வாசிக்க …..

அரசியல் தேசியம் தொழில்கள் வணிகம் வர்த்தகம்

இந்திய துறைமுக மசோதா 2020- பொதுமக்கள் கருத்தை இ-மெயிலில் கேட்கும் மத்திய அரசு

இந்திய துறைமுக மசோதா 2020 குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், இந்திய துறைமுகங்கள் சட்டம், 1908க்கு மாற்றாக தயாரிக்கப்பட்ட இந்திய துறைமுகங்கள் வரைவு மசோதா 2020-ஐ பொது மக்கள் ஆலோசனைக்காக மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்திய கடலோரப் பகுதிகளை அதிகம் பயன்படுத்துவதற்காக, துறைமுகத் துறையில் முதலீடுகளை ஈர்க்கும் வகையிலும், துறைமுகங்களில் மேலும் வாசிக்க …..

தேசியம் தொழில்கள் வணிகம்

தொழில் நிறுவனங்கள் புதிய வங்கி தொடங்க அனுமதிப்பது மோசமான யோசனை- ரகுராம் ராஜன்

பெரு நிறுவனங்களும், தொழில் நிறுவனங்களும் புதிதாக வங்கிகள் தொடங்க அனுமதிக்கலாம் என்று ரிசர்வ் வங்கி நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது மோசமான யோசனை என ரகுராம் ராஜன் கூறியுள்ளார். கடந்த வாரம் தனியார் வங்கிகளின் உரிமையாளர்கள், பங்குதாரர்கள் ஆகியோருக்கான நெறிமுறைகளை மறு ஆய்வு செய்வதற்காக பி.கே.மொஹந்தி தலைமையில் அமைக்கப்பட்ட குழு தனது பரிந்துரைகளை வழங்கியது. அதில் வங்கிகள் ஒழுங்குமுறை சட்டத்தில் உரிய திருத்தங்களை செய்த பிறகு பெருநிறுவனங்களும், தொழில் நிறுவனங்களும் வங்கிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கலாம் என நிபுணர் மேலும் வாசிக்க …..

அரசியல் தேசியம் தொழில்கள் வணிகம் வர்த்தகம்

40 வருடங்களில் இல்லாத அளவிற்கு மிக மோசமான ஜிடிபி சரிவு- ஆர்பிஐ எச்சரிக்கை

இந்தியா டெக்னிக்கல் ரிஷசன் எனப்படும் மாபெரும் பொருளாதார மந்தநிலையில் நுழைந்துவிட்டது என்று ஆர்பிஐ எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனா காரணமாக உலகம் முழுக்க பல நாடுகளின் பொருளாதாரம் சரிந்துள்ளது. அமெரிக்கா, ஜப்பான், பிரிட்டன் ஆகிய நாடுகளின் பொருளாதாரத்தை விட இந்தியாவின் பொருளாதரம் அதலபாதாளத்திற்கு சென்றுள்ளது. பல்வேறு பொருளாதார வல்லுநர்கள், நிபுணர்கள், ஆர்பிஐ அமைப்பின் துணை ஆளுநர் மைக்கல் பத்ரா அடங்கிய குழுவின் கூற்றுப்படி, 2020-21 நிதி ஆண்டில் இந்தியா அதிகாரபூர்வமாக டெக்னிக்கல் ரிஷசன் எனப்படும் மாபெரும் பொருளாதார மந்தநிலையில் மேலும் வாசிக்க …..

தொழில்கள் வணிகம்

வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிப்பு- மத்திய அரசு

வருமான வரி செலுத்துவதற்கான கால அவகாசம் 2021 ஜனவரி 31-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, வரி செலுத்துவோர் வருமானவரி சட்டம் மற்றும் ஒழுங்குமுறைகளை மேற்கொள்வதில் சவால்களை சந்தித்து வருவதால் வரிவிதிப்பு மற்றும் பிற சட்டங்கள் (சில விதிகளில் தளர்வுகள் அளிக்கும்) அவசரசட்டம் 2020 கடந்த 2020 மார்ச் 31-ம் தேதி கொண்டு வரப்பட்டது. அதன்படி பல்வேறு விஷயங்களில் காலவரம்புகள் நீட்டிக்கப்பட்டன. குறிப்பாக, 2018-19ஆம் ஆண்டுக்கான வருமான மேலும் வாசிக்க …..

தேசியம் தொழில்கள்

ஜிஎஸ்டி ‘நில் ரிட்டன்’ தாக்கல் செய்ய அலைபேசி மூலம் புது வசதி

சரக்கு மற்றும் சேவை வரி கணக்குத் தாக்கல் செய்ய, பில் ஏதும் இல்லாத நிலையில் மொபைல் போனில் குறுந்தகவல் வாயிலாக, ‘நில் ரிட்டன்’ தாக்கல் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.   சரக்கு மற்றும் சேவை வரிசெலுத்த மாதந்தோறும் ஜிஎஸ்டிஆர் 1 மற்­றும் ஜிஎஸ்டிஆர் – 3பி படிவங்கள் தாக்கல் செய்­யப்படுகின்றன.   இதில் ஜிஎஸ்டிஆர் – 3பி படிவத்தை மாதம்தோறும் 20ம் தேதிக்குள், தாமதக் கட்டணம் இன்றி தாக்கல் செய்யலாம்.   இந்நிலையில் தற்போது, ஜிஎஸ்டி கணக்குத் மேலும் வாசிக்க …..