அமெரிக்கா அறிவியல் உலகம் தொழில்நுட்பம் விண்வெளி

தரையிறங்கிய சில வினாடிகளில் வெடித்து சிதறிய ‘ஸ்பேஸ்எக்ஸ் ஸ்டார்ஷிப்’ ராக்கெட்

செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ‘ஸ்டார் ஷிப்’ ராக்கெட் சோதனையை நிறைவு செய்த சில நொடிகளில் வெடித்து சிதறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும் வகையில், எலான் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம், அடுத்த தலைமுறை ஸ்டார்ஷிப் ராக்கெட்டுகளை தயாரித்து சோதனை செய்து வருகிறது. அந்தவகையில் செவ்வாய் கிரகத்திற்கு பயணிக்கக்கூடிய ‘ஸ்டார் ஷிப்’ விண்கலத்தின் முன்மாதிரி நேற்று (மார்ச் 03) அறிமுகம் செய்யப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள போகா மேலும் வாசிக்க …..

அறிவியல் உலகம் தொழில்நுட்பம் விண்வெளி

செவ்வாயில் வெற்றிகரமாக தரையிறங்கிய நாசாவின் பெர்சவரன்ஸ் ரோவர்..

செவ்வாய் கிரகத்தில் ஆராய்ச்சிக்காக அனுப்பப்பட்ட நாசாவின் பெர்சவரனஸ் ரோவர் விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கிய நிலையில், முதல் புகைப்படத்தை அனுப்பியுள்ளது. செவ்வாய் கிரகத்தில் பழங்காலத்தில் உயிரினங்கள் இருந்ததா என்பது பற்றிய ஆய்வுக்காக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா ‘பெர்சவரன்ஸ்’ என்ற ரோவர் விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி வைத்தது. 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நாசா விஞ்ஞானிகள், பெர்சவரனஸ் ரோவர் விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பினர். இந்த விண்கலம் செவ்வாயின் மேற்பரப்பில் உள்ள மண், கல் மேலும் வாசிக்க …..

அறிவியல் தமிழ்நாடு தேசியம் தொழில்நுட்பம் விண்வெளி

12கி முதல் 60கி வரை எடை கொண்ட 100 செயற்கைக்கோள்கள்.. மாணவர்கள் அசத்தல்

12 கிராம் முதல் 60 கிராம் வரை எடை கொண்ட 100 செயற்கைக்கோள்களை 1,200 மாணவர்கள் இணைந்து கண்டுபிடித்து சாதனை புரிந்துள்ளனர். இதனை கின்னஸ் புத்தகம் மற்றும் ஆசிய புத்தக நிறுவனங்களும் பதிவு செய்ய உள்ளன. ராமேஸ்வரத்தில் உள்ள ஏபிஜே அப்துல்கலாம் சர்வதேச அறக்கட்டளை மற்றும் ஸ்பேஸ்ஜோன் இந்தியா மற்றும் மார்ட்டின் குரூப் கம்பெனி ஆகியவை இணைந்து மாணவர்கள் மூலம் செயற்கைகோள் கண்டுபிடிப்பு நிகழ்வு கடந்த 4 மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வந்தது. செயற்கைக்கோள் வடிவமைக்கும் பணியில் மேலும் வாசிக்க …..

உலகம் சமூகம் தொழில்நுட்பம்

வாட்ஸ்அப் புது பிரைவசி பாலிசி: டெலிகிராம், சிக்னல் செயலிகளுக்கு மாறும் பயனாளர்கள்

வாட்ஸ்அப் செயலியின் புதிய தனியுரிமைக் கொள்கைக்கு பயனர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு நிலவுவதால், ஏராளமான பயனாளர்கள் வாட்ஸ்அப் செயலிக்கு மாற்றாக சிக்னல், டெலிகிராம் செயலிகளுக்கு மாறுவது அதிகரித்துள்ளது. வாட்ஸ்அப் செயலி அதன் தனியுரிமைக் கொள்கைகள் (Privacy Policy) மற்றும் பயன்பாட்டு விதிகளை மாற்றி அமைத்து இருக்கிறது. செயலியில் தனியுரிமை கொள்கை மாற்றப்படுவதை பயனர்களுக்கு பாப்-அப் மெசேஜ் மூலம் வாட்ஸ்அப் தெரிவித்தது. இதனை பலர் படிக்காமலேயே புதிய விதிகளுக்கு ஒப்புதல் அளிக்க Agree ஆப்ஷனை தேர்வு செய்து இருக்கின்றனர். மேலும் வாசிக்க …..

அறிவியல் தமிழ்நாடு தொழில்நுட்பம் விண்வெளி

உலகின் எடை குறைந்த செயற்கைக்கோள்கள்; தஞ்சை மாணவன் சாதனை

தஞ்சை மாணவர் ரியாஸ்தீன் வடிவமைத்த உலகின் எடை குறைந்த செயற்கைக்கோள்களை 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் விண்வெளிக்கு நாசா அனுப்பவுள்ளது. தஞ்சாவூரை அடுத்த கரந்தை பகுதியை சேர்ந்த ரியாஸ்தீன், தஞ்சாவூரில் தனியார் கல்லூரியில் பிடெக் மெக்கட்ரானிக்ஸ் படித்து வருகிறார். இந்நிலையில் அமெரிக்காவை சேர்ந்த ‘I Doodle Learning’ நிறுவனம் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி கழகமான நாசா உடன் இணைந்து ‘cubes in space’ என்ற புதிய கண்டுபிடிப்புகளுக்கான போட்டியை ஆண்டுதோறும் நடத்துகிறது. மாணவர் ரியாஸ்தீன் 2019-2020க்கான மேலும் வாசிக்க …..

அறிவியல் தேசியம் தொழில்நுட்பம் விண்வெளி

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-50 ராக்கெட்

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து தகவல் தொடர்பு சிஎம்எஸ்-01 செயற்கைக்கோளுடன் பிஎஸ்எல்வி சி-50 ராக்கெட் இன்று மாலை 3.41 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் பறந்தது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், கடந்த மாதம் 7 ஆம் தேதி பிஎஸ்எல்வி சி-49, ராக்கெட் மூலம் இஓஎஸ்-01 என்ற நவீன ரக புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. இந்நிலையில், பூமி கண்காணிப்பு பணிக்காக 1,410 கிலோ எடை கொண்ட சிஎம்எஸ்-01 என்ற செயற்கைக் கோளை இஸ்ரோ வடிவமைத்து உள்ளது. பிஎஸ்எல்வி மேலும் வாசிக்க …..

தேசியம் தொழில்நுட்பம் வணிகம் வர்த்தகம்

எஸ்பிஐ, ஐசிஐசிஐ உள்ளிட்ட 4 வங்கிகளுடன் கைகோர்த்து வாட்ஸ்அப் பே

வாட்ஸ் அப் பே (WhatsApp Pay) தற்போது எஸ்பிஐ, எச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ, ஆக்சிஸ் வங்கிகளுடன் தனது செயலாக்கத்தை துவக்கி உள்ளதாக அறிவித்துள்ளது. நாடு முழுவதும் டிஜிட்டல் பண பரிவர்த்தனையில் போன் பே, கூகுள் பே, பேடிஎம் போன்றவற்றின் பயன்பாடுகள் அதிகரிதுள்ளன. வாட்ஸ் அப்பிலும் இத்தகைய பணப்பரிவர்த்தனை சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. ஃபேஸ்புக் நிறுவனத்தால் நடத்தப்படும் வாட்ஸ் அப் செயலி, கடந்த 2018ஆம் ஆண்டு, யுபிஐ மூலம் பணம் அனுப்பும் வசதியை இந்தியாவில் அறிமுகம் செய்தது. ஆனால், இதற்கான மேலும் வாசிக்க …..

அறிவியல் தேசியம் தொழில்நுட்பம் விண்வெளி

தொடங்கியது பிஎஸ்எல்வி சி-50 ராக்கெட் கவுன்ட்-டவுன்

தகவல் தொடா்புக்கான அதிநவீன சிஎம்எஸ்-01 செயற்கைக்கோளுடன் நாளை ஏவப்படும் பிஎஸ்எல்வி சி-50 ராக்கெடின் கவுன்ட்-டவுன் தொடங்கியது. தகவல் தொடா்புக்கான அதிநவீன சிஎம்எஸ்-01 செயற்கைக்கோள் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் 2வது ஏவுதளத்தில் இருந்து நாளை (டிசம்பர் 17) மாலை 3.41 மணிக்கு இந்த ராக்கெட் விண்ணுக்கு செலுத்தப்படுகிறது. எரிபொருள் நிரப்புதல் உட்பட ராக்கெட் ஏவுதலின் இறுதிகட்டப் பணிகள் தீவிரம் அடைந்துள்ளன. 25 மணி நேரம் கவுன்ட்-டவுன் இன்று (டிசம்பர் 16) பிற்பகல் 2.41 மணிக்கு மேலும் வாசிக்க …..

அரசியல் தேசியம் தொழில்நுட்பம் பாஜக

வலதுசாரி அமைப்புகளுக்கு ஆதரவாக ஃபேஸ்புக்- வால் ஸ்ட்ரீட் பகீர் குற்றச்சாட்டு

மத்திய பாஜக அரசின் ஆதரவு பெற்ற வலதுசாரி அமைப்புகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதை ஃபேஸ்புக் முற்றிலுமாகத் தவிர்த்துள்ளதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் மீண்டும் குற்றம் சாட்டியுள்ளது. இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிராக பஜ்ரங்தள் வன்முறைகளை தூண்டுகிறது என ஃபேஸ்புக்கின் உள் பாதுகாப்பு பிரிவினர் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். ஆனால், பஜ்ரங்தள் தொடர்புடைய ஃபேஸ்புக் கணக்குகள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதற்கு பஜ்ரங்தள் மீதான ஃபேஸ்புக் நிறுவனத்தின் அச்சமே காரணம் என வால் ஸ்ட்ரீட் ஜர்னல் குற்றம்சாட்டியுள்ளது. மேலும் வாசிக்க …..

அறிவியல் உலகம் தொழில்நுட்பம்

யூடியூப், ஜிமெயில் உள்பட கூகுள் சேவைகள் திடீர் முடக்கம்

இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளில் யூடியூப், ஜிமெயில் உள்பட கூகுள் சேவைகள் திடீர் முடக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. உலக அளவில் வலைதளத்தில் முதன்மையான நிறுவனம் கூகுள். அந்நிறுவனம் யூட்டியூப், ஜிமெயில், ஜிபே, கூகுள் மேப் உள்பட பல்வேறு செயலிகளை பயனாளர்களுக்கு வழங்கிவருகிறது. உலகம் முழுவதும் பல கோடி மக்கள் தினமும் செல்போன் மூலமாகவும், கணிணி மூலமாகவும் கூகுள் செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளில் செல்போனில் கூகுள் செயலிகள் மேலும் வாசிக்க …..