இந்திய கடற்படை கப்பலான ஐஎன்எஸ் விசாகப்பட்டினத்தில் இருந்து பிரம்மோஸ் சூப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணையை இந்தியா இன்று (11.1.2022) வெற்றிகரமாகச் பரிசோதனை செய்தது

பிரம்மோஸ் ஏவுகணை ரஷ்யா மற்றும் இந்தியாவின் கூட்டு திட்டமாக தயாரிக்கப்பட்டது. பிரம்மோஸ் ஏவுகணை துல்லியமாக இலக்கை சென்று தாக்குதல் பெயர் பெற்றது. சூப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணைகள் மிக வேகமாக தாக்கும்.

இந்த ஏவுகணையை நீர்மூழ்கிக் கப்பல், கப்பல் அல்லது விமானத்தில் இருந்து ஏவலாம். பிரம்மோஸின் வரம்பையும் அதிகரிக்கலாம். இது தவிர எதிரிகளின் ரேடாரில் இருந்து தப்பிக்கும் திறன் கொண்டது. மேம்படுத்தப்பட்ட இந்த ஏவுகணை கடலில் இருந்து கடலில் இருக்கும் இலக்கை தாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்திய கடற்படை கப்பலான ஐஎன்எஸ் விசாகப்பட்டினத்தில் இருந்து பிரம்மோஸ் சூப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணையை இந்தியா இன்று வெற்றிகரமாகச் பரிசோதனை செய்தது. சோதனையின்போது ”குறிப்பிட்ட இலக்காக வைக்கப்பட்ட கப்பலை துல்லியமாக ஏவுகணை தாக்கியது” என்று இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜனவரி 12 ஆம் தேதி, இந்தியா மற்றும் சீனா இடையே 14 வது சுற்று பேச்சுவார்த்தையில் பதற்றத்தை குறைப்பது குறித்து பேசப்படும் நிலையில், இந்த ஏவுகணை பரிசோதனை நடைபெற்றுள்ளது.

முன்னதாக, டிசம்பர் 8 ஆம் தேதி, வான் எல்லையை தாக்கவல்ல பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை ஒடிசா கடற்கரையில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைத் தளத்தில் இருந்து வெற்றிகரமாகச் சோதனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.