அரசியல் கட்சிகள் கேளிக்கை தமிழ்நாடு திமுக

திமுகவில் இணைந்த ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்கள்.. கலக்கத்தில் பாஜக

ரஜினி மக்கள் மன்றத்தைச் சேர்ந்த 4 மாவட்டச் செயலாளர்கள் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்து உள்ளனர். நடிகர் ரஜினிகாந்த், 2020 டிசம்பர் 3 ஆம் தேதி தனது ட்விட்டர் மூலம், 2021, ஜனவரியில் கட்சி தொடங்க உள்ளதாகவும், அதற்கான அறிவிப்பு டிசம்பர் 31 ஆம் தேதி வெளியிடுவதாகவும் அறிவித்தார். இந்நிலையில் ‘அண்ணாத்தே’ படப்பிடிப்றிக்காக ஹைதராபாத் சென்ற ரஜினிக்கு ரத்த அழுத்தத்தில் மாறுபாடு ஏற்பட்டதை அடுத்து, மருத்துவர்களின் அறிவுரைப்படி, உடல்நலம் பாதிப்பு காரணமாக, தான் கட்சி மேலும் வாசிக்க …..

இயற்கை சமூகம் தமிழ்நாடு விவசாயம்

திமுக ஆட்சி அமைந்ததும் கல்விக் கடன், விவசாயக் கடன், நகைக்கடன் தள்ளுபடி உறுதி- மு.க.ஸ்டாலின்

திமுக ஆட்சி அமைந்ததும், அனைத்து விவசாயிகளின் விவசாயக் கடன்கள், நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “தமிழர் திருநாளில் அனைவருக்கும் பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள். உலகின் அச்சாணியான உழவுத் தொழிலைப் போற்றும் தமிழர்களின் பண்பாட்டுத் திருவிழாவான பொங்கல் நன்னாளும், திருவள்ளுவர் ஆண்டுக் கணக்கின் தொடக்கமுமான தமிழ்ப் புத்தாண்டும் இணைந்து வரும் தை-1 தமிழர் திருநாளில் தமிழக மக்கள் அனைவருக்கும் மேலும் வாசிக்க …..

அதிமுக அரசியல் கட்சிகள் சமூகம் தமிழ்நாடு

செய்தியாளரின் மைக்கை தூக்கி வீசிய அமைச்சர் விஜயபாஸ்கர்- வலுக்கும் கண்டனங்கள்

செய்தியாளரின் மைக்கை தூக்கி வீசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு, பத்திரிகையாளர்கள், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட பலரும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதி எம்எல்ஏ ஆவார். சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஒவ்வொரு தொகுதி எம்எல்ஏக்களும், அமைச்சர்களும் தங்கள் தொகுதியில் மீண்டும் போட்டியிட பல்வேறு நலத்திட்ட உதவிகளை தீவிரமாக செய்து வருகிறார்கள். அந்தவகையில் அமைச்சர் விஜயபாஸ்கர் தனது விராலிமலை தொகுதியில் பொதுமக்களுக்கு தனது புகைப்படத்துடன் மேலும் வாசிக்க …..

அரசியல் கட்சிகள் சமூகம் தமிழ்நாடு திமுக பெண்கள்

பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகள் அனைவரும் கைதாகும் வரை போராட்டம் தொடரும்- திமுக கனிமொழி

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடைய அனைத்து நபர்களையும் கைது செய்யக்கோரி, திமுக சார்பில் இன்று மகளிரணிச் செயலாளர் கனிமொழி எம்.பி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பொள்ளாச்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய கனிமொழி எம்.பி., “தமிழகத்தில் பாலியல் கொடுமை, பெண் வன்கொடுமை அதிகரித்து வருகின்றது. பொள்ளாச்சி வழக்கில் பாதிக்கப்பட்டவரின் பெயர்களை காவல்துறையே கூறியது. இன்று வரை அந்த கும்பல் பாதிக்கப்பட்டவர்களை மிரட்டி வருகின்றனர். ஆளுங்கட்சியினர் தங்களை காப்பாற்றி கொள்ள வேண்டும் என நினைக்கின்றனர். அதிமுகவினருடனான ஆதாரங்கள் மேலும் வாசிக்க …..

உலகம் சமூகம் தமிழ்நாடு

யாழ்ப்பாணம் முள்ளிவாய்க்கால் நினைவு தூண் அகற்றமும்; பல்கலைக்கழக துணைவேந்தர் விளக்கமும்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு தூண் நள்ளிரவில் இடிக்கப்பட்டதால் போராட்டம் வெடித்துள்ளது. முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்ட போரில் உயிரிழந்த பல்கலை மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் நினைவாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்களால் இந்த நினைவிடம் அமைக்கப்பட்டது. இந்நிலையில் பல்கலைக்கழக துணைவேந்தரின் உத்தரவின் பேரில், முள்ளிவாய்க்கால் நினைவு தூண் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு இடித்து அகற்றப்பட்டது. இது பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் தமிழ் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அரசின் நடவடிக்கையை எதிர்த்து பல்கலைக்கழக வாயிலில் கூடிய பல்கலைக்கழக மேலும் வாசிக்க …..

அரசியல்

மத்திய அரசு பேச்சுவார்த்தை என்ற பெயரில் நாடகம் நடத்துகிறது; மு.க.ஸ்டாலின் தாக்கு

தடையை மீறி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 1600 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, 23 நாட்களாக டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக சென்னை வள்ளுவா் கோட்டம் அருகில் திமுக மற்றும் தோழமை கட்சிகள் சார்பில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், காவல்துறை அனுமதி தர மறுத்த நிலையில், தடையை மீறி மேலும் வாசிக்க …..

அரசியல் சமூகம் தமிழ்நாடு

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்து, கனிமொழி தலைமையில் ஆர்ப்பாட்டம்

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து திமுக மகளிர் அணிச் செயலாளரும், எம்பி.யுமான கனிமொழி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார். இதுகுறித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “15 நாள் இடைவெளிக்குள் இருமுறை கேஸ் சிலிண்டர் விலையை 100 ரூபாய் மத்திய பாஜக அரசு உயர்த்தியிருப்பதும், தொடர்ச்சியாக அதன் விலையை உயர்த்தி வருவதும், இந்தியக் குடும்பங்களின் வரவு செலவுக் கணக்கில் கடும் பற்றாக்குறை நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது. கொரோனா கொடுங்காலத்தில் மேலும் வாசிக்க …..

அதிமுக அரசியல் கட்சிகள் கல்வி சமூகம் தமிழ்நாடு திமுக

தனியார் மருத்துவக் கல்லூரியில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அதிரடி அறிவிப்பு வெளியிட்ட மு.க.ஸ்டாலின்

இட ஒதுக்கீட்டில் தனியார் மருத்துவக் கல்லூரியில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை திமுக ஏற்கும் என மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் மிகக் குறைவு. ஆனால் தனியார் மருத்துவக் கல்லூரியில் லட்சக்கணக்கான ரூபாய் கல்விக் கட்டணம் என்ற நிலையில், அரசு பள்ளிகளில் படித்து, இட ஒதுக்கீட்டில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ள பெரும்பாலான மாணவர்கள் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்தவர்களாக இருப்பதால் அவ்வளவுத் தொகையைக் கட்ட முடியாத மேலும் வாசிக்க …..

கல்வி சமூகம் தமிழ்நாடு தெலுங்கானா

தமிழக மருத்துவப் படிப்பு தரவரிசைப் பட்டியலில் முறைகேடு சர்ச்சை

தமிழக அரசு வெளியிட்டுள்ள மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியலில், தெலுங்கானாவை சேர்ந்த 34 பேர் இடம் பெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பிற மாநில தரவரிசை பட்டியலில் இடம்பெற்றுள்ள மாணவர்களின் பெயர்கள் தமிழக அரசின் தரவரிசைப் பட்டியலிலும் இடம் பெற்றிருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள் ஒதுக்கீடு இந்த ஆண்டு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்ட நிலையில், முதலாமாண்டு மேலும் வாசிக்க …..

கட்சிகள் கல்வி சமூகம் திமுக தேசியம் பாஜக

சமூக நீதியை, இடஒதுக்கீட்டை ஒழித்துக்கட்ட பாடுபடும் பாஜக அரசு- தலைவர்கள் கண்டனம்

மத்திய அரசின் 11 மருத்துவ கல்லூரிகளில் தனி நுழைவுத் தேர்வு நடத்த அனுமதித்துள்ளதால் நீட் தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், கல்வியாளர்களும் வலியுறுத்தியுள்ளனர். இது தொடர்பாக ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், நாடு முழுவதும் ஒரே மாதிரியான நுழைவுத் தேர்வு எனக் கூறி நீட்டைத் திணித்து விட்டு, மத்திய அரசின் மருத்துவக் கல்லூரிகளில் மட்டும் தனி நுழைவுத் தேர்வுக்கு மத்திய பாஜக அரசு அனுமதி மேலும் வாசிக்க …..