அரசியல் கட்சிகள் காங்கிரஸ் தேசியம் பாஜக புதுச்சேரி

கிரண்பேடி அதிரடி நீக்கம்; புதுச்சேரி ஆளுநரானார் தமிழிசை சவுந்தரராஜன்

புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநராக இருந்த கிரண்பேடி அதிரடியாக நீக்கப்பட்டு, தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூடுதலாக புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரியில், கடந்த 2016 ஆம் ஆண்டு மே மாதம் 28 ஆம் தேதி, புதுச்சேரி துணை நிலை ஆளுநராக நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி கிரண்பேடி சர்ச்சைகளின் நாயகியாக வலம் வந்தார். கவர்னர் கிரண்பேடியின் தன்னிச்சையான ஆய்வு, அதிகாரிகளை கவர்னர் மாளிகைக்கு அழைத்து மேலும் வாசிக்க …..

அறிவியல் தமிழ்நாடு தேசியம் தொழில்நுட்பம் விண்வெளி

12கி முதல் 60கி வரை எடை கொண்ட 100 செயற்கைக்கோள்கள்.. மாணவர்கள் அசத்தல்

12 கிராம் முதல் 60 கிராம் வரை எடை கொண்ட 100 செயற்கைக்கோள்களை 1,200 மாணவர்கள் இணைந்து கண்டுபிடித்து சாதனை புரிந்துள்ளனர். இதனை கின்னஸ் புத்தகம் மற்றும் ஆசிய புத்தக நிறுவனங்களும் பதிவு செய்ய உள்ளன. ராமேஸ்வரத்தில் உள்ள ஏபிஜே அப்துல்கலாம் சர்வதேச அறக்கட்டளை மற்றும் ஸ்பேஸ்ஜோன் இந்தியா மற்றும் மார்ட்டின் குரூப் கம்பெனி ஆகியவை இணைந்து மாணவர்கள் மூலம் செயற்கைகோள் கண்டுபிடிப்பு நிகழ்வு கடந்த 4 மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வந்தது. செயற்கைக்கோள் வடிவமைக்கும் பணியில் மேலும் வாசிக்க …..

கல்வி சமூகம் தமிழ்நாடு தெலுங்கானா

தமிழக மருத்துவப் படிப்பு தரவரிசைப் பட்டியலில் முறைகேடு சர்ச்சை

தமிழக அரசு வெளியிட்டுள்ள மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியலில், தெலுங்கானாவை சேர்ந்த 34 பேர் இடம் பெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பிற மாநில தரவரிசை பட்டியலில் இடம்பெற்றுள்ள மாணவர்களின் பெயர்கள் தமிழக அரசின் தரவரிசைப் பட்டியலிலும் இடம் பெற்றிருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள் ஒதுக்கீடு இந்த ஆண்டு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்ட நிலையில், முதலாமாண்டு மேலும் வாசிக்க …..

கல்வி தெலுங்கானா

10-ம் வகுப்பு மாணவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய தெலுங்கானா அரசு

தெலுங்கானாவில் 10-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது. கொரோனா பரவிவரும் நிலையில் தேர்வு நடத்துவது சாத்தியமற்றது, மாணவர்கள் நலனே முக்கியம் என முதல்வர் சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக 10-ம் வகுப்பு தேர்வுகள் நடைபெறாமல் உள்ளது. மேலும், 6 முதல் 9ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும் நாடு முழுவதும் தமிழகம், தெலங்கானா, கர்நாடகா உள்ளிட்ட மேலும் வாசிக்க …..

அரசியல்

தெலுங்கானா, ஆந்திராவுக்கு தனித்தனி தலைமை நீதிபதிகளும் பொறுப்பேற்பு

விஜயவாடாவில் உள்ள இந்திரா காந்தி நகராட்சி மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆந்திர மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக சாகரி பிரவின் குமார் பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுநர் இஎஸ்எஸ். நரசிம்மன் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.   இதை தொடர்ந்து ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களுக்கு தனித்தனி உயர்நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு இன்று முதல் அவை செயல்படத் துவங்கியுள்ளன.   இந்த நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகள் தனித்தனி இடங்களில் பொறுப்பேற்றுக் கொண்டனர். ஆந்திரா மாநிலத்துக்குத் தனியாக உயர் நீதிமன்ற கட்டிடம் அமராவதியில் மேலும் வாசிக்க …..

அரசியல் வாக்கு & தேர்தல்

சுருங்கும் பாஜக… விரியும் காங்கிரஸ்…

3 மாநில சட்டசபை தேர்தல்களில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இந்திய அரசியல் வரைபடத்தில் மீண்டும் காங்கிரசின் ஆதிக்கம் தொடங்கியது.   ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கர், தெலுங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநில சட்டசபைகளுக்கு நடந்த தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது.   இதன்படி மிசோரம் மாநிலத்தில் மிசோரம் தேசிய முன்னணியும், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியும் அதிக தொகுதிகளை கைப்பற்றியுள்ளது.   தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவின் டி.ஆர்.எஸ் கட்சி மேலும் வாசிக்க …..

குரல்கள் சமூகம் தமிழ்நாடு

ஊர்க்காவல் படையினர் 2500 பேர் போராட்டத்தில் குதித்தால் பரபரப்பு

சென்னையில் இன்று ஊர்க்காவல் படையினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.   தெலுங்கானா தேர்தலை முன்னிட்டு அங்கே தேர்தல் பணிக்காக 5 நாட்கள் ஊர்க்காவல் படையினர் அனுப்பப்பட்டார்கள். தெலுங்கானாவில் பணி முடிந்ததும் இன்று காலையில் சென்னை திரும்பிய அவர்கள் எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்திற்கு வந்தனர்.   5 நாள் வேலைக்காக ஒவ்வொருவருக்கும் 2,500 ரூபாய் கொடுக்க வேண்டும். அந்த சம்பளம் அவர்களுக்கு கொடுக்கப்படாததால் திடீரென சாலையில் அமர்ந்து போராட்டத்தை துவங்கினர். மதியம் துவங்கிய போராட்டம் இரவு வரை நீடித்தது. தமிழ்நாடு மேலும் வாசிக்க …..

ஆந்திரா குரல்கள் சமூகம் பெண்கள்

சாதி வெறி முற்றியதால் கருவுற்ற மகளின் கண் முன்னே காதல் கணவரை கொடூர முறையில் கொலை செய்தவர் கைது

தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் மரியாளகுடா பகுதியை சேர்ந்தவர் பிரனய்குமார் (வயது22). இருவரும் அதே பகுதியை சேர்ந்த தொழில் அதிபர் மாருதிராவ் மகள் அம்ருதாவும் பள்ளியில் ஒன்றாக படித்தபோதே காதலித்து வந்தனர். பிரனய்குமார் வேறு ஜாதியை சேர்ந்தவர் என்பதால் இந்த காதலுக்கு அம்ருதா வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் பிரனய்குமாரும், அம்ருதாவும் கடந்த மாதம் ஐதராபாத்தில் காதல் திருமணம் செய்து கொண்டனர். மகள் காதல் திருமணம் செய்து கொண்டதால் மாருதி ராவ் கடும் ஆத்திரத்தில் இருந்தார். மேலும் வாசிக்க …..

ஆந்திரா சமூகம்

58 பேர் பலி பஸ் கவிழ்ந்தது பற்றி நடத்துனர் வெளியிட்ட பகீர்

தெலுங்கானாவில் ஏற்பட்ட பேருந்து விபத்து குறித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடத்துனர் பரமேஸ்வர் பரபரப்பு தகவல்களை வெளியிட்டுள்ளார். தெலுங்கானா மாநிலம் ஜகித்யாலா மாவட்டத்தில் உள்ள கொண்டகட்டு என்ற இடத்தில் இருந்து ஜகித்யாலாவுக்கு அம்மாநில அரசு போக்குவரத்து பஸ் ஒன்று நேற்று காலை சென்றுகொண்டிருந்தது. அந்த பஸ்சில் பெத்த பல்லி, ராம்சாகர், ஹிம்மத்பேட்டா உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பெண்கள், முதியோர், மாணவர்கள் என சுமார் 80 பேர் பயணித்தனர். அவர்களில் கொண்டகட்டு பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு மேலும் வாசிக்க …..

அரசியல் ஆந்திரா வாக்கு & தேர்தல்

சந்திரசேகர்ராவ் பாஜக அதிர்ச்சி தெலுங்கானாவில் காங்கிரஸ் தெலுங்கு தேசம் கூட்டணி

தெலுங்கானா மாநில மந்திரிசபையின் சிபாரிசை ஏற்று, அம்மாநில சட்டசபை கலைக்கப்பட்டது. அதனால், அங்கு இந்த ஆண்டுக்குள் சட்டசபை தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கார் மற்றும் மிசோரம் மாநிலங்களில் இறுதியில் தேர்தல் நடக்க உள்ளது, அப்போது தேர்தல் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அங்குள்ள நிலையை ஆய்வு செய்ய தேர்தல் ஆணையம் குழுவை அமைத்துள்ளது. இதனால் தெலுங்கானா சட்டசபையை கலைப்பது தொடர்பான பரிந்துரையை சமர்பித்த இடைக்கால முதல்வராக சந்திரசேகர் ராவ் தொடர்கிறார். தெலுங்கானாவில் மேலும் வாசிக்க …..