Wednesday, October 27th, 2021

Category: பெண்கள்

பாம்பை கடிக்க வைத்து மனைவியை கொன்ற வழக்கு- கணவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

கேரளாவில் பாம்பை கடிக்க வைத்து மனைவியை கொன்ற நபருக்கு 17 ஆண்டு ஜெயில், இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் ரூ. 5 லட்சம் அபராதம் விதித்து கொல்லம் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் அஞ்சல் பகுதியை சேர்ந்த விஜய சேனன் என்பவரின் மகள் உத்ரா...

90 வயதில் ஊராட்சி மன்றத் தலைவர் பதவி- உள்ளாட்சித் தேர்தல் சுவாரஸ்யங்கள்

நெல்லையில் திமுக சார்பாக போட்டியிட்ட 90 வயது மூதாட்டி பெருமாத்தாள், தன்னை எதிர்த்த அனைவரின் டெபாசிட்டையும் காலி செய்து ஊராட்சி மன்றத் தலைவராக வெற்றி பெற்றுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9...

21 வயது பொறியல் பட்டதாரி பெண் பஞ்சாயத்துத் தலைவர் தேர்தலில் வெற்றி

தென்காசி மாவட்டம் கடையம் ஒன்றியம் வெங்கடாம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் தேர்தலில் 21 வயது பொறியல் பட்டதாரி பெண் சாருலதா வெற்றி பெற்றுள்ளது அப்பகுதி மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில்...

பாலியல் வழக்கில் 20 வருட சிறை தண்டனை பெற்ற சாமியார்; கொலை வழக்கிலும் அதிரடி தீர்ப்பு

சாமியார் குர்மீத் ராம் ரஹீம், பாலியல் வழக்கில் 20 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து வரும் நிலையில், மேலாளர் ரஞ்சித் சிங் கொலை வழக்கில் சாமியாரை ஹரியானா சிபிஐ சிறப்பு நீதிமன்றம் குற்றவாளி என தீர்ப்பு வழங்கியுள்ளது. ஹரியானா மாநிலம் சிர்சாவில் தேரா சச்சா சவுதா என்ற...

3.30 லட்சம் குழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை: பிரான்ஸை உலுக்கிய 2,500 பக்க அறிக்கை

பிரான்ஸ் நாட்டில் கடந்த 70 ஆண்டுகளில் சுமார் 3.30 லட்சம் குழந்தைகள் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகியுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. பிரான்ஸ் நாட்டில் உள்ள கத்தோலிக்க தேவாலயங்களில் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை குறித்து ஆய்வு ஒன்றை சுயாதீன விசாரணைக்குழு நடத்தியுள்ளது. Jean Marc Sauve என்பவர்...

மாணவியின் தாயாருக்கு பாலியல் தொல்லை; சிவசங்கர் பாபா மீது மேலும் 2 போக்சோ வழக்குகள்!

சுஷீல் ஹரி பள்ளியில் படித்த முன்னாள் மாணவியின் தாயார் கொடுத்த புகாரில், பாலியல் வழக்கில் கைதாகி சிறையில் உள்ள சிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டத்தின் கீழ் மேலும் 2 வழக்குகளை சிபிசிஐடி காவல்துறையினர் பதிவு செய்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் இயங்கி வரும் சுஷில் ஹரி...

மன்னிப்பு கேட்டால் சரியாகிவிடுமா.. எஸ்வி.சேகர் மீது நீதிமன்றம் கடும் தாக்கு

பெண் பத்திரிகையாளர்கள் குறித்து தரக்குறைவான கருத்தை பகிர்ந்த நடிகர் எஸ்.வி.சேகர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை மறுப்புத் தெரிவித்துள்ளது. பாஜக பிரமுகரும் நடிகருமான எஸ்.வி.சேகர் கடந்த 2018 ஆம் ஆண்டு பெண் பத்திரிகையாளர்கள் பணிபுரிவது குறித்து தரக்குறைவான கருத்தை...

குழந்தையை கொடூரமாக தாக்கிய தாய்; காதலனை பிடிக்க விரைந்தது தனிப்படை!

தாயே தனது 2 வயது மகனை மிருகத்தனமாகத் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியதையடுத்து, கொலை ஆகாத மரணம் விளைவிக்கும் குற்றம் செய்ய முயற்சி உள்ளிட்ட 3 பிரிவுகளில் தாய் துளசி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே மணலபாடி மதுரா...

கே.டி.ராகவனின் பாலியல் வீடியோ சர்ச்சை; அண்ணாமலை பேரம் பேசியதாக மதன் வெளியிட்ட ஆதாரம்!

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் ஒப்புதலுடன் தான் கே.டி.ராகவன் குறித்த சர்ச்சைக்குரிய பாலியல் வீடியோவை, தான் வெளியிட்டதாக யூடியூபர் மதன் தெரிவித்துள்ளது சர்ச்சையாகி உள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை பாஜகவின் மாநில பொதுச்செயலாளர் கே.டி.ராகவன் இடம்பெற்றதாகக் கூறப்படும் சர்ச்சைக்குரிய வீடியோ ஒன்றை மதன் ரவிச்சந்திரன் என்ற யூடியூபர் தனது...

பாடத்திட்டத்தில் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் நீக்கம்.. சர்ச்சையில் டெல்லி பல்கலைக்கழகம்

டெல்லி பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தில் இருந்த தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் நீக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன. புதிய கல்விக் கொள்கையை நிறுவுவது தொடர்பாக தேசிய பல்கலைக்கழகங்கள் தற்போது முடிவு செய்து வருகின்றன. இந்த வரிசையில் டெல்லி பல்கலைக்கழகம் வரும் கல்வியாண்டில் (2022-23) புதிய கல்விக் கொள்கையை...