அரசியல் இயற்கை தேசியம் விவசாயம்

விவசாய சங்கங்கள்- மத்திய அரசு இடையே 9 ஆம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி

டெல்லியில் போராடும் விவசாயிகள் மற்றும் மத்திய அரசு இடையே நடந்த 9 ஆம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்து உள்ளது. மத்திய பாஜக அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் 52 நாட்களாக விவசாயிகள் போராடி வருகின்றனர். இதுவரை 8 கட்ட பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் விவசாயிகள், மத்திய அரசு இடையே உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டங்களை நடைமுறைப்படுத்த உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து, 4 பேர் கொண்ட பரிந்துரைக் குழுவை மேலும் வாசிக்க …..

அரசியல் இயற்கை உச்ச நீதிமன்றம் சட்டம் தேசியம் விவசாயம்

விவசாயிகள் போராட்டம்: உச்சநீதிமன்றம் அமைத்த குழுவில் இருந்து ஒருவர் விலகல்

தாம் எப்போதும் விவசாயிகள் பக்கம் நிற்கப்போவதாக அறிவித்து, வேளாண் சட்டங்கள் தொடர்பாக உச்சநீதிமன்றம் அமைத்த குழுவில் இருந்து பாரதிய கிசான் யூனியன் தலைவர் பூபிந்தர் சிங் மான் விலகி உள்ளார். மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி, டெல்லியில் தொடர்ந்து 51 நாட்களாக விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். விவசாயிகளுடன் மத்திய அரசு பல கட்ட பேச்சு வார்த்தைகள் நடத்தியும் தோல்வியில் முடிந்தது. இந்த போராட்டம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றுவந்த வழக்கில் மேலும் வாசிக்க …..

இயற்கை சமூகம் தமிழ்நாடு விவசாயம்

திமுக ஆட்சி அமைந்ததும் கல்விக் கடன், விவசாயக் கடன், நகைக்கடன் தள்ளுபடி உறுதி- மு.க.ஸ்டாலின்

திமுக ஆட்சி அமைந்ததும், அனைத்து விவசாயிகளின் விவசாயக் கடன்கள், நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “தமிழர் திருநாளில் அனைவருக்கும் பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள். உலகின் அச்சாணியான உழவுத் தொழிலைப் போற்றும் தமிழர்களின் பண்பாட்டுத் திருவிழாவான பொங்கல் நன்னாளும், திருவள்ளுவர் ஆண்டுக் கணக்கின் தொடக்கமுமான தமிழ்ப் புத்தாண்டும் இணைந்து வரும் தை-1 தமிழர் திருநாளில் தமிழக மக்கள் அனைவருக்கும் மேலும் வாசிக்க …..

அரசியல் இயற்கை தேசியம் விவசாயம்

வேளாண் சட்ட நகல்களை எரித்து போகி கொண்டாட்டம்- தமிழக விவசாயிகள்

போகி பண்டிகை நாளான இன்று (ஜனவரி 13), டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழக விவசாயிகள் வேளாண் சட்டங்களின் நகல்களை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதத்தின் கடைசி நாளும், பொங்கல் தினத்திற்கு முந்திய நாள், பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதேபோல் இந்த ஆண்டும் தமிழகம் முழுவதும் இன்று அதிகாலை முதல் பொதுமக்கள் தங்களது வீட்டு வாசலில், பழைய தேவையற்ற பொருட்களை எரித்து போகி மேலும் வாசிக்க …..

அரசியல் இயற்கை தேசியம் விவசாயம்

உச்சநீதிமன்றம் அமைக்கும் குழுவை ஏற்க மாட்டோம்; தொடரும் விவசாயிகள் போராட்டம்

உச்சநீதிமன்றம் அமைத்துள்ள எந்தவொரு குழுவையும் பேச்சுவார்த்தைக்காக நாங்கள் ஏற்க மாட்டோம்; மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்பப்பெறும் வரை போராட்டம் தொடரும் என்று விவசாய சங்கங்கள் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளன. மத்திய பாஜக அரசின் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி டெல்லியில் விவசாயிகள் 49 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளுடன் மத்திய அரசுடன் நடத்திய அனைத்து பேச்சு வார்த்தைகளும் தோல்வியில் முடிந்துள்ளன. இந்நிலையில் மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்கள் குறித்த வழக்கில், உச்சநீதிமன்றம், 4 மேலும் வாசிக்க …..

அரசியல் இயற்கை தேசியம் விவசாயம்

வேளாண் சட்டங்கள் குறித்து 4 பேர் குழுவின் நிலைப்பாடு: விவசாயிகளின் பார்வை

மத்திய பாஜக அரசின் வேளாண் சட்டங்களை திரும்பபெறக் கோரி டெல்லியில் போராடும் விவசாயிகள் தொடர்பான வழக்கை விசாரித்து வரும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே தலைமையிலான அமர்வு, விவசாயிகள் போராட்டத்துக்கு தீர்வுகாணவும், வேளாண் சட்டங்களை ஆய்வு செய்து அறிக்கை அளிக்கவும் 4 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது. வேளாண் சட்டத்திற்கு ஆதரவளிப்போர், எதிர்ப்போர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் இந்த குழு முன் ஆஜராகி தங்கள் தரப்பு கோரிக்கைகளை முன் வைக்க வாய்ப்பளித்திருக்கும் உச்சநீதிமன்றம், குழுவின் பரிந்துரை வரும் மேலும் வாசிக்க …..

அரசியல் இயற்கை உச்ச நீதிமன்றம் சட்டம் தேசியம் விவசாயம்

வேளாண் சட்டங்களுக்கு இடைக்காலத் தடை; 4 பேர் குழு அமைப்பு- உச்சநீதிமன்றம்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று புதிய வேளாண் சட்டங்களை அமல்படுத்துவதற்கு இடைக்கால தடை விதித்து, 4 பேர் கொண்ட குழுவையும் அமைத்து உத்தரவிட்டுள்ளது உச்சநீதிமன்றம். மத்திய பாஜக அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் 49வது நாட்களாக நடைபெற்று வரும் போராட்டத்தை கைவிடக் கோரி, மத்திய அரசு விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன் 8 கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு எட்டவில்லை. வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என்பதில் விவசாயிகள் உறுதியாக உள்ளனர். இந்நிலையில் டெல்லியில் போராடும் மேலும் வாசிக்க …..

இயற்கை தேசியம் விவசாயம்

வேளாண் சட்டங்களை திரும்பப்பெற முடியாது; தோல்வியில் முடிந்த 8ம் கட்ட பேச்சுவார்த்தை

வேளாண் சட்டங்களை திரும்பப்பெறப் போவதில்லை என்ற நிலைப்பாட்டில் மத்திய அரசு உறுதியாக இருப்பதால், இன்று (ஜனவரி 08) நடந்த 8 ஆம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநில விவசாயிகள் டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவவசாயிகளின் போராட்டம் இன்று 44வது நாளை எட்டியுள்ளது. மத்திய அரசுக்கும், விவசாய சங்கப் பிரதிநிதிகளுக்கும் மேலும் வாசிக்க …..

இயற்கை தேசியம் விவசாயம்

வேளாண் சட்டம் எதிர்ப்பு: டெல்லியில் விவசாயிகள் டிராக்டர்கள் பேரணி போராட்டம்

மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் சார்பில் இன்று டெல்லியின் பல்வேறு எல்லைகளில் 2,500 டிராக்டர்கள் மூலம் பேரணி ஊர்வலம் நடத்தினர். மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த 43 நாட்களாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடும் குளிர் மற்றும் மழையிலும் விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் இதுவரை 60 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு, விவசாய அமைப்புகளுடன் 7 கட்ட மேலும் வாசிக்க …..

இயற்கை உச்ச நீதிமன்றம் சட்டம் தேசியம் விவசாயம்

போராடும் விவசாயிகளை அகற்ற கோரிய வழக்கு ஜனவரி 11ல் விசாரணை- உச்சநீதிமன்றம்

வேளாண் சட்டங்கள் மற்றும் விவசாயிகள் போராட்டம் தொடர்பான அனைத்து வழக்குகளும் வரும் 11 ஆம் தேதி விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டத்திற்கு எதிராக டெல்லி எல்லையில் பல்வேறு மாநில விவசாயிகள் 43வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு, விவசாயிகளுடன் நடத்திய 7 கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்ததை அடுத்து விவசாயிகள் போராட்டத்தைத் தீவிரப்படுத்தி உள்ளனர். இதனைத்தொடர்ந்து வேளாண் சட்டத்தை முழுமையாக ரத்து செய்யாவிட்டால் வரும் மேலும் வாசிக்க …..