மணிரத்னம், ஜெயேந்திர பஞ்சாபகேசன் இருவரும் வழங்கியுள்ள ஒன்பது திரைப்படங்களின் ‘நவரசா’ எனும் தமிழ்த் தொகுப்பை நெட்ஃபிலிக்ஸ் அறிவித்துள்ளது.
கோபம், கருணை, தைரியம், வெறுப்பு, பயம், சிரிப்பு, காதல், அமைதி, வியப்பு ஆகிய ஒன்பது ரசங்களை (உணர்ச்சிகளை) அடிப்படையாகக் கொண்டவை இந்தப் படங்கள். இந்த ஒன்பது திரைப்படத் தொகுப்புகளை கொண்டிருக்கும் நவரசா நெட்ஃபிலிக்ஸ் 190 நாடுகளில் அறிமுகம் செய்கிறது.
இந்த தொகுப்பில் அரவிந்த் சுவாமி, பிஜோய் நம்பியார், கௌதம் வாசுதேவ் மேனன், கார்த்திக் சுப்பராஜ், கார்த்திக் நரேன், கே.வி. ஆனந்த், பொன்ராம், ரதிந்திரன் பிரசாத், ஹலிதா ஷமீம் என ஒன்பது இயக்குநர்கள் இயக்குகிறார்கள்.
நடிகர்கள் ரேவதி, நித்யா மேனன், பார்வதி திருவோத்து, ஐஸ்வர்யா ராஜேஷ், அரவிந்த் சுவாமி, சூர்யா, சித்தார்த், விஜய் சேதுபதி, பிரகாஷ்ராஜ், பிரசன்னா, கௌதம் கார்த்திக், அசோக் செல்வன், பூர்ணா, ரித்விகா, ரோபோ சங்கர் ஆகியோர் இதில் இணைந்துள்ளனர் .
40க்கும் மேற்பட்ட நடிகர்களும், பல நூறு படைப்பு வல்லுநர்களும், திரைப்படத் தொழில்நுட்ப வல்லுநர்களும் பங்கு கொண்டுள்ளனர். ஒளிப்பதிவாளர்கள் சந்தோஷ் சிவன், பாலசுப்பிரமணியம், மனோஜ் பரமஹம்சா, அபிநந்தன் ராமானுஜம், ஸ்ரேயாஸ் கிருஷ்ணா, ஹர்ஷ்வீர் ஓபராய், சுஜித் சரங், வி பாபு மற்றும் விராஜ் சிங் ஆகியோர் இணைந்துள்ளனர்.
ஏ.ஆர்.ரஹ்மான், டி இம்மான், கிப்ரான். அருல்டேவ், கார்த்திக், ரான் ஈதன் யோஹான், கோவிந்த் வசந்தா மற்றும் ஜஸ்டின் பிரபாகரன் ஆகியோர் ஆந்தாலஜிக்கு இசையமைக்கவுள்ளனர். பட்டுகோட்டை பிரபாகர், செல்வா, மதன் கார்க்கி மற்றும் சோமேதரன் ஆகியோர் எழுத்தாளர்களாக இணைந்துள்ளனர் .
இந்தத் திரைப்படங்களின் மூலம் கிடைக்கக் கூடிய வருமானத்தை, கொரோனா பெருந்தொற்று நோய்ப் பரவலினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருக்கும் தமிழ் சினிமா தொழிலாளர்களின் நல்வாழ்வுக்காக அவர்கள் பங்களிப்பார்கள் என கூறப்படுகிறது.