நயன்தாரா நடிப்பில் ஆர். ஜே.பாலாஜி, என்.ஜே.சரவணன் இணைந்து இயக்கிய ‘மூக்குத்தி அம்மன்’ படம் தீபாவளிக்கு ஓடிடியில் ரிலீஸாகும் என ஆர். ஜே.பாலாஜி அறிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பிரச்சனையால் தியேட்டர்கள் மாதக் கணக்கில் மூடப்பட்டுள்ளதால் தயாரிப்பாளர்கள் பலரும் படங்களை ஓடிடி தளத்தில் வெளியிட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் தயாரிப்பில் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘மூக்குத்தி அம்மன்’ படம் தீபாவளி பண்டிகை ஸ்பெஷலாக டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியாகவிருப்பதாக ஆர்.ஜே.பாலாஜி தெரிவித்துள்ளார்.

இப்படத்தில் ஒளிப்பதிவாளராக தினேஷ் கிருஷ்ணன், இசையமைப்பாளராக கிரிஷ் கோபாலகிருஷ்ணன், சண்டை இயக்குநராக ஸ்டண்ட் சில்வா, எடிட்டராக ஆர்.கே.செல்வா ஆகியோர் பணிபுரிகின்றனர். இப்படம் நயன்தாரா ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் வாசிக்க: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து மேலும் ஒரு நட்சத்திர ஆட்டக்காரர் விலகல்