அமெரிக்க அதிபர் ட்ரம்பை அந்நாட்டு ராணுவ தலைமையகமான பென்டகன் முதல்முறையாக எதிர்க்க தொடங்கியது டிரம்பிற்கு அதிர்ச்சியளித்துள்ளது.

அமெரிக்காவில் கடந்த 24ம் தேதி ஜார்ஜ் பிளாய்ட் என்ற கருப்பின இளைஞரை போலீசார் கைது செய்து அழைத்து செல்லும் போது கழுத்தை நெரித்தலில் சம்பவ இடத்திலேயே ஜார்ஜ் பலியானார். இந்த கொடூரத்திற்கு எதிராக 8வது நாளாக அமெரிக்காவில் மிக கடுமையான போராட்டங்கள் நடந்து வருகிறது.

இதனால் அங்கு ஏற்பட்ட போராட்டங்களை கட்டுப்படுத்தும் வகையில் தேசிய பாதுகாப்பு படைகள் குவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அமெரிக்காவில் போராட்டங்களை ஒடுக்கும் முயற்சியாக ராணுவத்தை களமிறக்க போவதாக டிரம்ப் எச்சரித்திருந்தார். Insurrection Act சட்டப்படி, வாஷிங்டன் உள்ளே ராணுவத்தை களமிறக்க ட்ரம்ப் முடிவு செய்து, இதற்காக 700 வீரர்கள் விமானம் மூலம் வாஷிங்டன் வந்தனர்.

மேலும் வாசிக்க: ஜார்ஜ் பிளாய்ட் மரணம்.. அதிர்ச்சியளித்த பிரேத பரிசோதனை அறிக்கை

ஆனால் இவர்கள் களமிறங்கிய 30 நிமிடத்தில் வாஷிங்டனுக்கு வெளியே இருக்கும் ராணுவ மையத்திற்கு மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டார்கள். ட்ரம்பின் இந்த திடீர் பின்வாங்குதலுக்கு காரணம், ராணுவத்தை களமிறக்குவது தொடர்பான அமெரிக்க அதிபர் ட்ரம்பின் முடிவை அந்நாட்டு ராணுவ தலைமையகம் பென்டகன் கடுமையாக எதிர்த்து உள்ளது.

அமெரிக்க மண்ணில் ராணுவத்தை கொண்டு வர கூடாது என்று பென்டகன் மிக உறுதியாக கூறி உள்ளது. பென்டகன் தலைவர் மற்றும் பாதுகாப்பு செயலாளர் மார்க் எஸ்பர், என்ன நடந்தாலும் ராணுவத்தை உள்ளே கொண்டு வர கூடாது என்று நேரடியாக எதிர்த்துள்ளார். ட்ரம்பை எப்போதும் ஆதரிக்கும் மார்க் எஸ்பர் முதல்முறை நேரடியாக ட்ரம்பை எதிர்த்து உள்ளது டிரம்பிற்கு அதிர்ச்சியளித்துள்ளது.

இந்நிலையில் ஜார்ஜ் பிளாய்ட் மரணத்திற்கு நீதி கேட்டு அமெரிக்காவில் அதிபர் ட்ரம்பிற்கு எதிராக போராட்டங்கள் நாளுக்கு நாள் தீவிரமாகி வருவது குறிப்பிடத்தக்கது.