குமுதம் பப்ளிகேஷன்ஸ் நிர்வாகம், மீண்டும் டாக்டர் ஜவஹர் பழனியப்பன் பொறுப்புக்கு செல்லும் வகையில் தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயம் தீர்ப்பளித்துள்ளது.

இந்தியா சுதந்திரம் பெற்ற வருடத்தில் 1947ல் குமுதம் குழுமத்தை ஆரம்பித்த எஸ்.ஏ.பி அண்ணாமலை அதனை தனது கடின உழைப்பிம் மூலம் ., புது விதமான யூத்திகள் மூலம்  குமுதத்தை இந்தியாவிலே அதிகமாக விற்கும் பத்திரிகையாக செய்தார். அவர்  மறைவுக்குப் பிறகு, குமுதம் குழுமத்தின் அனைத்துப் இதழ்களுக்கும் நிர்வாக ஆசிரியராகவும், உரிமையாளராகவும் அவரது மகன் டாக்டர் ஜவஹர் பழனியப்பன் பொறுப்பு வகித்தார். மேலும் இவர், அமெரிக்காவில் பிரபல இருதய சிகிச்சை மருத்துவராகவும் பணியாற்றுகிறார்.

இந்த சூழலில் தான்  குமுதத்தில் பதிப்பாளராக இருந்த பி.வி.பார்த்தசாரதியின் மகனான என்.வரதராஜனுக்கு ஓப்பந்தம் அடிப்படையில் 33.39% ஷேர்களை டாக்டர் ஜவஹர் பழனியப்பன்  வழங்கி அவரை  நிர்வாக இயக்குநராக பொறுப்பேற்க வைத்தார்.

ஆனால் மெதுவாக தனக்கு உள்ள அரசியல் அதிகாரம் தொடர்பின் மூலம்  குமுதம் நிர்வாகத்தை தன் வச படுத்திய வரதராஜன்  ஆசிரியர் குழு விவகாரங்களிலும் தலையிட்டு காங்கிரஸ் திமுக எதிர்ப்பு எடுக்க ஆளும் கட்சிகளில் ஆதரவை பெற்று ஒர் கட்டத்தில் டாக்டர் ஜவஹர் பழனியப்பன்  3,32,640  பங்குகலையும் செல்லாது என அறிவித்தார் .

குமுத நிறுவனர் அண்ணமலை மற்றும் ஆச்சி கோதை உடன் ஜவஹர் பழனியப்பன் ..

மேலும் , 2011 ஆண்டு வரதராஜன் நிர்வாகக் குழுவை கூட்டி, ஜவஹர் பழனியப்பன் தரப்புக்கு எதிராக சில திருத்தங்களைக் கொண்டு வந்தார். மேலும் வெளிநாட்டு பிரஜையான ஜவகர் இந்திய பத்திரிகை கம்பெனியில் பங்குகள் வைத்திருக்க சட்டத்தில் இடமில்லை; ஆகவே குமுதத்தில் அவருக்கு உரிமை இல்லை என்றும் ரிசர்வ் பாங்க் ஆப் இந்தியாவுக்கு வரதராஜன் தரப்பிலிருந்து புகார் அனுப்பப்பட்ட்து.

இதன் மூலம் பல சட்டபடிகளை ஏறினார்கள் டாக்டர் ஜவஹர் பழனியப்பன் மற்றும் அவரின் தாயார் ஆச்சி கோதை ..   இதனை விசாரித்த ரிசர்வ் பேங்க், கம்பெனி லா போர்ட், பெமா சட்டப்படி ஜவகர் வெளிநாட்டு பிரஜை ஆனபிறகு குமுதம் பங்குகளை வாங்கவில்லை; வாரிசு என்ற முறையில் கிடைத்த பங்குகள் வைத்திருக்க அவருக்கு உரிமை உண்டு என தீர்ப்பு வழங்கின.

ஆனால் தனக்கு பாஜகவில் உள்ள தொடர்பின் மூலம் அவைகள் பெட்டிசன் மேல பெட்டிசன் போட்டு தாமத படுத்தி வந்தார் .. இதனால்  வரதராஜனின் நிர்வாக திருத்தங்களுக்கு எதிராக ஜவஹர் பழனியப்பனும், அவரது தாயார் கோதை ஆச்சியும் சென்னையில் உள்ள தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

பிரத்மர் மோடியுடன் அவரின் அதரவு பத்திரிகையாக குமுதத்தை மாற்றிய வரதராஜன்

இந்த வழக்கு தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாய சென்னை அமர்வில் தலைவர் பி.எஸ்.வி.பிரகாஷ் குமார், தொழில்நுட்ப உறுப்பினர் எஸ்.விஜயராகவன் முன் விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயம் பிறப்பித்துள்ள தீர்ப்பில் டாக்டர் ஜவஹர் பழனியப்பன் வசம் தான் பெரும் பங்கு எனவும் அதனால் இனி அவருகே அந்த நிறுவனம் சொந்தம் எனவும் சொல்லியுள்ளது

குமுதம் குழுமத்தின் பெருவாரியான 64.73%  பங்குகளை ஜவஹர் பழனியப்பனும், அவரது தாயார் கோதை 1.88% பங்குகளயும்  வைத்துள்ளனர். எனவே, அவர்களின் பங்குகளை தன்னிச்சையாக ரத்து செய்து வரதராஜன் கொண்டு வந்த திருத்தங்கள் சட்டவிரோதமானது. எனவே செல்லாது என அதிரடியாக தீர்ப்பு கூறியது தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயம்

அது மட்டும் மல்லாமல் .மனுதாரரான ஜவஹர் பழனியப்பன் மற்றும் அவரது தாயாரின் சட்ட ரீதியிலான உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளன எனவும் .,

மேலும் குமுதம் பப்ளிகேஷன்ஸ் சார்பில் ஜவஹர் பழனியப்பன், கோதை ஆகியோர் தங்களுக்குள்ள பங்குகளின் அடிப்படையில் 2 பேரை கூடுதல் இயக்குநர்களாக பரிந்துரைக்கலாம் எனவும்.,

மேலும் தற்போது குமுதம் பப்ளிகேஷன்ஸ் குழுவுக்கு புதிய தலைவரை நியமிப்பது அவசியம் என்பதால் தற்காலிக தலைவராக தேசிய கம்பெனி சட்ட வாரிய முன்னாள் துணைத் தலைவரான கே.கே.பாலுவை 6 மாத காலத்துக்கு நியமிக்கிறோம் என்றும் . அவர் நிர்வாகக் குழு மற்றும் ஆண்டு பொதுக்குழுவைக் கூட்டி இதுதொடர்பான மற்ற முடிவுகளை எடுக்க வேண்டும் என்று தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயம் கூறியுள்ளதால் அதிர்ச்சியில் இருக்கிறாம் புறவாசல் வழியே குமுதத்தின் நிர்வாகத்தை பறித்த வரதராஜன் மற்றும் அவரின் குடும்பத்தினர்கள் .