தமிழகத்தில் பிப்ரவரி 8 ஆம் தேதி முதல் 9 மற்றும் 11 ஆம் வகுப்பு பள்ளிகள் மற்றும் இளநிலை, முதுநிலை படிப்புகளுக்கான அனைத்து வகுப்புகளும் தொடங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

கொரானா வைரஸ் பரவுவதை தடுக்க தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரங்கு பிப்வரி 28 ஆம் தேதி வரை நீட்டிக்கப்ட்டுள்ளது. கடந்த 9 மாதங்களாக செயல்படாமல் இருந்த பள்ளிகள் கடந்த மாதம் முதல் செயல்பட தொடங்கின. முதற்கட்டமாக பொதுத்தேர்வை சந்திக்கும் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட்டன.

இந்நிலையில் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், 8.2.2021 முதல் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, 9 மற்றும் 11 ஆம் வகுப்புகள் தொடங்கும். அம்மாணவர்களுக்கென விடுதிகளும் செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது.

இதேபோல் கலை, அறிவியில், தொழில்நுட்பம், பொறியியல், வேளாண்மை, மீன்வளம், கால்நடை உள்ளிட்ட அனைத்து கல்லூரிகள் / பல்கலைக் கழகங்களில் இளநிலை, முதுநிலை படிப்புகளுக்கான அனைத்து வகுப்புகளும் 8.2.2021 முதல் துவங்கும். அம்மாணவர்களுக்கான விடுதிகளும் செயல்பட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

தமிழகம் முழுவதும் பெட்ரோல் பங்க்குகள் நேரக்கட்பாடுகள் இன்றி இயங்கலாம். வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நீச்சல் குளங்கள் செயல்படலாம்.

நாளை முதல் திரையரங்குகளில் 100 % இருக்கைகளை பயன்படுத்திக் கொள்ளலாம். அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் குறைதீர்க்கும் நாள் நிகழ்ச்சிகளை நடத்தலாம். ராமேஸ்வரத்தில் தீர்த்தமாடுதல் நிகழ்ச்சிக்கு அனுமதி உள்ளிட்ட பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியை தமிழக சுகாதாரத்துறையின் கீழ் கொண்டு வந்தால் போதாது; தொடரும் போராட்டம்