சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியை தமிழக சுகாதாரத்துறையின் கீழ் கொண்டு வந்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதனால் போராட்டம் முடிவுக்கு வந்துவிடும் என்று எதிர்பார்த்த நிலையில், மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழக சுகாதாரத்துறையின் கீழ் உள்ள தனியார் மற்றும் அரசு கல்லூரிகளின் கட்டணத்தை மருத்துவ கல்வி இயக்குனரகம் நிர்ணயம் செய்து வருகிறது. தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் 13,600 ரூபாய் என்ற கட்டணமும், அதேபோல அரசு பல் மருத்துவ கல்லூரிகளில் 11,610 ரூபாய் என்ற கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட ராஜாமுத்தையா மருத்துவக்கல்லூரி உள்ளது. இந்த கல்லூரி 2013 ஆம் ஆண்டு முதல் அரசு நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.

இந்த கல்லூரியை தமிழக அரசு ஏற்ற பின்பும் மாணவர்களிடம் அரசு கல்லூரிக்கு உரிய கட்டணம் வசூலிக்காமல் தனியார் கல்லூரிகளுக்கு இணையான கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதை கண்டித்தும் அரசு அறிவித்த கட்டணத்தை வசூலிக்க கோரியும், கல்லூரி மாணவ- மாணவிகள் கடந்த 52 நாட்களாக பல்வேறு கட்ட தொடர் போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவ- மாணவியர்கள் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மற்றும் ராஜா முத்தையா பல் மருத்துவக் கல்லூரிகளை தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக் கழகத்துடன் உடனடியாக இணைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

[su_image_carousel source=”media: 22007,22008,22009″ crop=”none” captions=”yes” autoplay=”3″ image_size=”full”]

இதனையடுத்து சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியை தமிழக சுகாதார துறையின் கீழ் கொண்டுவந்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இனி சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி, கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி என அழைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி அமைந்துள்ள 113.21 ஏக்கர் நிலம், மாணவர் விடுதி, ஆசிரியர் குடியிருப்புகளும் சுகாதாரத்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்படும் எனவும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் போராட்டம் முடிவுக்கு வந்துவிடும் என்று எதிர்பார்த்த நிலையில், மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கூறுகையில், தமிழக அரசின் உயர்கல்வித்துறையின் கீழ் இயங்கிவந்த ராஜாமுத்தையா மருத்துவக்கல்லூரியை அரசு தற்போது சுகாதாரதுறையின் கீழ் கொண்டுவந்து அரசாணையை வெளியிட்டுள்ளது.

ஆனால் அதில் மாணவர்களின் கல்விகட்டணம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் நாங்கள் படிக்கும் கல்லூரியில் அரசு மருத்துவ கல்லூரிக்கு உரிய கல்வி கட்டணம் வசூக்கப்படும் என்ற அறிவிப்பு வரும் வரை நாங்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று போராடும் மாணவ-மாணவிகள் கல்லூரி வளாகத்தில் அமர்ந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆடைகளோடு குழந்தையின் அந்தரங்க உறுப்பை தொடுவது பாலியல் குற்றமில்லையா.. உச்சநீதிமன்றம் கண்டனம்