தியேட்டர்களில் நாளை (பிப்ரவரி 01) முதல் 100% இருக்கைகளையும் பயன்படுத்த அனுமதி அளித்துள்ள மத்திய அரசு,  ஓடிடி படங்கள், தொடர்களுக்கன கட்டுப்பாடுகள் குறித்து விரைவில் வழிகாட்டுதல் வெளியிடப்படும் எனவும் அறிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வரும் நிலையில், ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை மத்திய அரசு அறிவித்து வருகிறது. அந்த வகையில் தியேட்டர்களில் கூடுதல் பார்வையாளர்களை அனுமதிப்பது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

இதுகுறித்து மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியதாவது, “திரையரங்குகளில் பிப்ரவரி 01 ஆம் தேதி முதல் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி 100% இருக்கைகளையும் பயன்படுத்திக்கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது.

திரையரங்குகளில் மாஸ்க் அணிவது, உடல் வெப்ப பரிசோதனை செய்வது கட்டாயம். தியேட்டர் டிக்கெட் முன்பதிவில் ஆன்லைன் முறையை ஊக்குவிக்க வேண்டும்.

மேலும் ஓடிடியில் வெளியாகும் சில தொடர்கள், படங்கள் மீது அரசுக்கு பல புகார்கள் வருகின்றன. எனவே, ஓடிடி படங்கள், தொடர்களுக்கன கட்டுப்பாடுகள் குறித்து விரைவில் வழிகாட்டுதல் வெளியிடப்படும்” என்று கூறியுள்ளார்.

பிப்ரவரி 8 ஆம் தேதி முதல் 9, 11 ஆம் வகுப்புகள் மற்றும் கல்லூரிகள் திறப்பு: தமிழக அரசு