டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ‘தீவிரவாத எதிர்ப்பு’ உள்ளிட்ட 3 புதிய பாடத்திட்டங்களுக்கு நிர்வாகக் குழு அனுமதி அளித்துள்ளதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக நிர்வாகக் குழு ஆகஸ்ட் 17 ஆம் தேதி ஆய்வு கூட்டம் நடத்தியது. அதனைத்தொடர்ந்து ‘தீவிரவாத எதிர்ப்பு’ உள்ளிட்ட சர்ச்சைக்குரிய 3 புதிய பாடத்திட்டங்களுக்கு ஜேஎன்யு நிர்வாகக் குழு அனுமதி வழங்கியுள்ளது.
இதுகுறித்து ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”இந்த ஆண்டு புதிதாக ‘தீவிரவாத எதிர்ப்பு’, ‘இருபத்தியோராம் நூற்றாண்டில் இந்தியாவின் சர்வதேசப் பார்வை’, ‘சர்வதேச உறவுகளில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவம்’ ஆகிய பாடத்திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல ஆண்டுதோறும் வெபினார்/ செமினார்கள், கண்காட்சிகள், கருத்தரங்குகள், தீவிரவாதச் செயல்பாடுகளில் இருந்து தப்பிப் பிழைத்தவர்கள் மூலம் உண்மையான நிகழ்வுகளை மீண்டும் தெரிவித்தல் மற்றுல் பல செயல்பாடுகள் மூலம் தீவிரவாதத்தால் லட்சக்கணக்கான இந்தியர்கள் எவ்வாறு தங்களின் உயிரை இழந்தனர் என்பது குறித்து இளம் தலைமுறைக்குக் கற்பிக்கப்படும்” என்று குறிப்பிட்டுள்ளது.
ஆனால் ஜேஎன்யு நிர்வாகக் குழுவின் இந்த புதிய பாடத்திட்டத்திற்கு இதற்கு ஆசிரியர்கள், மாணவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது ஜிஹாதி தீவிரவாதம், அடிப்படைவாத மதம்சார் தீவிரவாதத்துக்கே வழிவகுக்கும் என்றும் அவர்கள் விமர்சித்துள்ளனர்.
பொறியியல் கலந்தாய்வு: தரவரிசைப் பட்டியல் மற்றும் கலந்தாய்வு தேதி அறிவிப்பு!