மும்பையில் சொகுசு கப்பலில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் (Narcotics Control Bureau) நடத்திய சோதனையில் பல கோடி மதிப்புள்ள போதை பொருள் சிக்கிய நிலையில், பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உள்பட 13 பாலிவுட் பிரபலங்களை கைது செய்துள்ளனர்.

மும்பை உள்ளிட்ட இந்தியாவின் பல பெரு நகரங்களில் சொகுசு கப்பல்களை வைத்திருக்கும் நிறுவனங்கள் அடிக்கடி பணக்காரர்களுக்காக பல்வேறு வகையான கடல் பயண சுற்றுலாக்களை நடத்துவது உண்டு. சில தனியார் அமைப்புகளும், சொகுசு கப்பல்களை வாடகைக்கு பெற்று கடல் சுற்றுலாக்களை நடத்துவது உண்டு.

இந்நிலையில் மும்பையில் இருந்து கோவாவுக்கு 3 நாள் சுற்றுலாவாக கார்டிலியா என்ற சொகுசு கப்பலில் பயண ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. 6 பேர் இந்த சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்தனர். அந்த சொகுசு கப்பலில் சுமார் 1000 பயணிகள் பயணம் செய்ய முடியும்.

மும்பையில் இருந்து அக்டோபர் 2 ஆம் தேதி புறப்பட்டு அரபிக் கடலில் 2 இரவுகள் கழித்துவிட்டு, கோவா வழியாக மீண்டும் 4 ஆம் தேதி காலை மும்பை திரும்பும் வகையில் அந்த சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இதற்காக ஆன்லைன் மூலம் சுற்றுலா பயண டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டன. நாடு முழுவதிலும் இருந்து 800க்கும் மேற்பட்டவர்கள் அந்த கப்பலில் சுற்றுலா செல்ல முன்பதிவு செய்திருந்தனர்.

திட்டமிட்டபடி நேற்று மதியம் அந்த சொகுசு கப்பல் மும்பை துறைமுகத்தில் இருந்து சுற்றுலா பயணத்தை தொடங்கியது. அதில் இந்தியாவின் கோடீஸ்வரர்கள் குடும்பங்களை சேர்ந்தவர்கள், திரையுலக பிரபலங்கள், மாடலிங் உலகை சேர்ந்தவர்கள் என பல்வேறு தரப்பினரும் இடம் பெற்றிருந்தனர்.

இந்நிலையில் இந்த சொகுசு கப்பலில் போதை விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக மும்பை போதைப் பொருள் தடுப்பு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து போதைப் பொருள் பயன்படுத்துபவர்கள் கையும் களவுமாக பிடிக்க மும்பை மண்டல போதைப் பொருள் தடுப்பு பிரிவு இயக்குனர் சமீர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

[su_image_carousel source=”media: 26823,26822″ crop=”none” captions=”yes” autoplay=”2″ image_size=”full”]

போதைப் பொருள் தடுப்பு பிரிவை சேர்ந்த 20 அதிகாரிகள் சுற்றுலா பயணிகள் போல மாறுவேடத்தில் அந்த கப்பலில் சென்றனர். அவர்கள் கப்பலில் உள்ள பயணிகளை கண்காணித்தபடி இருந்தனர். நேற்று இரவு கப்பலில் டான்ஸ் பார்ட்டி தொடங்கியதும், பயணிகளும் உற்சாகமாக நடனமாடினார்கள்.

அந்த சமயத்தில் போதைப் பொருட்கள் விநியோகம் செய்யப்படுவது தெரிய வந்தது. இதனால் உஷாரான போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் அதை யார் விநியோகம் செய்வது என்பதை மாறுவேடத்தில் இருந்தபடியே ஆய்வு செய்தனர்.

சுமார் 7 மணி நேரம் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் அந்த கொகுசு கப்பல் முழுவதையும் ஒரு இடம் கூட விடாமல் சோதித்தனர். அப்போது 8 இளைஞர்கள் போதைப் பொருட்களை தொழில் அதிபர்களின் மகன்கள், மகள்களுக்கு கொடுப்பது தெரியவந்தது.

இதனையடுத்து அந்த 8 பேரையும் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் சுற்றி வளைத்தனர். அவர்களிடம் இருந்து பண்டல் பண்டலாக கோக்கைன், கஞ்சா உள்பட பல்வேறு வகையான போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

போதைப் பொருளை பயன்படுத்தியவர்கள், விநியோகம் செய்தவர்கள் ஆகியோரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அந்த நிகழ்ச்சியில் பிரபல இந்தி நடிகர் ஷாருக்கானின் மகன் ஆரியன் இருப்பதும் தெரிய வந்தது. சுற்றுலா கப்பலில் போதைப் பொருள் பயன்படுத்தியதாக 13 பேர் மீது போதைப் பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த வழக்கு தொடர்பாக பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானின் மகன் ஆரியன் உள்ளிட்டோர் மும்பை போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்துக்கு அழைத்து வரப்பட்டு, அவர்களிடம் பல மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டது.

ஆரியன் கானின் செல்போனை போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் ஆய்வு செய்தனர். ஆரியன் யார் யாருடன் பேசினார் என்பது பற்றி விசாரித்தனர். பின்னர் ஆரியன் கான், அர்பாஸ் சேத் வணிகர் மற்றும் முன்முன் தமேச்சா ஆகியோர் மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனை அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

முன்னதாக கடந்த மாதம் குஜராத்தில் ரூ.26 ,000 கோடி மதிப்பிலான சுமார் 3,000 கிலோ போதைப் பொருள் பிடிபட்டது. ஆப்கானிஸ்தானில் இருந்து குஜராத் துறைமுகத்திற்கு கடத்தி வரப்பட்ட போதைப் பொருட்கள் விவகாரத்தில் சென்னை கொளப்பாக்கத்தில் வசித்த சுதாகர்- வைசாலி தம்பதிக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக விசாரணை நடந்து கொண்டிருக்கும் நிலையில் மும்பை சுற்றுலா சொகுசு கப்பலில் போதைப் பொருள் விநியோகம் நடந்திருப்பது மும்பையில் உள்ள பிரபலங்களிடம் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா காலத்தில் தினசரி ரூ.1,002 கோடி வருமானம்- மோடி ஆட்சியில் அதானியின் அசுர வளர்ச்சி