ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி முதல் இடம் வகிக்கும் நிலையில், கவுதம் அதானியின் வருமானம் ஒரு நாளைக்கு ரூ.1,002 கோடியாக அதிகரித்து 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

கொரோனான வைரஸ் தாக்கத்தால் இந்தியாவில் கடந்த ஆண்டு கடும் பொருளாதார சரிவு ஏற்பட்டது. இந்த சரிவிலிருந்து இன்னும் மீள முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.

கொரோனா வைரஸ் தொற்று, ஊரடங்கு என தொடர் வருவாய் இழப்பு காரணமாக பல நிறுவனங்கள் மூடப்பட்டன. இதனால் லட்சக்கணக்கான மக்கள் வேலை இழந்து வாழ்வாதாரம் இழந்து நிற்கின்றனர்.

ஆனால் எங்கும் வரி.. எதிலும் வரி.. எல்லா இடத்திலும் வரி.. என்ற பெயரில் அதனை தேசபக்தியாக மாற்றிய பாஜக ஒன்றிய அரசின் சதிச்செயல் இந்தியா முழுவதும் தாறுமாறாக விலைவாசி உயர்வு உள்ளது. இது பிரிட்டிஷ் காலத்தைப் போலவே இந்திய மக்களின் வாழ்வாதாரத்தை மொத்தமாகச் சிதைத்து சின்னாபின்னமாக்கி உள்ளது.

ஆனால், இதை பற்றி எல்லாம் கவலைப்படாத மோடி தலைமையிலான பாஜக அரசு ரயில்வே, விமான நிலையம், ராணுவத் தளவாடங்கள் என பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு குறிப்பாக அம்பானி, அதானி ஆகியோரை சார்ந்தவர்களுக்கு மட்டுமே விற்று வருகிறது.

இந்நிலையில், மோடி அரசு இரண்டு நபர்களின் செல்வங்களை வளர்க்கவே ஆட்சியைச் செய்கிறது. இது மக்களுக்கான ஆட்சி கிடையாது. கார்ப்பரேட்களுக்கான ஆட்சி என வெளிப்படையாகவே மக்கள் கடும் விமர்சனங்கள் செய்து வந்தனர்.

இந்த விமர்சனங்களை உண்மையாக்கும் விதமாக ஐஐஎஃப்எல் நிறுவனம் 2021 ஆம் ஆண்டுக்கான ஆசிய கோடீஸ்வரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு, 7,18,000 கோடி ரூபாயாக அதிகரித்து, தொடர்ந்து பத்தாவது ஆண்டாக முகேஷ் அம்பானி குடும்பம் முதல் இடம் பிடித்துள்ளது.

முகேஷ் அம்பானியின் தினசரி வருமானம் 163 கோடி ரூபாயாகும். முந்தைய ஆண்டினை காட்டிலும் 9% சொத்து மதிப்பு அதிகரித்துள்ளது. இதனையடுத்து ஆசிய அளவில் மிகப்பெரிய பணக்காரர்கள் பட்டியலில் 4 வது இடத்தில் இருந்த அதானி குழுமத்தின் கவுதம் அம்பானி தற்போது 2வது இடத்திற்கு உயர்ந்துள்ளார்.

இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து கொண்டு வரும் மற்றொரு பில்லியனர் ஆன, கவுதம் அதானியின் சொத்து மதிப்பானது, பலமடங்கு அதிகரித்து 1,40,200 கோடி ரூபாயில் இருந்து 5,05,900 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

இதனை நாள் கணக்கில் கணக்கிட்டு பார்த்தால், கொரோனா காலத்தில் கவுதம் அதானியின் வருமானம் ஒரு நாளுக்கு 1002 கோடி ரூபாயாகும். இவரின் சொத்து மதிப்பு 261% அதிகரித்துள்ளது.

இதில் கவனம் கொள்ள வேண்டிய விஷயம் கவுதம் அதானியின், சகோதரரான வினோத் அதானியும் இந்த பட்டியலில் இணைந்துள்ளார். வினோத் அதானியின் சொத்து மதிப்பானது மூன்று மடங்கு அதிகரித்து, 1,31,600 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இவர் ஆசிய அளவில் மிகப்பெரிய பணக்காரர்கள் பட்டியலில் 8 ஆம் இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மோடி ஆட்சியில் கொரோனாவால் பொதுமக்கள் பலரும் வாழ்வாதாரம் இழந்து, விலைவாசி உயர்வால் அவதிப்பட்டு வரும் நிலையில், அம்பானி, அதானி உள்ளிட்டோரின் சொத்து மதிப்பு உயர்ந்ததை சுட்டிக்காட்டி பலரும் விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர்.

ஏர் இந்தியாவை டாடா சன்ஸ் நிறுவனம் விலைக்கு வாங்கியதா.. ஒன்றிய அரசு விளக்கம்