தமிழ் சினிமாவில் தனக்கென ரசிகர்கள் பட்டாலத்துடன் அசைக்க முடியாத இடத்தில் இருப்பவர். இவர் தற்போது, முன்னணி நடிகர்களுக்கு இணையாக சம்பளம் வாங்குகிறார்.

கடந்த ஆண்டு இவரது நடிப்பில் வெளியான ‘கோலமாவு கோகிலா, இமைக்கா நொடிகள்’ போன்ற படங்கள் மாபெரும் வெற்றியை பெற்றன. அடுத்ததாக இவர் அஜித்துடன் இணைந்து நடித்த ‘விஸ்வாசம்’ படம் பொங்கல் விடுமுறையில் வெளியாகிறது. நடிகை நயன்தாரா தன்னுடைய சொந்த வாழ்க்கையில் எவ்வளவு பிரச்னைகளை சந்தித்தாலும் ஒவ்வொரு விழாக்களையும் மிகவும் சந்தோஷமாக கொண்டாடி வருகிறார்.

இந்த ஆண்டு 2019 புத்தாண்டு தினத்தை நயன்தாரா தன்னுடைய காதலர் விக்னேஷ் சிவனுடன் அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் நகரில் கொண்டாடியுள்ளார். அப்போது விக்னேஷ் சிவனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் நயன்தாரா பதிவிட்டுள்ளார். இது சமூக வளைத்தலங்களில் வைரலாகி வருகிறது.

இதனிடையில், புத்தாண்டு கொண்டாட்டமாக ஐரா படத்தின் டீசர் வரும் 5ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளதாக நயந்தாரா அறிவித்துள்ளார். சர்ஜூன் இயக்கத்தில் நயன்தாரா, கலையரசன், யோகிபாபு, ஜெயபிரகாஷ், லீலாவதி உட்பட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஐரா’. இப்படத்தில் நயன்தாரா முதன்மை நாயகியாக நடித்துள்ளார்.

இந்த ஆண்டு நயன்தாரா நடிப்பில் ‘ஐரா, விஸ்வாசம், கொலையுதிர்க்காலம், சயிரா நரசிம்மரெட்டி, இன்னும் டைட்டில் வைக்கப்படாத சிவகார்த்திகேயன் திரைப்படம் ஆகிய படங்கள் வெளியாகவுள்ளது. இதில் கேஆர்ஜி ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவான ஐரா படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.