வேல் யாத்திரைக்கு அனுமதி மறுத்த தமிழக டிஜிபி உத்தரவை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் பாஜக மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஹேமலதா அமர்வு முன்பு இன்று (நவம்பர் 7) நடைபெற்றது.

இந்த மனு மீதான முதல் கட்ட விசாரணையின் போது, பாஜகவுக்கு குறைந்தபட்ச பொறுப்புணர்வு வேண்டும் என உயர்நீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

மேலும், கோயில் சென்றவர்களில் பலர் முகக்கவசம் அணியவில்லை என்பதற்கு வீடியோ ஆதாரம் உள்ளது என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதற்கு பாஜகவின் வேல் யாத்திரையில் மாஸ்க் அணியாதவர்களுக்கு ஏன் அபராதம் விதிக்கவில்லை?

அதேபோல் பாஜக யாத்திரையை நிறைவு செய்யும் டிசம்பர் 6 ஆம் தேதியை நினைவில் கொள்ள வேண்டும். பொது அமைதியுடன் தொடர்புடையது என்பதால் வேல் யாத்திரை பாதையை பாஜக தீர்மானிக்க முடியாது என்றும் கருத்து தெரிவித்திருந்தனர்.

முருகன் கோயில்களே இல்லாத வழியில் யாத்திரை செல்வது ஏன்? என்றும், கோயிலுக்கு செல்வதன் நோக்கம் என்றால் அங்கு மட்டும் செல்ல வேண்டியது தானே? மாநிலம் முழுவதும் பாஜக ஊர்வலம் செல்வது ஏன்? எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

நீதிமன்றத்தை அரசியல் களமாக மாற்றாதீர்கள் என்று கூறிய நீதிபதிகள், பின்னர் இந்த மனு மீதான விசாரணையை நவம்பர் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

நம்ம கட்சிக்காரன் எத்தினி பேரு முருகா… கிண்டலடிக்கும் வலைபதிவர்கள்

பாஜக நடத்தும் வேல் யாத்திரைக்கு அனுமதி தர முடியாது- உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு