ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட வாகனங்கள் தொடர்பான ஆவணங்கள் புதுப்பிப்பதற்கான கால அவகாசம் 2021 மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய சாலை மற்றும் போக்குவரத்து அமைச்சகம் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு அறிககை ஒன்றை அனுப்பி உள்ளது.

அந்த அறிக்கையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதை கருத்தில் கொண்டு ஓட்டுனர் உரிமம், பதிவு சான்றிதழ்கள், உரிமங்கள் ஆகியவை செல்லுபடியாகும் காலம் 2021 ஆம் ஆண்டு மார்ச் 31 வரை செல்லும் என கருத வேண்டும்.

பிப்ரவரி 2020 ஆம் ஆண்டு முதல் காலாவதியான சான்றிதழ்களுக்கும் இது பொருந்தும். சமூக இடைவெளியை பின்பற்றும் இந்த நேரத்தில், இது பொது மக்களுக்கு உதவியாக இருக்கும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

முதலில் ஜூன் 30 வரையிலும், அதன்பின் செப்டம்பர் 30 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக கால அவகாசம் டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டிருந்தது.

மேலும் தற்போது 3 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டு 2021 மார்ச் மாதம் வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு அலுவலகங்களில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதத்தில் இந்த கால அவகாசத்தை மத்திய அரசு வழங்கியுள்ளது.

இந்தியாவில் புகழ் பெற்ற நாசிக் ஒயினுக்கு புவிசார் குறியீடு