பாஜக மோடி அரசின் தனியார்மயமாதல் கொள்கைப்படி, இந்தியாவில் அரசு கட்டுப்பாட்டில் இயங்கி வரும் பல விமான நிலையங்கள் தொடர்ந்து தனியாரிடம் வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து ஜெய்ப்பூர், குவஹாத்தி மற்றும் திருவனந்தபுரம் ஆகிய மூன்று விமான நிலையங்களை பொது மற்றும் தனியார் பார்ட்னர்ஷிப் மூலம் அதானி குழுமத்திடம் ஐம்பது வருடங்களுக்கு குத்தகைக்கு விட மத்திய மோடி அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

இந்நிலையில், பாஜக மோடி அரசின் இந்த முடிவிற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் கூறுகையில், விமான நிலையங்களை தனியார்மயமாக்கும் மத்திய அரசின் ஒருதலைபட்சமான முடிவானது, மாநில அரசிடமிருந்து அதன் உரிமையையும் தன்னாட்சியையும் பறிப்பதாகும்.

விமான நிலையங்களை தனியார்மயமாக்கும் எந்தவொரு முடிவும் மாநில அரசுடன் கலந்தாலோசிக்கப்பட்டே எடுக்கப்படும் என்ற 2003-ம் ஆண்டு வழங்கப்பட்ட உறுதியை மீறுவதாகும், இம்முடிவைத் திரும்பப் பெற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க: திருவனந்தபுரம் விமான நிலையத்தை அதானிக்கு கொடுப்பதா… மோடிக்கு கேரள முதல்வர் கடிதம்