சென்னை புறநகர் ரயிலில் 25-06-2021 முதல் பொதுமக்கள் பயணிக்கலாம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கொரோனா பொதுமுடக்கம் காரணமாக சென்னை புறநகர் ரயில்களில் பொதுமக்கள் பயணிக்க அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இதுவரை அத்தியாவசிய பணியாளர்கள், மத்திய, மாநில அரசு ஊழியர்கள் மட்டுமே ரயிலில் பயணித்து வந்தனர்.

இந்நிலையில், நாளை (25-06-2021) முதல் கட்டுப்பாடுகளுடன் பொதுமக்கள் பயணம் செய்ய அனுமதி வழங்கப்படுள்ளது. பெண்கள், 12 வயதிற்குட்பட்ட குழந்தைகள் அனைத்து நேரத்திலும் பயணிக்கலாம் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதேபோல் ஆண் பயணிகள் Non-Peak Hours அதாவது புறநகர் ரயிலில் காலை 9.30 மணி முதல் 4.30 மணி வரையிலும் இரவு 7 மணி முதல் கடைசி ரயில் இயக்கப்படும் வரையிலும் பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ரயில் மற்றும் ரயில் நிலையங்களில் மக்கள் யாரும் முகக்கவசம் இல்லாமல் இருந்தால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்றும், பொதுமக்கள் கொரோனா கட்டுப்பாடுகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் தெற்கு ரயில்வே எச்சரிக்கை விடுத்துள்ளது.

அறவழியில் போராடியவர்கள் மீதான வழக்குகள் ரத்து; முதல்வரின் அறிவிப்பால் மகிழ்ச்சியில் மக்கள்