‘ரஜினி அதற்கு சரிபட்டு வரமாட்டார்’ என்பது போல கழுதையுடன் சேர்த்து, ஒரு கார்ட்டூனை குருமூர்த்தி தனது துக்ளக் வார இதழின் அட்டைப் படத்தில் வெளியிட்டது ரஜினி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் ரஜினி 2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் டிசம்பர் 31ந்தேதி, தான் அரசியலுக்கு வருவேன் என்றும், தனது அரசியல் ஆன்மிக அரசியல் என்றும் அதிரடியாக அறிவித்தார். ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு தொடக்கத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

ஆனால், அவரது அறிவிப்பு வெளியாகி 3 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், அரசியல் கட்சிக்காக எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளாமல், தொடர்ந்து படங்களில் நடிப்பதிலே   கவனமாக இருந்து வருகிறார். இதுதொடர்பாக கடந்த ஆண்டு செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, 2021ம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலில் களமிறங்குவேன் என்று கூறினார். அதோடு அவரது அரசியல் நடவடிக்கையும் முடங்கிப் போனது.

இந்நிலையில் கடந்த சில தினங்கள் முன்பு, ரஜினி பெயரில் வெளியான கடிதத்தில், கொரோனா நோய் தொற்று காரணமாக தன்னுடைய அரசியல் திட்டங்களை திட்டமிட்டபடி செயல்படுத்த முடியவில்லை என்பதையும் மருத்துவர்கள் மற்றும் நண்பர்கள் ஆலோசனைப்படி இப்போதைக்கு அரசியல் கட்சி தொடங்குவது இயலாத செயல் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கு விளக்கமளித்த ரஜினி, அந்த கடிதம் என்னுடையது அல்ல; ஆனால் அதில் கூறப்பட்ட தகவல் உண்மை. இதுகுறித்து தகுந்த நேரத்தில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளோடு கலந்தாலோசித்து, எனது அரசியல் நிலைப்பாட்டை பற்றி மக்களுக்கு தெரிவிப்பேன் என்றார். ரஜினி அரசியலுக்கு வந்தால் அதன் மூலம் தமிழகத்தில் வலுவான இடத்தை பிடிக்க முடியும் என்று நம்பிய பாஜகவுக்கு இந்த அறிவிப்பு அதிர்ச்சி அளித்தது.

இதனைத் தொடர்ந்து, ரஜினி அரசியலுக்கு வந்தால் பெரிய மாற்றம் வரும் என்று பல வருடங்களாக கூறிவந்த துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி, திடீரென சென்னை போயஸ் கார்டனில் உள்ள இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து சுமார் 2 மணி நேரம் பேச்சு வார்த்தை நடத்தினார்.

அதில், ஒருவேளை கட்சி ஆரம்பித்து அதை திறன்பட செயல்படுத்த முடியாமல் போனால், இருக்கும் இமேஜும் மொத்தமாக சரிந்துவிடும் என்று ரஜினி கூறிய பதிலால் வெறுத்துப்போன துக்ளக் குருமூர்த்தி சோகத்தோடு வெளியேறினார் 

இதை தொடர்ந்து இந்த வார துக்ளக் இதழின் கார்ட்டூன் படத்தில் ஒரு நாளிதழில் முதல் செய்தியாக , ரஜினி கட்சி தொடங்குவது சந்தேகமே’ என்று அச்சிடப்பட்டுள்ளது.

[su_spacer]

அந்த தலைப்பை பார்த்துவிட்டு, ஒரு கழுதை இன்னொரு கழுதையிடம் ‘சரிவிடு.. இது உண்மையா இருந்தா நம்ம கூட்டத்தை சேர்ந்த ஒருத்தருடைய ஆட்சிதான் வரும்.. நமக்கு தீனிக்கு பஞ்சம் இருக்காது'” என்று சொல்கிறது.

[su_spacer]

இதனால், தனது பேச்சு வார்த்தை தோலிவியில் முடிந்ததை குருமுர்த்தி உண்ர்ந்து உள்ளதாகவும் இதனால்    ரஜினி அரசியலுக்கு வரமாட்டார் என்பது தெளிவாகி உள்ளதாகவும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்

குருமுர்த்திவாள் நேரிலே காலை பிடிச்சி கழுதையா கத்தியும்  😭

பேச்சு வார்தைக்குப் பிறகு சோகத்தில் ஆழ்ந்ததால் , மிகச் சொற்ப எண்ணிக்கையில் மைலாப்பூரில் விற்பனையாகும் தனது துக்ளக் வார இதழ் அட்டைப்படத்தில், ‘கழுதை கூட ஆளட்டும்’ என்பது போல கார்ட்டூன் போட்டு தனது விரக்தியை   போக்கிக் கொண்டார் மோடியின்  நண்பர்  குருமூர்த்தி என பலரும்  சமூக வலைத்தளத்தில் கருத்துக்களை பகிர்ந்து விமர்சித்து வருகின்றனர்.

கொரோனா விலகும் வரை ‘நோ’ அரசியல்; ரஜினி ட்வீட்டால் கதறும் பாஜக