மங்களூரு விமான நிலையத்திற்குப் பிறகு, முன்னாள் பிரதமர் சவுத்ரி சரண் சிங் பெயரிடப்பட்ட லக்னோ சர்வதேச விமான நிலையத்தை அதானி குழுமத்திற்கு 50 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு ஒப்படைத்துள்ளது இந்திய விமான நிலைய ஆணையம் (Airports Authority of India).

மத்திய அரசு பிப்ரவரி 2019ல் இந்தியாவின் 6 முக்கிய விமான நிலையத்தைத் தனியார்மயமாக்கத் திட்டமிட்டது. இதன்படி லக்னோ, அகமதாபாத், திருவனந்தபுரம், ஜெய்ப்பூர், மங்களூரு மற்றும் குவகாத்தி விமான நிலையங்களைக் குத்தகை விடுவதற்கான பணிகளைத் துவங்கியது.

திருவனந்தபுரம் விமான நிலையத்தின் குத்தகை ஒப்பந்தத்தில் பல்வேறு அமைப்புகள் குத்தகை கோரப்பட்டதால் பல்வேறு பிரச்சனைகளும், இந்த விமான நிலையைத்தை தனியார்மயமாக்குவதில் சிக்கலும், போராட்டங்களும் வெடித்தது. எனினும் அனைத்து பிரச்சனைகளையும் தாண்டி திருவனந்தபுரம் விமான நிலையத்தின் குத்தகை ஒப்பந்தத்தை அதானி கைப்பற்றியது.

இந்நிலையில் தற்போது இந்திய விமான நிலைய ஆணையம், மங்களூர் விமான நிலையத்தைத் தொடர்ந்து, சவுத்ரி சரண் சிங் சர்வதேச விமான நிலையம் என அழைக்கப்படும் லக்னோ விமான நிலையத்தையும் அதானி குழுமத்திற்கு 50 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு ஒப்படைத்தது.

[su_image_carousel source=”media: 18568,18569″ crop=”none” columns=”2″ captions=”yes” autoplay=”3″]

இதன்மூலம் லக்னோ, அகமதாபாத், ஜெய்ப்பூர், மங்களூர், திருவனந்தபுரம் மற்றும் குவகாத்தி ஆகிய ஆறு முக்கிய விமான நிலையங்களையும் அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம் இயக்கும் உரிமையை பெற்றுள்ளது. இந்த விமான நிலையங்களின் இயக்கம், மேலாண்மை, விரிவாக்கம் ஆகிய பணிகளை அடுத்த 50 வருடத்திற்கு மேற்கொள்ளப் போகிறது.

விமானப் பயணிகள் எண்ணிகையும், சேவையும் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கும் நிலையில் அதானி குழுமம் இப்புதிய வர்த்தகச் சந்தைக்கு நுழைந்து 6 பெரும் விமான நிலையங்களைக் கைப்பற்றியதன் மூலம் மிகப்பெரிய அளவிலான வர்த்தகத்தை அடையும்.

தற்போது இந்திய விமான நிலைய ஆணையம் (AAI) மற்றும் அதானி குழுமம் மத்தியில் நடந்துள்ள ஒப்பந்தம் மூலம் அக்டோபர் 31 முதல் மங்களூரு விமான நிலையமும், நவம்பர் 2ஆம் தேதி முதல் லக்னோ விமான நிலையமும், நவம்பர் 11 முதல் அகமதாபாத் விமான நிலையமும் முழு கட்டுப்பாட்டிற்குச் செல்லும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதர 3 விமான நிலையங்களான திருவனந்தபுரம், ஜெய்ப்பூர் மற்றும் குவகாத்தி ஆகியவற்றுக்கான ஒப்பந்தம் செப்டம்பர் மாதம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

விமானநிலையத்தை 50 ஆண்டுகளுக்கு அதானிக்கு கொடுத்த மோடி அரசு- உயர்நீதிமன்றத்தில் கேரள அரசு வழக்கு