நடிகர் கமல்ஹாசன் தனது மக்கள் நீதி மய்யத்தின் பகுதி பொறுப்பாளர்கள் பெயர் பட்டியலை வெளியிட்டுள்ளார். தமிழகம் முழுவதும் 1500க்கும் மேற்பட்டவர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கட்சியின் கட்டமைப்பினை வலுப்படுத்துகின்ற வகையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பகுதி பொறுப்பாளர்கள் நியமன அறிவிப்பு இன்று வெளியிடப்படுகிறது. இந்த முதல் கட்ட அறிவிப்பினைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட நியமன அறிவிப்பு அடுத்து வரும் சில தினங்களில் அறிவிக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் நியமிக்கப்பட்டுள்ள பகுதி பொறுப்பாளர்களுக்கு வழங்கப்படுவது பதவியல்ல, அது உங்கள் ஒவ்வொருவரின் பொறுப்பு என்கின்ற உணர்வினை உங்கள் நினைவில் நிறுத்தி, நமது கட்சியின் விழியாகவும், செவியாகவும், குரலாகவும் கடமையுணர்வுடன் செயலாற்றிடவேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த பொறுப்பினை சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு பயன்படுத்தாமல், மக்களின் தொண்டர்களாக, மக்கள் நலனை முன்னெடுத்திடுவதற்கான அரிய வாய்ப்பாக பயன்படுத்தி, செயலாற்றிடவேண்டும்” எனக் குறிப்பிட்டுதுள்ளார்.

மக்கள் நீதி மய்யம் குடும்பத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றேன். எனவும் பகுதிப்பொறுப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்வதாகவும் கமல் கூறியிருக்கிறார். பகுதி பொறுப்பாளர்களின் வரவு கட்சியை வலுப்படுத்தும் எனவும் தமிழகத்தை வளப்படுத்தும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.