அரசியல் கேளிக்கை

5,000 ரூ கோடி மோசடி குஜராத்தி தொழிலதிபர் தப்பி ஓட்டம்

வங்கியில் ரூ. 5,000 கோடி கடன் பெற்று திரும்ப செலுத்தாமல் நைஜீரியாவுக்கு மேலும் ஒரு குஜராத்தி தொழிலதிபர் நிதின் சந்தேசரா தப்பி சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குஜராத்தில் ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவனம் நடத்தி வருபவர் நிதின் சந்தேசரா. இவர் பல்வேறு வங்கிகளில் ரூ. 5,000 கோடி வரை கடன் பெற்றுள்ளார். ஆனால், திரும்ப செலுத்தவில்லை. இந்த நிலையில் இவர் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்து தேடி வந்தது. இதற்கிடையே இவர் துபாயில் வைத்து மேலும் வாசிக்க …..

அரசியல் தமிழ்நாடு பெண்கள்

சோபியாவின் தந்தை கொடுத்த புகாருக்கு ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை : மனித உரிமை ஆணையம் அதிரடி

தூத்துக்குடியை சேர்ந்த மாணவி சோபியா. இவர் கனடாவில் ஆராய்ச்சி மாணவியாக படித்து வருகிறார். இந்தநிலையில் கடந்த 3ம் தேதி நாடுதிரும்பிய சோபியா தனது பெற்றோருடன் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானம் மூலம் சென்றுகொண்டிருந்தார். அதே விமானத்தில் பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் பயணம் செய்துள்ளார். அப்போது சோபியா, பாசிச பாஜக ஒழிக என்று கோஷமிட்டுள்ளார். இதனையடுத்து விமானத்தில் இருந்து வெளியே வந்த தமிழிசை இது குறித்து விமான நிலைய போலீசாரிடம் கூறி மாணவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் வாசிக்க …..

அரசியல் தமிழ்நாடு

பிரபல எஸ் வி சேகர் ஆசை ., தமிழிசை மெகா அதிர்ச்சி

விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில், தமிழக பாஜ தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று காலை தரிசனம் செய்தார். அவர் சென்ற பின்னர் பாஜ பிரமுகரும், நடிகருமான எஸ்.வி.சேகர் தரிசனம் செய்தார். மேலும், அங்கிருந்த சடகோப ராமானுஜ ஜீயரை சந்தித்தார் பின்னர் நிருபர்களிடம் எஸ்.வி.சேகர் கூறுகையில், ‘‘ராஜபாளையத்தில் நடக்கும் பாஜ மாநில செயற்குழுவுக்கு எனக்கு அழைப்பு இல்லை. என்னைக் காட்டிலும் பிரபலமானவர்கள் இருப்பதாக நினைக்கிறார்கள். தமிழக பாஜ தலைமை என்னை பயன்படுத்தவில்லை. என்னைப் பயன்படுத்திக் கொண்டால், அவர்களுக்கு மேலும் வாசிக்க …..

அமர்வு நீதிமன்றம் அரசியல் தமிழ்நாடு

கருணாசுக்கு ஒரு சட்டம், ஹெச்.ராஜா, எஸ்.வி.சேகருக்கு ஒரு சட்டமா

திருவாடானை தொகுதி அதிமுக சின்னமான இரட்டை இலை சின்னத்தில் வென்ற எம்.எல்.ஏ கருணாஸ் கடந்த ஞாயிறு அன்று சென்னையில் நடந்த ஒரு கூட்டத்தில் பாஜக வின் தேசிய செயளாலர் எச் ராஜாவை போலவே பொது வெளியில் சென்னை காவல்துறை அதிகாரிகளுக்கு சவால் விடுக்கும் வகையில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் எச் ராஜாவை போலவே சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கருணாஸ் மீதும் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். கருணாஸ் மீது 6 பிரிவுகளின் கீழ் மேலும் வாசிக்க …..

அரசியல் சட்டம் தமிழ்நாடு

உணர்ச்சி வசப்பட்டு பேசினராம் ஆழ்ந்த வருத்தங்களை தெரிவிக்கிறராம் கருணாஸ்

நடிகரும், அதிமுக சின்னத்தில் வென்ற  சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் கடந்த 16-ம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டம் ஒன்றில் பேசினார். அப்போது, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தன்னை கண்டு அஞ்சுவதாக தெரிவித்தார்.  மேலும், காவல்துறை அதிகாரி ஒருவருக்கு சவால் விடுத்த அவர், முடிந்தால் காக்கிச்சட்டையை கழற்றிவிட்டு நேருக்கு நேர் மோதிப்பார்க்குமாறு சவால் விடுத்தார். ஜாதி ரீதியாகவும் பல்வேறு சர்ச்சை கருத்துக்களை கருணாஸ் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை அடுத்து, மேலும் வாசிக்க …..

அரசியல் தேசியம்

முன்னாள் பிரெஞ்சு அதிபர் ஃபிரான்கோய்ஸ் ஹோலன்ட் அறிப்பால் பாஜக பதட்டம் : ரஃபேல் ஊழல்

ஏப்ரல் 10, 2015 தேதி அப்போதைய பிரான்ஸ் அதிபர் ஹோலன்டை பாரிஸில் சந்தித்துப் பேசிய இந்திய பிரதமர் மோடி, 36 ரஃபேல் போர் விமானங்களை கொள்முதல் செய்வதாக அறிவித்தார். இதையடுத்து, பிரான்ஸிடமிருந்து சுமார் ரூ.60,000 கோடியில் 36 ரஃபேல் போர் விமானங்களைக் கொள்முதல் செய்யும் ஒப்பந்தம் 2016, செப்டம்பர் 23-இல் கையெழுத்தானது. இதில், விமானங்களை நீண்ட காலத்துக்கு பராமரிக்கும் பொறுப்பையும் பிரான்ஸ் அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. மேலும், பாதுகாப்புத்துறையின் கொள்முதல் கவுன்சிலின் (Defence Acquisition Council) ஆலோசனைகளும் மேலும் வாசிக்க …..

உயர் நீதிமன்றம் சட்டம் சுற்றுச்சூழல் வணிகம்

சுற்றுசுழல் அமைச்சகம் அனுமதி வரும் வரை 8 வழி சாலை தொடர மாட்டோம் மத்திய அரசு பல்டி

சென்னை – சேலம் இடையேயான 8 வழி சாலை திட்டத்திற்கு தடை விதிக்க கோரி பாமக எம்பி அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் அமர்வு உத்தரவின்படி, 8 வழி சாலை திட்டத்தை செயல்படுத்த அரசு எடுத்த நடவடிக்கைகளை அட்டவணையாக மத்திய அரசுத்தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது. அதை பார்த்த நீதிபதிகள், 8 வழி சாலை திட்டத்திற்கான சுற்றுச்சுழல் அனுமதி பெறுவதற்கு மேலும் வாசிக்க …..

அரசியல் தேசியம்

ரஃபேல் 36000 கோடி ஊழலில் மக்களுக்கு பொய்யான தகவல் தரும் நிர்மலா ராஜினாமா கோரும் எதிர்கட்சிகள்

ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனத்தின் (ஹெச்.ஏ.எல்.) முன்னாள் தலைவர் டி.எஸ். ராஜுவின் பேட்டியை சுட்டிக்காட்டி, ரஃபேல் ஒப்பந்த விவகாரத்தில் மக்களுக்கு தவறான தகவலை அளித்ததற்காக பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ராஜிநாமா செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. ரஃபேல் போர் விமானத்தை தயாரிக்கும் திறன், பொதுத் துறை நிறுவனமான ஹெச்.ஏ.எல்.லுக்கு இல்லை என்பதாலேயே, அந்நிறுவனத்துடன் சேர்ந்து விமானத்தை தயாரிக்க டஸால்ட் ஏவியேஷன்ஸ் நிறுவனம் முன்வரவில்லை என்றும், இதனாலேயே 126 போர் விமானங்களை தயாரிப்பது தொடர்பாக மேலும் வாசிக்க …..

அரசியல் கருத்துக்கள் தேசியம்

ரஃபேல் 36000 கோடி ஊழல் உண்மைகளை மறைக்கும் நிர்மலா : முன்னாள் ரானுவ மந்திரி

ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான உண்மைகளை பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மறைக்கிறார் என்று முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ஏ.கே. அந்தோணி குற்றம்சாட்டியுள்ளார். தில்லியில் அண்மையில் பேட்டியளித்த பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசின் ஆட்சிக்காலத்தில் ரஃபேல் ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் தருவாயில், ஏ.கே. அந்தோணி அளவுக்கு அதிகமாக தலையிட்டதாக குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு ஏ.கே. அந்தோணி செவ்வாய்க்கிழமை பதிலளித்தார். இதுகுறித்து தில்லியில் அவர் செய்தியாளர்களுக்கு மேலும் வாசிக்க …..

அரசியல் வடமாநிலம்

எம்.பியின் காலைக் கழுவி அந்த நீரை பாஜக தொண்டர் ஒருவர் குடித்த அதிர்ச்சி சம்பவம்

ஜார்கண்ட் மாநிலத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் பாஜக எம்.பியின் காலைக் கழுவி அந்த நீரை தொண்டர் ஒருவர் குடித்த அதிர்ச்சி சம்பவம் நிகழந்துள்ளது. ஜார்கண்ட் மாநிலம் கோடா தொகுதி பாஜக எம்.பியாக இருப்பவர் நிஷிகாந்த் துபே. இவர் ஞாயிறன்று அவரது தொகுதியில் உள்ள கன்பரா என்னும் இடத்தில் பாலம் ஒன்றைக் கட்டும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்வில் பவன் ஷாஹு என்னும் தொண்டர் ஒருவர் மேடையில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் முன்னிலையில், எம்.பி நிஷிகாந்த் துபேயின் கால்களை மேலும் வாசிக்க …..