அரசியல் உலகம் தேசியம்

ஸ்பைவேர் மூலம் செல்போன்களை ஒட்டு கேட்ட ஒன்றிய பாஜக அரசு; ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

பெகாஸஸ் ஸ்பைவேர் மூலம் இந்தியாவைச் சேர்ந்த அரசியல் கட்சித் தலைவர்கள், முன்னணி ஊடகவியாளர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோரின் செல்போன் உரையாடல்கள் கண்காணிக்கப்பட்டதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேலின் என்.எஸ்.ஓ நிறுவன பெகாஸஸ் சாப்ட்வேர் மூலம் செல்போன் உரையாடல்கள் கண்காணிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக பார்பிட்டன் என்ற ஊடக நிறுவனத்துடன் இணைந்து தி வயர், வாஷிங்டன் போஸ், கார்டியன் உள்ளிட்ட 17 ஊடக நிறுவனங்கள் இணைந்து ஆய்வு மேற்கொண்டன. பிரபல ஊடக நிறுவனங்கள் மேற்கொண்ட மேலும் வாசிக்க …..

உலகம் தேசியம்

ஸ்டேன் சுவாமி மரணம் இந்திய மனித உரிமைகள் வரலாற்றில் பெரும் கறை: ஐநா சபை

மனித உரிமைகளுக்காகவும் சமூக நீதிக்காகவும் 40 ஆண்டுகளுக்கும் மேலாக போராடிய ஸ்டேன் சுவாமியின் இறப்பு இந்திய மனித உரிமைகள் வரலாற்றில் ஏற்பட்ட கறை என்று ஐநா சபை கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 84 வயதான சமூக செயற்பாட்டாளர் ஸ்டேன் சுவாமியை என்ஐஏ அதிகாரிகள் எல்கர் பரிஷத் வழக்கில் உபா சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்தனர். 9 மாதங்களாக சிறையில் இருந்த மனித உரிமைகள் ஆர்வலரான ஸ்டேன் சுவாமி ஜூலை 5 ஆம் மேலும் வாசிக்க …..

கொரானா தேசியம்

தடுப்பூசி விலையை உயர்த்தி ஒன்றிய மோடி அரசு ஒப்பந்தம்; கோவிஷீல்டு ரூ.215, கோவாக்சின் ரூ.225

இந்தியாவில் தற்போது ரூ.150க்கு வாங்கப்பட்டு வரும் கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகளை முறையே ரூ.215, ரூ.225 என்ற அதிக விலைக்கு கொள்முதல் செய்ய ஒன்றிய பாஜக அரசு புதிய ஒப்பந்தம் செய்துள்ளது. இந்தியாவில் சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு, பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகளை ஒன்றிய அரசு நேரடியாக கொள்முதல் செய்து மக்களுக்கு செலுத்தி வருகிறது. முதலில் முன்களப் பணியாளர்கள், 45-60 வயதுக்கும் மேற்பட்டவர்கள் என தடுப்பூசி போடப்பட்டது. இதற்காக, மருந்து நிறுவனங்களுடன் 50% தடுப்பூசியை ஒன்றிய மேலும் வாசிக்க …..

அரசியல் தமிழ்நாடு பாஜக

தமிழ்நாடு புதிய பாஜக தலைவராக பொறுப்பேற்றுள்ள அண்ணாமலை சூளுரை

தமிழ்நாடு பாஜக தலைவராக அறிவிக்கப்பட்ட முன்னாள் ஐபிஎஸ் அண்ணாமலை இன்று பதவியேற்றுக் கொண்டார். தமிழ்நாடு பாஜகவின் இளம் தலைவர் என்ற பெருமை இவருக்கு (வயது 37) கிடைத்துள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டு, 43 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். இவர்களில், தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்த எல்.முருகனுக்கு ஒன்றிய இணை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழ்நாடு மாநில புதிய பாஜக தலைவராக அண்ணாமலை நியமனம் செய்யப்பட்டுள்ளார். கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அண்ணாமலை, மேலும் வாசிக்க …..

அரசியல்

ஆர்எஸ்எஸ் முதல் இணை அமைச்சராக உயர்ந்த எல்.முருகன்..

தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்த எல். முருகனுக்கு பால்வளத்துறை, மீன்வளத்துறை, விலங்குகள் நலத்துறை மற்றும் தகவல் ஒளிபரப்புத் துறையின் ஒன்றிய இணை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. 2வது முறையாக 2019 மே மாதம் பொறுப்பேற்ற பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை முதல் முறையாக மாற்றியமைக்கப்பட்டது. 7-7-2021 தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் மற்றும் 7 பெண்கள் உள்பட 43 பேர் ஒன்றிய அமைச்சர்களாகப் பதவியேற்றனர். பிரதமர் மோடி முன்னிலையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்களுக்கு பதவி பிரமாணம் மேலும் வாசிக்க …..

அரசியல் தேசியம்

முன்னாள் ஒன்றிய அமைச்சரின் மனைவி கிட்டி குமாரமங்கலம் கொலை

மறைந்த முன்னாள் ஒன்றிய அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலத்தின் மனைவி கிட்டி குமாரமங்கலம் டெல்லியில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியின் தென்மேற்கு பகுதியில் வசந்த் விஹாரில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலத்தின் மனைவி கிட்டி குமாரமங்கலம் வசித்து வந்தார். நேற்றிரவு நடந்த கொள்ளை முயற்சியின்போது கிட்டி குமாரமங்கலம் கொலை செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். வீட்டில் துணிகளை துவைத்து வந்த ராஜூ (வயது 24) என்பவர் தலையணையால் அமுக்கி மேலும் வாசிக்க …..

கேளிக்கை சினிமா தமிழ்நாடு

அடுத்தடுத்து எதிர்ப்பு காட்டும் திரையுலகினர்; முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி முடிவு

ஒன்றிய அரசு கொண்டுவந்த ஒளிப்பதிவு சட்டத்திருத்த வரைவு 2021 மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி ஒன்றிய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கு, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். ஒன்றிய பாஜக அரசு ஒளிப்பதிவு சட்டத் திருத்த வரைவு 2021 மசோதாவை கடந்த ஜூன் 18 ஆம் தேதி வெளியிட்டது. மத்திய அரசின் இந்த மசோதாவுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கடும் கண்டனம் எழுந்து வருகிறது. ஒட்டுமொத்த இந்திய திரையுலகமும் தங்களது மேலும் வாசிக்க …..

அரசியல் தேசியம்

எட்டு மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்- குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவிப்பு

கர்நாடகா, ஹரியானா உள்பட 8 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமனம் செய்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்தியாவில் கொரோனா 2வது அலையின் பாதிப்பு மிக மோசமாக இருந்தது. ஒன்றிய பாஜக அரசு கொரோனாவை முறையாகக் கையாளவில்லை என பலரும் விமர்சித்து வந்தனர். கொரோனா ஒருபுறம், விலைவாசி உயர்வு மறுபுறம் என ஒன்றிய பாஜக அரசின் மீது மக்கள் அதிருப்தி கொண்டுள்ளனர். இந்நிலையில் அடுத்தாண்டு ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் கட்சியின் இமேஜை மேலும் வாசிக்க …..

அரசியல் கேளிக்கை சினிமா தமிழ்நாடு

நடிகர் சூர்யாவை பகிரங்கமாக மிரட்டி பாஜக தீர்மானம்!

நீட், ஒளிப்பதிவு திருத்தச் சட்ட வரைவு ஆகியவற்றுக்கு எதிராகக் கருத்து தெரிவித்திருந்த நடிகர் சூர்யாவுக்கு எதிராக பாஜக மாநில இளைஞரணி செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதற்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஒன்றிய பாஜக அரசு கொண்டு வரவுள்ள ஒளிப்பதிவு திருத்த மசோதா 2021 மூலம் தணிக்கைக்கு உள்ளான திரைப்படங்கள் மீண்டும் தணிக்கை செய்ய கோர முடியும், அத்துடன் திரைப்பட திருட்டுக்கு கடுமையான சிறை தண்டனை, அபராதம் உள்ளிட்டவை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது . அதேசமயம் மேலும் வாசிக்க …..

அரசியல் தேசியம் பாஜக

உத்தராகண்ட் பாஜகவில் கோஷ்டி மோதலால் குறளிவித்தையான முதல்வர் பதவி

உத்தராகண்ட் மாநிலத்தின் புதிய முதல்வராக புஷ்கர் சிங் தாமி பதவியேற்றதற்கு எதிராக 35 பாஜக எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளது பாஜக தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாஜக ஆட்சியில் உள்ள உத்தராகண்ட் மாநில சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த முறை பாஜக வெற்றி பெற்றதும் முதல்வராக பதவியேற்றவர் திரிவேந்திர சிங் ராவத். இவரது தலைமையிலான ஆட்சி மீது கடும் அதிருப்தி ஏற்பட்டு, பாஜகவில் உட்கட்சி பூசலாகவும் வெடித்தது. இதனையடுத்து 4 மாதங்களுக்கு முன்னர் மேலும் வாசிக்க …..