அமெரிக்கா உலகம் வாக்கு & தேர்தல்

ஜோ பிடனின் வெற்றிக்கு எதிரான மேல்முறையீட்டு மனு- பென்சில்வேனியா உச்சநீதிமன்றம் அதிரடி

அமெரிக்க அதிபர் தேர்தலில் பென்சில்வேனியாவில் பதிவான தபால் வாக்குகளை செல்லாதவை என அறிவிக்க கோரி டிரம்ப் சார்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை அந்த மாகாண உச்சநீதிமன்றம் டிஸ்மிஸ் செய்துள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளரான ஜோ பிடன் வெற்றி பெற்றார். குடியரசு கட்சியின் வேட்பாளராக போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் தோல்வியைத் தழுவினார். ஆனாலும் டொனால்ட் டிரம்ப் தரப்பு தங்களது தோல்வியை ஏற்க மறுத்து வருகிறது. மேலும் ஜோ பிடனின் வெற்றிக்கு எதிரான பல்வேறு மேலும் வாசிக்க …..

அமெரிக்கா உலகம்

‘நான் அமெரிக்க அதிபர்’.. நிருபரிடம் ஆவேசம் அடைந்த டிரம்ப்

‘நான் அமெரிக்க அதிபர் என்னுடன் ஒரு போதும் அப்படி பேச வேண்டாம்’ என டொனால்ட் டிரம்ப் நிருபரிடம் ஆவேசம் அடைந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் டிரம்ப் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஜோ பிடனிடம் தோல்வி அடைந்தார். எனினும் டிரம்ப் தனது தோல்வியை ஏற்க மறுத்து ஜோ பிடன் மீது தேர்தல் மோசடி புகாரை கூறி வருகிறார். இந்நிலையில் ராய்ட்டர்ஸ் வெள்ளை மாளிகையில் நிருபர் ஜெஃப் மேசன், அதிபராக தேர்வு செய்யப்பட்ட மேலும் வாசிக்க …..

கேளிக்கை சினிமா வாக்கு & தேர்தல்

தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்; டி.ராஜேந்தர் 220 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளா் சங்கத்துக்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோ்தல் நடைபெறுவது வழக்கம். கடந்த முறை நிா்வாகப் பொறுப்பில் இருந்த விஷால் தலைமைக்கு எதிராக கடும் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. தயாரிப்பாளர் சங்கத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காணரமாக, முன்னணி தயாரிப்பாளர்கள் பலரும் பிரிந்து தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் எனத் தொடங்கினர். இதற்கு பாரதிராஜா தலைவராக இருக்கிறார். இதனையடுத்து உயா்நீதிமன்ற அறிவுறுத்தலின்படி புதிய நிா்வாகிகளைத் தோ்வு செய்யும் தோ்தல் சென்னை அடையாறில் உள்ள எம்ஜிஆா் மேலும் வாசிக்க …..

கேளிக்கை சினிமா வாக்கு & தேர்தல்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்; தலைவர் பதவிக்கு 3 பேர் கடும் போட்டி

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலுக்கான வாக்குப்பதிவு, சென்னை அடையாறில் உள்ள எம்ஜிஆர்-ஜானகி கல்லூரியில் இன்று (நவம்பர் 22) காலை 8 மணிக்கு தொடங்கியது. நீதியரசர் ஜெயச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த தேர்தல், தற்போது நிறைவடைந்துள்ளது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவிக்கு டி.ராஜேந்தர், தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி, பி.எல்.தேனப்பன் ஆகிய 3 பேர் போட்டியிடுகிறார்கள். இவர்களில் பி.எல்.தேனப்பன், எந்த அணியையும் சேராமல் தனியாகவே களம் இறங்கியுள்ளார். இந்த தேர்தலில் மொத்தம் 26 பதவிகளுக்கு நிர்வாகிகள் மேலும் வாசிக்க …..

அதிமுக அரசியல் கட்சிகள் தமிழ்நாடு தேசியம் பாஜக வாக்கு & தேர்தல்

அமித்ஷாவின் தமிழகம் வருகைக்கு எதிராக டாப் டிரெண்டிங்கில் #GoBackAmitShah

அமித்ஷா தமிழகம் வருவதற்கு எதிராக ட்விட்டரில் #GoBackAmitShah ஹாஷ்டேக் டாப் டிரெண்டிங் ஆனது. மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக முன்னாள் தேசியத் தலைவருமான அமித்ஷா நவம்பர் 21 சென்னை வருகிறார். தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில் தமிழகத்திற்கு அமித்ஷா வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அமித்ஷா நவம்பர் 21 திருவள்ளூர் மாவட்டம், தேர்வாய்கண்டிகையில் ரூ.380 கோடி மதிப்பீட்டில் புதிய நீர்த்தேக்கத் திட்டத்தை தொடக்கி வைக்கிறார். மேலும் ரூ.61,843 கோடி மதிப்பீட்டில் சென்னை மெட்ரோ ரயில் மேலும் வாசிக்க …..

அரசியல் தமிழ்நாடு வாக்கு & தேர்தல்

தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு; சரிபார்ப்பு விவரங்கள் உள்ளே..

தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை தலைமை தேர்தல் அதிகாரி இன்று (நவம்பர் 16) வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் வரும் 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து வரைவு வாக்காளர் பட்டியலை தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ இன்று வெளியிட்டார். வாக்காளர் பட்டியல் விவரங்கள் அறிந்து கொள்ள: தலைமை தேர்தல் ஆணையம், தமிழ்நாடு இந்த பட்டியலில் மொத்தம் 6,10,44,358 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 3,01,12,370 பேர், பெண்கள் 3,09,25,603 மேலும் வாசிக்க …..

கட்சிகள் தேசியம் பாஜக வாக்கு & தேர்தல்

பாஜக மேடையில் காங்கிரஸுக்கு வாக்கு சேகரித்த பாஜக எம்பி சிந்தியா

காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த ஜோதிராதித்ய சிந்தியா, தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ் கட்சியின் கை சின்னத்துக்கு வாக்களியுங்கள் எனக் கூறியது பரபரப்பை ஏற்படுத்தி, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மத்தியப் பிரதேச அரசியலில், முன்னாள் முதல்வர் கமல்நாத்துக்கும், ஜோதிராதித்ய சிந்தியாவுக்கும் ஏற்பட்ட மோதலில், கடந்த மார்ச் மாதம் தனது ஆதரவாளர்களான 25 எம்எல்ஏக்கள் உடன் காங்கிரஸில் இருந்து விலகினார். அதைத்தொடர்ந்து, கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது. தற்போது அங்கு பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. மேலும் வாசிக்க …..

அரசியல் தமிழ்நாடு

ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்

தனது தேர்தல் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்டுள்ள வழக்கை நிராகரிக்கக் கோரி, எம்.பி.ரவீந்திரநாத் குமார் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து, வழக்கை எதிர்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்று முடிந்த லோக்சபா தேர்தலில், தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் அதிமுக 20 தொகுதிகளில் போட்டியிட்டது. ஆனால், தேனி தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்ற நிலையில், மற்ற அனைத்து தொகுதிகளிலும் படுதோல்வி அடைந்தது. தேனி தொகுதி பாராளுமன்ற வேட்பாளரான ஓபிஎஸ் மேலும் வாசிக்க …..

உலகம்

உடல்நலக் குறைவால் அரசு வேலைகள் பாதிக்கும்- ஜப்பான் பிரதமர் ராஜினாமா

ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே உடல்நலம் பாதிப்பு காரணமாக, அரசு வேலைகள் பாதிக்கப்படக் கூடாது என்பதால் பதவி விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது. 2012ம் ஆண்டு இரண்டாம் முறையாக ஜப்பான் பிரதமராக பதவி ஏற்ற பிரதமர் ஷின்சோ அபே (வயது 65) குடல் வீக்கம் மற்றும் அல்சர் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஜப்பானில் அதிக ஆண்டுகள் பிரதமர் பதவி வகித்தவர் என்ற பெருமை ஷின்சோவுக்கு உண்டு. இவரது உறவினர் இசாகு சாட்டோ 1964 முதல் மேலும் வாசிக்க …..

அரசியல் தேசியம்

சீன நிறுவனங்கள் துணையுடன் தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக மோடி அரசு…

தேர்தல் ஆணையத்திடம் பாஜக சமர்ப்பித்த செலவின கணக்குகளின் ஆதாரத்தோடு  பெற்ற தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர் சாகேத் கோகலே சீன நிறுவனங்களுடன் பாஜக கைகோர்த்து தேர்தலில் வெற்றி பெற்றிருப்பதை கண்டுபிடித்து இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலரான சாகேத் கோகலே, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெற்றப்பட்ட தகவல்களை பகிர்ந்துள்ளார். அதில், 2019 மக்களவைத் தேர்தலில், சீன அரசுடன் தொடர்புடைய ஆன்லைன் நிறுவனங்களுக்கு, தங்கள் 2019 தேர்தல் பிரச்சாரத்தை மேலும் வாசிக்க …..