Wednesday, October 27th, 2021

Tag: சமூகம்

கேரளா பேரிடர்: திமுக சார்பில் ரூ.1 கோடி நிவாரண நிதி அறிவிப்பு

பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநில மக்களுக்கு உதவிடும் வகையில் கேரள முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி வழங்கப்படும் என்று திமுக சார்பில் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். கேரளாவில் இடைவிடாது பெய்து வந்த மழையால் மாநிலமே வெள்ளக்காடானது. திருவனந்தபுரம், கோட்டயம், பத்தனம்திட்டா, இடுக்கி, கொல்லம்...

தமிழ்நாட்டில் புதிய 19 நகராட்சிகள்; மாநகராட்சியாக உயரும் கும்பகோணம்

தமிழ்நாட்டில் 19 புதிய நகராட்சிகளையும், கும்பகோணம் நகராட்சியை மாநகராட்சியாகவும் உருவாக்குவதற்கான உத்தரவை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் மக்கள் தொகை, பரப்பளவு உள்ளிட்டவை கொண்டு பேரூராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சிகளாக பிரிக்கப்படுகின்றன. அதன்படி தற்போது 15 மாநகராட்சிகள், 120 நகராட்சிகள், 528 பேரூராட்சிகள் உள்ளன. இவற்றின் வளர்ச்சியை பொருத்து...

பாகிஸ்தான், நேபாளத்தை விட மோசம்- உலக பட்டினிக் குறியீட்டில் 101வது இடத்தில் இந்தியா

அதிகமான மக்கள் பட்டினியால் வாடும் நாடுகளின் பட்டியலில் மொத்தமுள்ள 116 நாடுகளில் இந்தியா 101வது இடத்தில் உள்ளது. பாகிஸ்தான், நேபாளம், பங்களாதேஷைக்காட்டிலும் இந்தியா பின்தங்கியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Global Hunger Index எனப்படும் உலக பட்டினிக் குறியீடு (GHI) என்பது, ஊட்டச்சத்து குறைபாடு, குழந்தை எடை,...

பாம்பை கடிக்க வைத்து மனைவியை கொன்ற வழக்கு- கணவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

கேரளாவில் பாம்பை கடிக்க வைத்து மனைவியை கொன்ற நபருக்கு 17 ஆண்டு ஜெயில், இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் ரூ. 5 லட்சம் அபராதம் விதித்து கொல்லம் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் அஞ்சல் பகுதியை சேர்ந்த விஜய சேனன் என்பவரின் மகள் உத்ரா...

திருநங்கைகள் நல வாரியத்தின் உறுப்பினர்களாக 13 திருநங்கைள் நியமனம்- தமிழ்நாடு அரசு

திமுக அரசு அமைத்த திருநங்கைகள் நல வாரியத்தின் அலுவல் சாரா உறுப்பினர்களாக 13 திருநங்கைகளை நியமித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், “தமிழ்நாட்டில் உள்ள திருநங்கைகளுக்கு சமூக பாதுகாப்பை வழங்குவதற்குத் தேவையான திட்டங்களை வகுத்து சிறப்பான முறையில் செயல்படுத்தும் பொருட்டு,...

நடிகர் ஷாருக்கான் மகனுக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல்; மீண்டும் ஜாமின் மறுப்பு

சொகுசு கப்பலில் போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் கைதான நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கானுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அவரது ஜாமின் மனு மறுக்கப்பட்டுள்ளது. மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் போதைப்பொருள் விருந்து நிகழ்ச்சி நடப்பதாக...

சமையல் எரிவாயு விலை ரூ.915 ஆக உயர்வு- ஏழை, எளிய மக்களை வதைக்கிறதா ஒன்றிய அரசு!

சென்னையில் வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.900 என விற்கப்பட்டு வந்த நிலையில், தற்போது சிலிண்டருக்கு ரூ.15 உயர்த்தப்பட்டு ரூ.915 ஆக விற்கப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப எரிபொருட்களின் விலையில் மாற்றம் செய்யப்படுகின்றன. குறிப்பாக இந்தியாவில் மோடி தலைமையிலான பாஜக ஒன்றிய...

கல்வித்துறையில் மாநில உரிமையை மீட்டெடுப்போம்- 12 மாநில முதல்வர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

கல்வித் துறையில் மாநில அரசுகளின் உரிமையை மீட்டெடுக்க அனைவரும் ஒருங்கிணைய வேண்டும் என 12 மாநில முதலமைச்சர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கல்வித் துறையை நிருவகிப்பதில் மாநில அரசுகளின் முதன்மையை மீட்டெடுக்க வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தியும், அதற்குத் தேவையான ஒருங்கிணைந்த முயற்சியை...

உண்மையான இந்தியா கிராமங்களில் இருந்து உருவாகிறது- கிராம சபைக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின்

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள பாப்பாபட்டி கிராமத்தில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் பங்கேற்று பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உண்மையான இந்தியா கிராமங்களில் இருந்து தான் உருவாகிறது என்று தெரிவித்தார். முதலமைச்சராக பதவியேற்ற பின்பு முதல்முறையாக கிராம சபை கூட்டத்தில் பங்கேற்றுள்ளார் மு.க.ஸ்டாலின். பாப்பாபட்டி கிராம பஞ்சாயத்து...

காட்டுத்தீ போல் பரவிய வதந்தி- திடீரென 5 ரூபாய் பார்லே-ஜி பிஸ்கட் ரூ.50க்கு விற்பனை

பீகார் மாநிலத்தில் பரவிய வதந்தி காரணமாக, கடைகளில் ரூ 5 ஆக இருந்த ஒரு பாக்கெட் பார்லே-ஜி பிஸ்கட் ரூ 50-க்கு விற்கப்பட்ட போதும் பிஸ்கட் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியதால் பரபரப்பு ஏற்பட்டது. வட மாநிலங்களான பீகார், உத்தரப் பிரதேசம், ஜார்க்கண்ட் ஆகிய பகுதிகளில் ஆண்டுதோறும்...