கேரளா சமூகம் தமிழ்நாடு

கேரளாவில் பரவிவரும் பறவை காய்ச்சல் மனிதர்களுக்கும் பரவும்- தமிழக சுகாதாரத்துறை

கேரளாவில் பரவி வரும் பறவை காய்ச்சல் மனிதர்களுக்கும் வரலாம் என தமிழக சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் எச்சரித்து உள்ளார். கேரளாவில் பறவைக் காய்ச்சல் பரவி வருவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், ஆலப்புழா, கோட்டயம் ஆகிய மாவட்டங்களில் உயிரிழந்த வாத்துகளை பரிசோதித்ததில் பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டது. அதன் எதிரொலியாக கேரளாவை ஒட்டியுள்ள தமிழகத்தின் நீலகிரி மாவட்ட நிர்வாகம் கேரளாவிலிருந்து பறவைகள் கொண்டுவர தடை விதித்துள்ளது. கேரளாவில் இருந்து நீலகிரிக்கு வரும் வழியில் கீழ் நாடுகாணி, தாளூர், எருமாடு, பாட்டவயல், மேலும் வாசிக்க …..

கேரளா சமூகம் தமிழ்நாடு

பறவை காய்ச்சல் மாநில பேரிடராக அறிவிப்பு- கேரள அரசு

ஆலப்புழா, கோட்டயம் மாவட்டங்களில் பறவைக் காய்ச்சல் தீவிரமானதால், பறவை காய்ச்சலை மாநில பேரிடராக கேரள அரசு அறிவித்துள்ளது. கேரளாவில் ஆலப்புழா, கோட்டயம் ஆகிய மாவட்டங்களில் உயிரிழந்த வாத்துகளை பரிசோதித்ததில் பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டது. பறவை காய்ச்சலால் இதுவரை 12,000க்கும் மேற்பட்ட வாத்துகள் இறந்துள்ளன. இந்த நோய் இன்புளூயன்ஸா-ஏ வகை வைரஸால் ஏற்படுகிறது. வளர்ப்பு பறவைகளான கோழிகள், வான்கோழிகள், வாத்துகள் உள்ளிட்டவற்றின் கழிவுகள், மூக்கு, வாய், கண் இவற்றின் வழியாக பறவைக் காய்ச்சலை ஏற்படுத்தும் H5N8 வைரஸ் பரவுவதாக மேலும் வாசிக்க …..

அரசியல் சமூகம் தேசியம் பெண்கள் வாக்கு & தேர்தல்

தூய்மை பணியாளராக இருந்து பஞ்சாயத்து தலைவி; கேரள பெண் அசத்தல்

கேரளாவில் பஞ்சாயத்து அலுவலகத்தில் பகுதிநேர தூய்மை பணியாளராக இருந்து பஞ்சாயத்து தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பெண்ணிற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ளது பத்தனபுரம். இந்த பஞ்சாயத்து அலுவலகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக பகுதிநேர தூய்மை பணியாளராக பணிபுரிந்து வந்தவர் ஆனந்தவள்ளி (வயது 46). பட்டியலின பெண்ணான ஆனந்தவள்ளி பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்தியவர். இவரது கணவர் பெயிண்டராக உள்ளார். அண்மையில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக போட்டியிட்ட மேலும் வாசிக்க …..

அரசியல் இயற்கை கேரளா தேசியம் விவசாயம்

வேளாண் சட்டங்களை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றம்- கேரள முதல்வர்

மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக கேரள சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. வேளாண் சட்டங்கள் கார்ப்பரேட் நிறுவனக்களுக்கு ஆதரவாக உள்ளதாகவும் அதை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையை விவசாயிகள் தொடர்ந்து எழுப்பி வருகின்றனர். வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி, டெல்லியில் விவசாயிகள் 36 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளுடன் மத்திய மேலும் வாசிக்க …..

கேளிக்கை சினிமா

ஜேஎன்யு கதைக்களத்தில் பார்வதி நடித்த படத்துக்கு சென்சார் அனுமதி மறுப்பு

ஜேஎன்யு மையப்படுத்தும் கதைக்களத்தில் நடிகை பார்வதி நடிப்பில் உருவாகியுள்ள ‘வர்தமானம்’ மலையாள திரைப்படத்திற்கு, திரைப்பட சான்றிதழுக்கான மத்திய வாரியத்தின் கேரள மண்டலப் பிரிவு அனுமதி மறுத்துள்ளது. இயக்குனர் சித்தார்த் சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வர்தமானம்’ படத்தில் நடிகை பார்வதி கதாநாயகியாக நடித்துள்ளார். நடிகர்கள் ரோஷன் மேத்யூ மற்றும் டெய்ன் டேவிஸ் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். வர்தமானம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இந்த ஆண்டு மார்ச் மாதம் நடிகர் மம்முட்டியால் வெளியிடப்பட்டது. அதில் பார்வதி ஹிஜாப் மேலும் வாசிக்க …..

அரசியல் கேரளா தேசியம்

இந்தியாவின் இளம் மேயர்; திருவனந்தபுரத்தில் 21 வயது மாணவி சாதனை

கல்லூரியில் பிஎஸ்சி கணிதம் இரண்டாம் ஆண்டு படித்து வரும் மாணவி ஆர்யா ராஜேந்திரன் (வயது 21), திருவனந்தபுரம் மாநகராட்சி மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டு இந்தியாவிலேயே இளம் மேயர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். கேரள மாநில உள்ளாட்சித் தேர்தல் கடந்த 8, 10 மற்றும் 14 ஆம் தேதிகளில் மூன்று கட்டங்களாக நடந்து முடிந்து, வாக்குகள் கடந்த 16 ஆம் தேதி எண்ணப்பட்டன. அதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி வெற்றி பெற்றது. மாவட்டப் பஞ்சாயத்துக்களில் மொத்தமுள்ள மேலும் வாசிக்க …..

அரசியல் இயற்கை கேரளா தேசியம் விவசாயம்

நாட்டு மக்களுக்கு உணவளிக்கும் விவசாயிகளை மத்திய அரசு மதிக்கவில்லை- பினராயி விஜயன்

நாட்டு மக்களுக்கு உணவளிக்கும் விவசாயிகளை மத்திய அரசு மதிக்கவில்லை என கேரள முதல்வர் பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி டெல்லியில் விவசாயிகள் 28வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதராகவும், வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தியும் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தேசிய உழவர் தினமான இன்று (டிசம்பர் 23) திருவனந்தபுரத்தில் விவசாயிகள் அமைப்புகள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கேரள மேலும் வாசிக்க …..

அரசியல் கேரளா தேசியம்

கேரளாவில் மார்க்சிஸ்ட் கட்சி அபார வெற்றி

கேரள உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளானது பாஜகவுக்கு இம்மாநிலத்தில் இடம் இல்லை என்பதை தெளிவாக நிரூபித்திருக்கிறது என முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கேரளாவில் உள்ள 941 கிராம ஊராட்சிகள், 152 வட்டார பஞ்சாயத்து, 86 நகராட்சிகள், 6 மாநகராட்சிகள் மற்றும் 14 மாவட்ட ஊராட்சிகள் ஆகிய உள்ளாட்சி அமைப்புகளுக்கு, 3 கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி, 514 கிராம ஊராட்சிகள், 108 வட்டார பஞ்சாயத்துகள், 35 நகராட்சிகள், 10 மாவட்ட ஊராட்சிகள் மற்றும் மேலும் வாசிக்க …..

அரசியல் கேரளா சமூகம் பெண்கள்

கேரளாவில் போலீஸ் சட்டம் திருத்தத்துக்கு கடும் எதிர்ப்பு; நெருக்கடியில் பினராயி விஜயன்

கேரளாவில் கொண்டுவரப்பட்ட போலீஸ் சட்டம் திருத்தம் கடும் எதிர்ப்பு காரணமாக நிறுத்தி வைக்கப்படுவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. கேரளாவில் மகளிர், குழந்தைகளுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்புவதை தடுக்கும் வகையில் சட்டம் திருத்தம் செய்யப்பட்டது. அதில் இந்த சைபர் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க வகை செய்யப்பட்டுள்ளது. ஆனால், சட்ட திருத்தம் கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது என்று கடும் விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் கடும் எதிர்ப்பு காரணமாக, போலீஸ் சட்டத்தில் மேலும் வாசிக்க …..

கேரளா சமூகம் பெண்கள் வாழ்வியல்

சமூக வலைத்தளத்தில் தனிநபர் மீது அவதூறு பரப்பினால் 5 ஆண்டு சிறை: கேரள அரசு

பெண்கள்,குழந்தைகளுக்கு எதிராக சைபர் தாக்குதல்களைத் தடுக்கும் வகையில் கேரள போலீஸ் சட்டத்தில் திருத்தம் செய்து கேரள அரசு கொண்டு வந்த அவசரச் சட்டத்துக்கு ஆளுநர் ஆரிப் முகமது கான் ஒப்புதல் அளித்துள்ளார். கேரள போலீஸ் சட்டத்தில் பிரிவு 118ல் 118ஏ என்ற ஓர் பிரிவு கூடுதலாகச் சேர்க்கப்பட்டு, போலீஸாருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி ஒரு தனநபரின் மரியாதையை, மாண்பைக் குலைக்கும் உள்நோக்கத்துடன் சமூக வலைத்தளத்தில் கருத்துக்களைப் பரப்புதல், படங்களை பதிவேற்றம் செய்தல், ஷேர் செய்தல், அல்லது மேலும் வாசிக்க …..