கேரளாவில் அரசு பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள் யாரும் சத்தமாக செல்போன் பேசவோ, பாட்டு கேட்கவோ செய்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கேரள அரசு போக்குவரத்து கழகம் எச்சரித்துள்ளது.

ஒன்றிய அரசு சமீபத்தில் ரயில்களில் பயணம் செய்யும் பயணிகள் செல்போனில் சத்தமாக பேசுவது, பாடல் கேட்பது போன்ற சக பயணிகளை தொந்தரவு செய்யும் செயல்களுக்கு தடை விதித்தது.

இதன் தொடர்ச்சியாக கேரள அரசு பேருந்துகளிலும் பயணம் செய்யும் பயணிகள் செல்போனில் சத்தமாக பேசுவதால் சக பயணிகளுக்கு இடையூறு ஏற்படுவதாக கேரள அரசு போக்குவரத்து கழகத்திற்கு தொடர்ச்சியாக புகார்கள் வந்தது.

இந்நிலையில் நேற்று (19.2.2022) கேரள அரசு போக்குவரத்து கழகம் அனைத்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில் இனி கேரளாவில் அரசு பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள் யாரும் சத்தமாக செல்போன் பேசவோ, பாட்டு கேட்கவோ செய்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும் சக பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்துபவரை பற்றிய தகவல் தெரிவிக்க வசதியாக இந்த அறிவிப்பை அனைத்து பஸ்களின் தகவல் பலகையில் ஒட்ட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.