கேளிக்கை சமூகம் தமிழ்நாடு வாழ்வியல்

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மிக்கு தடை; மீறினால் ரூ.5,000 அபராதம், 6 மாதம் சிறை

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மிக்கு தடை விதித்து தமிழக அரசு கொண்டு வந்த அவசர சட்டத்திற்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் வழங்கி உள்ளார். கொரோனா நோய்த் தொற்றின் காரணமாக இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், இணையதள சேவைகள் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 24% அதிகரித்துள்ளது. அதில் குறிப்பாக ஆன்லைன் ரம்மி விளையாட்டால் பல இளைஞர்கள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் பல இளைஞர்கள் தற்கொலை செய்துள்ளனர். எனவே தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் எனக் கூறி மதுரை மேலும் வாசிக்க …..

உயர் நீதிமன்றம் சட்டம் தமிழ்நாடு

அரசின் இ- சேவை காகித அளவிலேயே உள்ளது- சென்னை உயர்நீதிமன்றம்

மக்களின் குறைகளுக்கு தீர்வு காண கொண்டுவரப்பட்ட அரசு இ- சேவை காகித அளவிலேயே உள்ளது என சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. நீலகிரி மாவட்டம் மசினகுடி என்னும் கிராமம் யானைகள் வழித்தடமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு டாஸ்மாக் கடைகள் தொடங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்குள்ள ஜெய்னுலாப்தீன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கு நவம்பர் 20 நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தபொது, டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மசினகுடிபகுதியில் மேலும் வாசிக்க …..

அரசியல் தமிழ்நாடு

தமிழக அரசு தடை விதித்தாலும், திட்டமிட்டபடி வேல் யாத்திரை நடைபெறும்- எல்.முருகன் உறுதி

வேல் யாத்திரை நடத்த 2 முறை உயர் நீதிமன்றம் தடை விதித்தும், நவம்பர் 17ஆம் தேதி முதல் திட்டமிட்டபடி தமிழகத்தில் யாத்திரை நடைபெறும் என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கூறியுள்ளார். தமிழக அரசு விதித்த தடையை மீறி, கடந்த நவம்பர் 6 ஆம் தேதி வேல் யாத்திரையை தொடங்கியது பாஜக. இதனையடுத்து யாத்திரைக்கு தடைகோரி உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், இது வேல் யாத்திரை அல்ல; அரசியல் யாத்திரை. இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட மேலும் வாசிக்க …..

அரசியல் உச்ச நீதிமன்றம் சட்டம்

அர்னாப் கோஸ்வாமியை உடனடியாக விடுவிக்க இடைக்கால ஜாமின்; உச்சநீதிமன்றம் உத்தரவு

ஆர்கிடெக்ட் அன்வய் நாயக் தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் கைது செய்யப்பட்ட அர்னாப் கோஸ்வாமிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது. 2018ம் ஆண்டு ஆர்கிடெக்ட் அன்வய் நாயக் மற்றும் அவரது தாயார் தற்கொலை செய்து கொண்டனர். அவரை தற்கொலைக்கு தூண்டியதாக அர்னாப் கோஸ்வாமியை, கடந்த 4ம் தேதி மும்பை காவல்துறை கைது செய்தது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அர்னாப்புக்கு 14 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது. பின்னர் தலேஜா மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டார். மும்பை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மேலும் வாசிக்க …..

அரசியல் உயர் நீதிமன்றம் கட்சிகள் சட்டம் தமிழ்நாடு பாஜக

இரண்டாவது மனுவுக்கும் அனுமதி மறுத்த உயர் நீதிமன்ற தீர்ப்பால் பாஜக கலக்கம்

பாஜக நடத்துவது வேல் யாத்திரை அல்ல; அரசியல் யாத்திரை என தமிழக டிஜிபி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்த நிலையில், யாத்திரைக்கு தடை வழங்ககூடாது என்ற பாஜகவின் கோரிக்கையை மீண்டும் சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது. நவம்பர் 6ம் தேதி முதல் டிசம்பர் 6ம் தேதி வரை தமிழகத்தில் வேல் யாத்திரை நடத்தபோவதாக தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் அறிவித்தார். இதனையடுத்து பாஜக நடத்த திட்டமிட்ட வேல் யாத்திரைக்கு தடை கோரிய வழக்கில் அனுமதி தர முடியாது மேலும் வாசிக்க …..

உயர் நீதிமன்றம் சட்டம் தமிழ்நாடு மருத்துவம்

சித்த மருத்துவர் தணிகாசலம் மீதான குண்டாஸ் வழக்கு- உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சித்த மருத்துவர் தணிகாச்சலம் மீது தமிழக அரசு போட்ட குண்டர் சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்துள்ளது. கொரோனா தொற்றை தடுக்க மருந்து கண்டுபிடித்துள்ளதாகவும், அதனை தமிழக அரசு புறக்கணிப்பவதாகவும் கூறி சமூக ஊடகங்களில் முதலமைச்சருக்கு எதிராக தணிகாச்சலம் வீடியோ பதிவு வெளியிட்டிருந்தார். இதனால் சுகாதாரத்துறை அதிகாரிகள் அளித்த புகாரின் அடிப்படையில் தணிகாச்சலத்தை கடந்த மே மாதம் 6 ஆம் தேதி சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். அத்துடன் மக்களிடம் மேலும் வாசிக்க …..

அரசியல் உயர் நீதிமன்றம் சட்டம்

அர்னாப் கோஸ்வாமிக்கு ஜாமீன் வழங்க மறுத்த மும்பை உயர் நீதிமன்றம்

அர்னாப் கோஸ்வாமிக்கு இடைக்கால ஜாமீன் வழங்க மறுத்து மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு அன்வய் நாயக் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் ரிபப்ளிக் டிவி நிறுவனர் அர்னாப் கோஸ்வாமி மீது இந்திய தண்டனைச் சட்டம் 306ன் கீழ் வழக்குப்பதிவு செய்து, கடந்த நவம்பர் 4 ஆம் தேதி அலிபாக் போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக பெரோஸ் சேக், நிதேஷ் சர்தா ஆகியோரையும் கைது செய்தனர். இதனையடுத்து அர்னாப் கோஸ்வாமி மேலும் வாசிக்க …..

உயர் நீதிமன்றம் சட்டம்

திருமாவளவன் பதவிப் பிரமாண உறுதிமொழி மீறிய வழக்கில் உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

மனுஸ்மிருதி சர்ச்சையில் தொல்.திருமாவளவனுக்கு எதிரான தாக்கல் செய்த வழக்கில், நீதிமன்றத்தை அரசியல் களமாக மாற்றாதீர்கள் எனக் கூறி சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் ஐரோப்பிய யூனியன் பெரியார் அம்பேத்கர் கூட்டமைப்பு சார்பில் நடத்தப்பட்ட காணொலி கருத்தரங்கில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், மனுதர்ம நூலை மேற்கோள் காட்டி பெண்கள் குறித்து சில கருத்துக்களை தெரிவித்திருந்தார். பெண்களைத் திருமாவளவன் இழிவுபடுத்திவிட்டதாக பாஜக, இந்து அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்தின. காவல் மேலும் வாசிக்க …..

உயர் நீதிமன்றம் கட்சிகள் சட்டம் பாஜக

கோயில்களே இல்லாத வழியில் வேல் யாத்திரை செல்வது ஏன்; நீதிமன்றம் கிடுக்குபிடி

வேல் யாத்திரைக்கு அனுமதி மறுத்த தமிழக டிஜிபி உத்தரவை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் பாஜக மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஹேமலதா அமர்வு முன்பு இன்று (நவம்பர் 7) நடைபெற்றது. இந்த மனு மீதான முதல் கட்ட விசாரணையின் போது, பாஜகவுக்கு குறைந்தபட்ச பொறுப்புணர்வு வேண்டும் என உயர்நீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தினர். மேலும், கோயில் சென்றவர்களில் பலர் முகக்கவசம் அணியவில்லை என்பதற்கு வீடியோ ஆதாரம் உள்ளது என தமிழக அரசு மேலும் வாசிக்க …..

உயர் நீதிமன்றம் சட்டம் சமூகம்

ஆன்லைன் சூதாட்ட வழக்கில் விராட் கோலி, கங்குலி, பிரகாஷ்ராஜ், தமன்னா, ராணா ஆகியோர்க்கு நீதிமன்றம் நோட்டீஸ்

ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என தொடரப்பட்ட வழக்கில், விளையாட்டு வீரர்கள் விராட் கோலி, கங்குலி மற்றும் பிரபலங்கள் பிரகாஷ்ராஜ், தமன்னா, ராணா டகுபதி, சுதீப் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் வழங்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. சமீப காலமாக தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு அதிக நபர்களால் விளையாடப்பட்டு வருகிறது. இதில் பணத்தை இழந்து சிலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்களும் அரங்கேறி வருகின்றது. இதுவரை 13 பேர் இந்த ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலை செய்துள்ளனர். மேலும் வாசிக்க …..