ஐரோப்பா கல்வி சமூகம்

சூரியசக்தியால் இயங்கும் இஸ்திரி பெட்டி; ஸ்வீடன் நாட்டின் விருது பெற்ற தமிழக மாணவி

தமிழகத்தை சேர்ந்த 9ம் வகுப்பு மாணவிக்கு ஸ்வீடன் நாட்டின் குழந்தைகளுக்கான சூழலியல் அறக்கட்டளை சாா்பில் இளம் வயது கண்டுபிடிப்பாளா்களுக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலையைச் சோ்ந்த 9-ஆம் வகுப்பு மாணவி வினிஷா உமாசங்கா், சூரியசக்தி மூலம் இயங்கும் இஸ்திரி பெட்டியைக் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளாா். இதுகுறித்து மாணவி வினிஷா பேசுகையில், எனக்கு 5 வயது இருக்கும் போது எனது தந்தை அறிவியல் களஞ்சிய புத்தகத்தை பரிசளித்தாா். அந்தப் புத்தக வாசிப்பின் மூலம் அறிவியல் மீதான ஆா்வம் எனக்கு நாள்தோறும் மேலும் வாசிக்க …..

கட்சிகள் கல்வி சமூகம் திமுக தேசியம் பாஜக

சமூக நீதியை, இடஒதுக்கீட்டை ஒழித்துக்கட்ட பாடுபடும் பாஜக அரசு- தலைவர்கள் கண்டனம்

மத்திய அரசின் 11 மருத்துவ கல்லூரிகளில் தனி நுழைவுத் தேர்வு நடத்த அனுமதித்துள்ளதால் நீட் தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், கல்வியாளர்களும் வலியுறுத்தியுள்ளனர். இது தொடர்பாக ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், நாடு முழுவதும் ஒரே மாதிரியான நுழைவுத் தேர்வு எனக் கூறி நீட்டைத் திணித்து விட்டு, மத்திய அரசின் மருத்துவக் கல்லூரிகளில் மட்டும் தனி நுழைவுத் தேர்வுக்கு மத்திய பாஜக அரசு அனுமதி மேலும் வாசிக்க …..

கல்வி சமூகம் தமிழ்நாடு

40% குறைக்கப்பட்ட பாடங்கள் குறித்து தெளிவாகக் கூறுங்கள்.. ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்

மாணவர்களுக்கு 40% பாடங்கள் குறைக்கப்பட்டாலும், எந்தெந்த பாடங்களை படிக்க வேண்டும் என்று உடனடியாக அறிவிக்குமாறு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக கல்வி நிறுவனங்கள் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டுள்ளன. தற்போது மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில், தொற்று காரணமாக, மாணவர்களின் பாடத்திட்டங்களை குறைக்க, கல்வியாளர்கள் கொண்ட குழுவை தமிழக அரசு நியமனம் செய்தது. இக்குழு, நடப்பு கல்வி ஆண்டிற்கான 40% பாடத்திட்டங்களை குறைக்க பரிந்துரைத்தது. அதன்படி குறைக்கப்பட்ட மேலும் வாசிக்க …..

கட்சிகள் கல்வி சமூகம் தேசியம் பாஜக

மத்திய அரசின் கல்வி நிறுவனங்களுக்கு மட்டும் தனி நுழைவுத் தேர்வு- வலுக்கும் கண்டனங்கள்

மத்திய பாஜக அரசு, மத்திய அரசின் கல்வி நிறுவனங்களுக்கு மட்டும் ‘INI-CET’ எனும் தனி நுழைவுத் தேர்வை அறிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எய்ம்ஸ், ஜிப்மர் உள்ளிட்ட 11 கல்லூரிகளுக்கு நாட்டின் சீர்மிகு கல்வி நிறுவனங்கள் என அந்தஸ்து அளித்து, இந்த கல்லூரிகளில் எம்.டி., எம்.எஸ் உள்ளிட்ட உயர் மருத்துவப் படிப்புகளில் சேர ‘INI-CET’ எனும் பெயரில் தனி நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது இந்நிலையில் மருத்துவ முதுநிலைப் படிப்புகளுக்கான நீட் தேர்விலிருந்து மாநிலங்களுக்கு மேலும் வாசிக்க …..

இயற்கை சுற்றுச்சூழல் வாழ்வியல்

கனமழை: பழைய கட்டடங்களில் வசிப்போருக்கு எச்சரிக்கை!

தமிழகத்தில் தொடர்ந்து பரவலாக கனமழை பெய்து வருவதால் பழைய கட்டிடங்களில் தங்குவதோ, அருகில் செல்லவோ வேண்டாம் என்று தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. தமிழகம், புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் அடுத்த 24 மணிநேரத்தில் கடலூர், மயிலாடுதுறை ,நாகை, தூத்துக்குடி மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், அதேபோல் விழுப்புரம், கள்ளக்குறிச்சி ,நெல்லை, மதுரை, மேலும் வாசிக்க …..

சமூகம் தமிழ்நாடு வாழ்வியல்

கொரோனா காலத்திலும் அசராத குடிமகன்கள்; உச்சம் தொட்ட டாஸ்மாக் விற்பனை

தமிழகத்தில் தீபாவளியை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளில் 2 நாட்களில் மட்டும் ரூ.466 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளன. தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்களில் மது விற்பனைக்காக டாஸ்மாக் கடைகளுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இதனால் மதுபான கடைகளில் வழக்கமான நேரங்களைக் காட்டிலும் கூடுதல் நேரம் மற்றும் விலைக்கும் மதுவிற்பனை தொடர்கிறது. ஆனாலும் ஒவ்வொரு பண்டிகையைவிடவும் அடுத்த பண்டிகையில் விற்பனை அதிகரித்துக் கொண்டே உள்ளது. கொரோனா நெருக்கடி காரணமாக பொருளாதார தேக்கநிலை உருவாகியுள்ளது எனக் கூறப்படும் நிலையில், முந்தைய மேலும் வாசிக்க …..

சமூகம்

சானிடைசர் பயன்படுத்திய கைகளால் பட்டாசு வெடிக்காதீர்கள்- மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கை

சானிடைசர் பயன்படுத்திய கைகளால் பட்டாசு வெடிக்காதீர்கள் என்று மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கடந்த பத்து மாதங்களாக கொரோனா பெருந்தொற்று காரணமாக அனைவரின் வீட்டிலும் ஆல்கஹால் கலந்த சானிடைசர் பழக்கத்தில் உள்ளது. சானிடைசர் சிறப்பாக செயல்படுவதற்காக அதில் ஆல்கஹால் கலக்கப்படுகிறது. ஆல்கஹால் எளிதில் தீப்பற்றக்கூடிய திரவம். ஆகவே கைகளில் சானிடைசர்களை உபயோகித்து விட்டு தீபங்கள், மத்தாப்புகள், வெடிகள் போன்றவற்றைத் தொடுவதை தவிர்க்க வேண்டும். மேலும், வீட்டிலும் சானிடைசரையை தீபங்கள் மற்றும் பட்டாசுகளுடன் ஒன்றாக வைக்கக்கூடாது என்று அறிவுறுத்துகிறார்கள் மேலும் வாசிக்க …..

அரசியல் கட்சிகள் கல்வி சமூகம் திமுக தேசியம் பாஜக

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழைக் கற்பிக்க நிபந்தனையா.. மு.க.ஸ்டாலின் கண்டனம்

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் கற்பிக்க தடை போடுவதை கைவிட்டு, தமிழ் மொழியின் மீதுள்ள வெறுப்புணர்வை பாஜக அரசு கைவிட வேண்டும் என விமர்சித்துள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். இதுதொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒரு வகுப்பில் 20 மாணவர்கள் விரும்பினால் மட்டுமே தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் பயிற்றுவிக்கப்படும் என்று மத்திய பாஜக அரசு, ‘தமிழுக்குத் தனியொரு விதி’ உருவாக்கி அறிவித்திருப்பதற்கு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மேலும் வாசிக்க …..

ஆன்மிகம் சமூகம்

திருவண்ணாமலை தீபத் திருவிழா, கிரிவலத்தில் பக்தர்கள் பங்கேற்க தடை- மாவட்ட ஆட்சியர்

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தன்று பக்தர்கள் விழாவில் பங்கேற்கவும், தொடர்ந்து வரும் பவுர்ணமி கிரிவலத்துக்கும் தடை விதித்து மாவட்ட ஆட்சியர் கந்தசாமி உத்தரவிட்டுள்ளார். திருவண்ணாமலை நீர், நிலம், நெருப்பு, வாயு, ஆகாயம் என்று சொல்லக்கூடிய பஞ்ச பூதங்களில் நெருப்பிற்கான ஸ்தலம். விஷ்ணுபகவானுக்கும், பிரம்மாவுக்கும் ஜோதிவடிவாக காட்சி கொடுத்த ஸ்தலமே திருவண்ணாமலை. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா உலக பிரசித்திபெற்றது. 12 நாட்கள் நடைபெறும் தீபத் திருவிழாவானது கொடியேற்றத்துடன் தொடங்கி, 10வது நாளன்று பரணி தீபம் மற்றும் மேலும் வாசிக்க …..