கல்வி சமூகம் தமிழ்நாடு தேசியம்

அஞ்சலக தேர்வை தமிழிலும் எழுதலாம்; மத்திய அரசு பல்டி

அஞ்சலக கணக்கர் தேர்வு எழுதும் மொழி பட்டியலில் ஆங்கிலம், இந்தி மொழிகள் மட்டுமே இடம்பெற்றதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், தற்போது அஞ்சல் அலுவலக தேர்வுகளை தமிழிலும் எழுதலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அஞ்சல் துறையில் உள்ள கணக்கர் (Accountant) வேலைக்கான தேர்வுகள் வருகிற பிப்ரவரி 14 ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பில் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகள் மட்டும் இடம் பெற்றிருந்தது. மத்திய அரசின் இந்த அறிவிப்பு தமிழக மக்களிடையே மேலும் வாசிக்க …..

சமூகம் தமிழ்நாடு தேசியம் மருத்துவம்

ஜனவரி 31 முதல் போலியோ சொட்டு மருந்து முகாம்

நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம், ஜனவரி 31 ஆம் தேதி முதல் நடைபெறும் என மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்து உள்ளது. போலியோ நோயை முற்றிலும் ஒழிப்பதற்காக, 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்தாண்டும் போலியோ சொட்டு மருந்து முகாம், வருகிற 17 ஆம் தேதி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், நாடு முழுவதும் நாளை (ஜனவரி 16) கொரோனா தடுப்பூசி மேலும் வாசிக்க …..

இயற்கை சமூகம் தமிழ்நாடு விவசாயம்

திமுக ஆட்சி அமைந்ததும் கல்விக் கடன், விவசாயக் கடன், நகைக்கடன் தள்ளுபடி உறுதி- மு.க.ஸ்டாலின்

திமுக ஆட்சி அமைந்ததும், அனைத்து விவசாயிகளின் விவசாயக் கடன்கள், நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “தமிழர் திருநாளில் அனைவருக்கும் பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள். உலகின் அச்சாணியான உழவுத் தொழிலைப் போற்றும் தமிழர்களின் பண்பாட்டுத் திருவிழாவான பொங்கல் நன்னாளும், திருவள்ளுவர் ஆண்டுக் கணக்கின் தொடக்கமுமான தமிழ்ப் புத்தாண்டும் இணைந்து வரும் தை-1 தமிழர் திருநாளில் தமிழக மக்கள் அனைவருக்கும் மேலும் வாசிக்க …..

சட்டம் சமூகம் தமிழ்நாடு பெண்கள்

யூடியூப் சேனல்கள் மீது கடும் நடவடிக்கை உறுதி- எச்சரிக்கும் சென்னை காவல் ஆணையர்

யூடியூப் சேனலில், ஆபாசமாக பேட்டிகளை ஒளிபரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகர காவல்துறை ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் எச்சரித்துள்ளார். யூடியூப் சேனல்கள் சில பொது இடங்களில் பெண்கள், இளைஞர்களிடம் கருத்துக் கேட்பு என்ற பெயரில் கேள்விகளைக் கேட்டு அதற்கு ஆபாசமான பதில்களைப் பெற முயற்சிப்பதையே முழுநேர வேலையாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றன. இதுபோன்று செயல்பட்டு வந்த ‘சென்னை டாக்ஸ்’ என்ற யூடியூப் சேனலின் மீது சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட மேலும் வாசிக்க …..

சமூகம் தேசியம்

உலக தமிழர்கள் அனைவருக்கும் ஸ்பெல்கோவின் தமிழ் புத்தாண்டு, தைப் பொங்கல் வாழ்த்துகள்

அன்பிற்குரிய உலக தமிழர்கள் அனைவருக்கும் ஸ்பெல்கோவின் இதயம் கனிந்த தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்! அறுவடைத் திருநாளாம் பொங்கல் நன்னாளில், தமிழர்கள் வாழ்வில் அன்பும் அமைதியும் நிலவட்டும், நலமும், வளமும் பெருகட்டும். அனைவருக்கும் உடல்நலத்தையும், மகிழ்ச்சியையும் தரட்டும். கடினமாக உழைத்து வரும் நமது விவசாய பெருங்குடி மக்களின் வாழ்வில் வளத்தை கொண்டு வந்து சேர்க்கட்டும் பொங்கல் திருநாள் மக்கள் வாழ்வில் திருப்பத்தை ஏற்படுத்தி ஒளிமயமான எதிர்காலம் உருவாக்க நல்வாழ்த்துகள்

கல்வி சமூகம் தமிழ்நாடு பெண்கள்

எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் மருத்துவ மாணவி தற்கொலையால் பரபரப்பு

காட்டாங்கொளத்தூரில் இயங்கிவரும் எஸ்ஆர்எம் கல்லூரி விடுதியில் தங்கி இருந்த மருத்துவ மாணவி தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை புறநகர் காட்டாங்கொளத்தூரில் அமைந்துள்ளது எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம். இதன் நிறுவனர் பாரிவேந்தர் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் ஆண்டுதோறும் பலர் தற்கொலை செய்துகொள்வதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகிறது. 2019-20 ஆம் கல்வியாண்டில் மட்டும் எஸ்ஆர்எம் கல்வி நிறுவனத்தில் 4 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். 2 மாதங்களில் 3 தற்கொலை சம்பவங்கள் நடந்தேறிய சம்பவங்கள் மேலும் வாசிக்க …..

அதிமுக அரசியல் கட்சிகள் சமூகம் தமிழ்நாடு

செய்தியாளரின் மைக்கை தூக்கி வீசிய அமைச்சர் விஜயபாஸ்கர்- வலுக்கும் கண்டனங்கள்

செய்தியாளரின் மைக்கை தூக்கி வீசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு, பத்திரிகையாளர்கள், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட பலரும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதி எம்எல்ஏ ஆவார். சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஒவ்வொரு தொகுதி எம்எல்ஏக்களும், அமைச்சர்களும் தங்கள் தொகுதியில் மீண்டும் போட்டியிட பல்வேறு நலத்திட்ட உதவிகளை தீவிரமாக செய்து வருகிறார்கள். அந்தவகையில் அமைச்சர் விஜயபாஸ்கர் தனது விராலிமலை தொகுதியில் பொதுமக்களுக்கு தனது புகைப்படத்துடன் மேலும் வாசிக்க …..

கல்வி சமூகம் தமிழ்நாடு

ஜனவரி 19 முதல் பள்ளிகள் திறப்பு உறுதி- தமிழக அரசு

தமிழகத்தில் ஜனவரி 19 ஆம் தேதி முதல் 10, 12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும்; அனைத்து மாணவர்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வைட்டமின் மாத்திரைகள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் 2020 மார்ச் 25 ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்பட்டன. அதனையடுத்து ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில், தமிழகத்தில் பள்ளிகளை திறக்க பெற்றோர்கள், மாணவர்களுடன் மேலும் வாசிக்க …..

சமூகம் தமிழ்நாடு பயணம்

பொங்கல் பண்டிகை: தமிழகத்தில் 16,221 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

ஜனவரி 14 ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொது மக்களின் வசதிக்காக, 16,221 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து 11, 12, 13 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் 10,228 பேருந்துகளில் 11ஆம் தேதி 2,226 பேருந்துகளும், 12ஆம் தேதி 4,000 பேருந்துகளும், 13ஆம் தேதி 4,002 பேருந்துகளும் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படுகின்றன. மேலும், பல்வேறு மாவட்டங்களிலிருந்து 5,993 பேருந்துகள் என ஆக மொத்தம் 16,221 பேருந்துகள் மேலும் வாசிக்க …..

அரசியல் கட்சிகள் சமூகம் தமிழ்நாடு திமுக பெண்கள்

பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகள் அனைவரும் கைதாகும் வரை போராட்டம் தொடரும்- திமுக கனிமொழி

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடைய அனைத்து நபர்களையும் கைது செய்யக்கோரி, திமுக சார்பில் இன்று மகளிரணிச் செயலாளர் கனிமொழி எம்.பி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பொள்ளாச்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய கனிமொழி எம்.பி., “தமிழகத்தில் பாலியல் கொடுமை, பெண் வன்கொடுமை அதிகரித்து வருகின்றது. பொள்ளாச்சி வழக்கில் பாதிக்கப்பட்டவரின் பெயர்களை காவல்துறையே கூறியது. இன்று வரை அந்த கும்பல் பாதிக்கப்பட்டவர்களை மிரட்டி வருகின்றனர். ஆளுங்கட்சியினர் தங்களை காப்பாற்றி கொள்ள வேண்டும் என நினைக்கின்றனர். அதிமுகவினருடனான ஆதாரங்கள் மேலும் வாசிக்க …..