உயர் நீதிமன்றம் சட்டம் தமிழ்நாடு

தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ள உத்தரவில் தலையிட முடியாது- உயர்நீதிமன்றம்

விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபடுவதற்கும், ஊர்வலமாக எடுத்துச் செல்வதற்கும் தமிழ்நாடு அரசு விதித்த தடை உத்தரவில் தலையிட முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த கணபதி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், “கடந்த 30 ஆம் தேதி தமிழ்நாடு அரசு, விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபடுவதற்கும் ஊர்வலமாக எடுத்துச் செல்வதற்கும் தடை விதித்துள்ளது. தமிழ்நாடு அரசின் இந்த உத்தரவை ரத்து செய்ய மேலும் வாசிக்க …..

அரசியல் உயர் நீதிமன்றம் கர்நாடகா சட்டம்

சிறையில் சசிகலாவிற்கு சொகுசு வசதி செய்து கொடுத்த வழக்கு; கர்நாடக அரசுக்கு 30 நாள் கெடு

பெங்களூரு சிறையில் சசிகலாவிடம் லஞ்சம் பெற்று சொகுசு வசதி செய்து கொடுத்த புகாரில் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் முதன்மை செயலாளர் ஆஜராக நேரிடும் என்று கர்நாடக அரசுக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு நகரில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்த சசிகலாவுக்கு லஞ்சம் பெற்று கொண்டு சொகுசு வசதி செய்து கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக கர்நாடக மாநில லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மேலும் வாசிக்க …..

உச்ச நீதிமன்றம் உயர் நீதிமன்றம் சட்டம் தேசியம்

உச்சநீதிமன்ற தீர்ப்புகளை ஒன்றிய அரசு மதிப்பதே இல்லை- தலைமை நீதிபதி ரமணா

ஒன்றிய அரசு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளை மதிப்பதே இல்லை. எங்களுடைய பொறுமையை இனியும் சோதிக்க வேண்டாம் என தலைமை நீதிபதி என்.வி.ரமணா கடுமையாக விமர்சித்துள்ளார். சமீப காலமாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்து வரும் கருத்துகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்துகின்றன. டெல்லியில் கடந்த மாதம் தேசிய சட்டசேவைகள் ஆணைய நிகழ்ச்சியில் பேசிய தலைமை நீதிபதி என்.வி.ரமணா, காவல்நிலைய லாக்கப் மரணங்களை கடுமையாக விமர்சித்தார். அதன் பின்னர் நாடாளுமன்றத்தின் செயல்பாடுகளையும் தலைமை நீதிபதி என்.வி.ரமணா விமர்சித்தார். நாட்டின் மேலும் வாசிக்க …..

அரசியல் உச்ச நீதிமன்றம் உயர் நீதிமன்றம் சட்டம் தமிழ்நாடு

கொடநாடு வழக்கில் மேல் விசாரணைக்கு தடையில்லை- உச்சநீதிமன்றம் அதிரடி

கொடநாடு வழக்கு தொடர்பாக உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து காவல்துறையின் மேல் விசாரணைக்கு தடை விதிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் மேல் விசாரணையை தொடங்கியுள்ளது தமிழ்நாடு காவல்துறை. இந்த வழக்கில் சாட்சியங்களிடம் மீண்டும் வாக்குமூலம் பெற்று விசாரணை செய்ய திட்டமிட்டுள்ளது. ஆனால் இந்த மேல் விசாரணைக்கு அதிமுக எடப்பாடி பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனிடையே கொடநாடு வழக்கின் சாட்சியான அனுபவ் மேலும் வாசிக்க …..

உயர் நீதிமன்றம் சட்டம் தமிழ்நாடு

முதல்வர் மு.க.ஸ்டாலினை பாராட்டிய உயர்நீதிமன்றம்!

பள்ளி மாணவர்களின் புத்தகப் பைகள் உள்ளிட்ட பொருட்களில் அரசியல் கட்சித் தலைவர்களின் படங்களை அச்சிட்டு, அரசு நிதியை வீணாக்க கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் ‘நமது திராவிட இயக்கம்’ என்ற அமைப்பின் தலைவர் ஓவியம் ராஜன் என்பவர் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், “தற்போது இருப்பில் உள்ள பாடப் புத்தகங்கள், நோட்டுகள், பைகள் உள்ளிட்டவற்றில் முன்னாள் முதலமைச்சர்கள் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி படங்கள் இருப்பதனால் அவற்றை மேலும் வாசிக்க …..

உயர் நீதிமன்றம் சட்டம் சமூகம் தமிழ்நாடு பெண்கள்

மன்னிப்பு கேட்டால் சரியாகிவிடுமா.. எஸ்வி.சேகர் மீது நீதிமன்றம் கடும் தாக்கு

பெண் பத்திரிகையாளர்கள் குறித்து தரக்குறைவான கருத்தை பகிர்ந்த நடிகர் எஸ்.வி.சேகர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை மறுப்புத் தெரிவித்துள்ளது. பாஜக பிரமுகரும் நடிகருமான எஸ்.வி.சேகர் கடந்த 2018 ஆம் ஆண்டு பெண் பத்திரிகையாளர்கள் பணிபுரிவது குறித்து தரக்குறைவான கருத்தை தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதனைத்தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பலர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். அதனடிப்படையில் இந்திய தண்டனைச் சட்டத்தின் 3 பிரிவுகள் மேலும் வாசிக்க …..

அதிமுக அரசியல் உயர் நீதிமன்றம் சட்டம் தமிழ்நாடு

கொடநாடு வழக்கு: மேல் விசாரணைக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு

கொடநாடு வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தாலும் உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்க மேல் விசாரணைக்கு தடை இல்லை என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மறைந்த ஜெயலலிதாவிற்கு சொந்தமாக நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே 904 ஏக்கரில் கொடநாடு பங்களா மற்றும் எஸ்டேட் உள்ளது. கடந்த எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சியில் 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதி சிலர், இந்த கொடநாடு எஸ்டேட்டில் இருந்த காவலாளியை கொலை செய்துவிட்டு அங்கிருந்து பல பொருட்களை கொள்ளையடித்துச் மேலும் வாசிக்க …..

அரசியல் உயர் நீதிமன்றம் சட்டம் தமிழ்நாடு

சொத்து குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டவர் சசிகலா; வருமான வரித்துறை ‘செக்’!

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா தண்டிக்கப்பட்டுள்ளதால், 48 லட்ச ரூபாய் வருமான வரி அபராதத்தை கைவிட முடியாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. சசிகலா கடந்த 1994-95 ஆம் ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கு தாக்கலில், 28 லட்சத்து 86 ஆயிரம் ரூபாய்க்குக் கணக்கு தாக்கல் செய்திருந்தார். அதைத் தொடர்ந்து, நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில், சசிகலா அதே நிதியாண்டில் 80 ஏக்கர் நிலத்தை வாங்கி, கணக்கில் காட்டாமல் மறைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. வருமானத்துக்கு மேலும் வாசிக்க …..

உயர் நீதிமன்றம் கேளிக்கை சட்டம் சினிமா தமிழ்நாடு

புழல் சிறையில் உள்ள நடிகை மீரா மிதுன் ஜாமீன் மனு- நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்கில் கைதான நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் ஜாமீன் கோரிய வழக்கை விசாரணை செய்த சென்னை முதன்மை அமர்வு நீதிபதி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். நடிகை மீரா மிதுன், பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக பேசி சமூக வலைத்தளத்தில்வீடியோ ஒன்றை வெளியிட்டார். இது தொடர்பாக அவர் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் காவல்துறையில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் வன்கொடுமை தடுப்பு சட்டம், கலகத்தை மேலும் வாசிக்க …..

அதிமுக உச்ச நீதிமன்றம் உயர் நீதிமன்றம் சட்டம் தமிழ்நாடு

சொத்துக் குவிப்பு வழக்கு: முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு நீதிமன்றம் கடும் கண்டனம்

சொத்துக் குவிப்பு வழக்கில் தொடர்ந்து வாய்தா கேட்ட முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு சென்னை உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடந்த 2011 முதல் 2013 வரை வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தல்லாகுளத்தைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர் 2013ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில், ராஜபாளையம் அருகே தேவதானத்தில் 74 லட்சம் ரூபாய் மேலும் வாசிக்க …..