உலகம் கொரானா சமூகம் சீனா

சீனாவின் 2வது கொரோனா தடுப்பூசி ‘சினோவாக்’- WHO அனுமதி

சீனாவின் சீனோபார்ம் என்ற கொரோனா தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் வழங்கிய நிலையில், தற்போது சினோவாக் பயோடெக் நிறுவனம் தயாரித்த தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்துள்ளது. உலகளவில் பைசர்-பயோஎன்டெக், மாடர்னா, ஜான்சன் & ஜான்சன், அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசிகளுக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும் கடந்த மாதம் சீனாவின் சீனோபார்ம் தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கியிருந்தது. இந்நிலையில், இன்று சீனாவில் 2வது கொரோனா தடுப்பூசியான சீனோவேக்- கொரோனாவேக் என்ற தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்கு பயன்படுத்திக் கொள்ள உலக மேலும் வாசிக்க …..

கொரானா சீனா

உலக சுகாதார அமைப்பின் ‘கோவாக்ஸ்’ கூட்டணியில் சீனா இணைந்தது

கரோனா தடுப்பூசிகளை அனைத்து நாடுகளுக்கும் சரிசமமாகப் பகிரிந்து விநியோகிப்பதற்காக ஐ.நா.வின் உலக சுகாதார அமைப்பு அமைத்துள்ள ‘கோவாக்ஸ்’ கூட்டணியில் சீனாவும் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளது.   இதுகுறித்து சீன வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹூவா சன்யிங் வெள்ளிக்கிழமை கூறியதாவது:   கோவாக்ஸ் திட்டத்தில் சீனா அதிகாரப்பூர்வமாக இணைவதற்கான ஒப்பந்தம் வியாழக்கிழமை கையெழுத்தானது. அந்த ஒப்பந்தத்தில் சீன அரசும் தடுப்பு மருந்துகள் மற்றும் நோய்த்தடுப்புக்கான சர்வதேச கூட்டணி (கவி) அமைப்பும் கையெழுத்திட்டுள்ளன.   அனைத்து தரப்பினருக்கும் மருத்துவ மேலும் வாசிக்க …..

உலகம் சீனா

தடைசெய்யப்பட்ட பப்ஜி விளையாட்டிற்கு பதிலாக FAU-G கேம்மை அறிமுகப்படுத்திய அக்சய் குமார்

பப்ஜி உள்பட 118 சீன செயலிகள் கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் இந்தியாவில் உள்ள ஆப்பிள் ஆப் ஸ்டோரிலிருந்து அதிரடியாக அகற்றப்பட்டுள்ளது. இநதியா சீனா இடையே ஏற்பட்ட எல்லை மோதலைத் தொடர்ந்து, சீனாவுக்கு பொருளாதார ரீதியாக பாதிப்பை உருவாக்குவதற்காக, சீனாவின் மொபைல் செயலிகளுக்கு அதிரடியாக தடை விதித்தது மத்திய அரசு. ஏற்கனவே டிக்டாக் உள்பட மொபைல் செயலிகள் முதற்கட்டமாக தடை விதிக்கப்பட்ட நிலையில், 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பயன்பாட்டாளர்கள் உள்ள பிரபல கேம் விளையாட்டான பப்ஜி விளையாட்டுக்கும் மேலும் வாசிக்க …..

உலகம் சீனா தேசியம்

லடாக் எல்லை பிரச்சனையால் 118 சீன செயலிகள் தடை – மத்திய அரசு அதிரடி

லடாக் எல்லையில் இந்தியா – சீனா இடையே மோதல் ஏற்பட்டதையடுத்து, இந்தியாவின் தகவல்களை பாதுகாக்கும் வகையில் டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு இந்தியாவில் தடைவிதிப்பதாக அறிவித்தது மத்திய அரசு. இந்நிலையில் தற்போது பப்ஜி உள்ளிட்ட மேலும் 118 சீன செயலிகளுக்கு தடை விதிப்பதாக மத்திய அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. இந்தியாவில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பயன்பாட்டாளர்கள் பப்ஜி கேமை விளையாடிவருவது குறிப்பிடத்தக்கது. இந்த செயலிகள் தடைக்கு காரணம் இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, இந்தியாவின் பாதுகாப்பு, மேலும் வாசிக்க …..

அமெரிக்கா உலகம் சீனா

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முடிவிற்கு எதிராக வழக்குத் தொடரும் டிக்டாக்

அமெரிக்கா- சீனா இடையிலான வர்த்தகப் போரில் அதிபர் ட்ரம்ப், அமெரிக்க நிறுவனத்திற்கு டிக்டாக்கினை விற்க வேண்டும், இல்லையென்றால் டிக்டாக்கிற்கு அமெரிக்காவில் தடைவிதிக்கப்படும் என அறிவித்தார். இதற்கு சீனத் தரப்பில் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்தன. இதனிடையே அமெரிக்காவில் ஆகஸ்ட் 6 ஆம் தேதி முதல் 45 நாட்களுக்குள் டிக்டாக் செயலி தடைசெய்யப்படும் ட்ரம்ப் அறிவித்தார். ட்ரம்பின் முடிவை கடுமையாக எதிர்த்து டிக்டாக் நிறுவனம். இருப்பினும் ட்ரம்ப், டிக்டாக் செயலி மீதான தடையை மேலும் 90 நாட்களுக்கு நீட்டித்தார். மேலும் வாசிக்க …..

உலகம் சீனா

நேபாளத்தின் அயோத்தியாபுரி தான் ராமர் பிறந்த இடம்; உறுதியாகச் சொல்லும் பிரதமர் ஒலி

ராமர் நேபாளத்தின் அயோத்தியாபுரி என்ற இடத்தில்தான் பிறந்தார்; இந்தியாவின் உத்தரப்பிரதேசத்து அயோத்தியில் ராமர் பிறக்கவில்லை என நேபாள பிரதமர் கேபி. ஷர்மா ஒலி மீண்டும் கூறியிருப்பது சர்ச்சையை அதிகரித்துள்ளது. இந்தியா குறித்து தொடர் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறார் நேபாள பிரதமர் ஒலி. முதலில் இந்திய நிலப்பகுதிகளை சொந்தம் கொண்டாடி நேபாள வரைபடத்தில் இணைத்தார். அதனைத் தொடர்ந்து ராமர், நேபாளத்தில் தான் பிறந்தார் எனக் கூறி சர்ச்சைக்கு வித்திட்டார். இந்நிலையில் கடந்த 5-ந் தேதி உத்தரப்பிரதேசத்தின் அயோத்தியில் பிரமாண்ட மேலும் வாசிக்க …..

ஆசியா கருத்துக்கள் குரல்கள் சமூகம் சீனா தேசியம்

சீன எதிர்ப்பில் தலாய் லாமாவும் இந்தியாவின் பங்கும் ..

நேரு ஆட்சி காலத்தில் 1947- 1963 களில் இந்தியா கிழக்கு திபெத் ஒன்றில் சாதரண விவசாய குடும்பத்தில் பிறந்த தொந்துபிப் லாமோ (லாமோ தொந்துப்) ஜுலை 6-1935 ல் பதினான்காம் தலாய் லாமாவாக டென்சின் கியாட்சோ என்ற பெயரில் சமயப் பெரியோர்களால் நியமிக்கபட்டார்.   தனது நான்காம் வயதில் பிரமாண்டமான பொட்லா அரண்மனையில் தலாய் லாமாவாக நியமிக்க பட்ட இவர், தனது பதினான்காம் வயதிலேயே அனைத்துத் துறைகளிலிலும் சிறந்து விளங்கும் திபெத்தின் தலைசிறந்த தலாய் லாமாவாக உயர்ந்தார். மேலும் வாசிக்க …..

உலகம் சீனா

கொரோனா வைரஸை அடுத்து சீனாவில் விஸ்வரூபம் எடுக்கும் பாக்டீரியா தொற்று…

2020 ஆம் ஆண்டு நோய்த் தொற்றின் ஆண்டாகவே மாறியுள்ளது. சீனாவின் வுஹான் மாகாணத்தில் உள்ள சந்தையில் இருந்து கொரோனா என்னும் வைரஸ் பரவ ஆரம்பித்து, தற்போது உலகம் முழுவதும் மோசமாக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் சீனாவின் பயனூர் பகுதியில் உள்ள சிலர் புபோனிக் அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனவே சீனாவின் பயனூர், மங்கோலியா போன்ற பகுதிகளில் புபோனிக் பிளேக் பரவல் ஏற்பட வாய்ப்புள்ளதால், இந்த பகுதிகளில் மூன்றாம் கட்ட மேலும் வாசிக்க …..

உலகம் சீனா தேசியம் தொழில்நுட்பம்

டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு தடை- மத்திய அரசு அதிரடி

டிக்டாக், ஹலோ உள்ளிட்ட 59 ஸ்மார்ட்போன் செயலிகளுக்கு அதிரடி தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியா – சீனா இடையே எல்லைப்பகுதியில் நடைபெற்ற மோதலுக்கு பிறகு சீனப் பொருட்களை தடைசெய்வது, சீனவுடனான இதர சில ஒப்பந்தங்களை றது செய்வது என இந்தியா மிகப் பெரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்பாட்டாளர்களுக்கிடையே மிகவும் பிரபலமான டிக்டாக் மற்றும் யுசி பிரவுசர் உள்ளிட்ட 59 சீன ஆப்களுக்கு மத்திய அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் வாசிக்க …..

உலகம் சீனா தேசியம்

இந்திய எல்லையில் சீனா புதிய கட்டுமானம்.. காட்டிக்கொடுத்த செயற்கைக்கோள்?

லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்த மாத தொடக்கத்தில் சீனா புதிய கட்டுமானங்களை எழுப்பியுள்ளது செயற்கைக்கோள் படங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. இந்தியா – சீனா இடையே லடாக் எல்லையில் கடந்த 15ம் தேதி சண்டை நடந்தது. இந்த சண்டையில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். தொடர்ந்து லடாக் எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. அமைதி பேச்சுவார்த்தை மூலம் இந்த சண்டையை தீர்க்க விரும்புகிறோம் என்று இந்திய- சீனா இரு நாடுகளும் தெரிவித்து வரும் மேலும் வாசிக்க …..