பப்ஜி உள்பட 118 சீன செயலிகள் கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் இந்தியாவில் உள்ள ஆப்பிள் ஆப் ஸ்டோரிலிருந்து அதிரடியாக அகற்றப்பட்டுள்ளது.

இநதியா சீனா இடையே ஏற்பட்ட எல்லை மோதலைத் தொடர்ந்து, சீனாவுக்கு பொருளாதார ரீதியாக பாதிப்பை உருவாக்குவதற்காக, சீனாவின் மொபைல் செயலிகளுக்கு அதிரடியாக தடை விதித்தது மத்திய அரசு.

ஏற்கனவே டிக்டாக் உள்பட மொபைல் செயலிகள் முதற்கட்டமாக தடை விதிக்கப்பட்ட நிலையில், 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பயன்பாட்டாளர்கள் உள்ள பிரபல கேம் விளையாட்டான பப்ஜி விளையாட்டுக்கும் தடை விதித்தது.

இந்நிலையில் மொபைல் செயலிகள் தரவிறக்கம் செய்யும் கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஸ்டோரில் இருந்து அந்நிறுவனங்கள் அகற்றி உள்ளது. இதனால் ஆன்ட்ராய்டு மற்றும் iOS பயனர்களுக்கு, பப்ஜி கேம் பதிவிறக்கம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பப்ஜி மொபைல் இந்தியாவில் தடைவிதிப்பட்டுள்ள நிலையில், Fearless And United Guards (FAU-U) என்ற மல்டிபிளேயர் விளையாட்டு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் பாலிவுட் நடிகர் அக்சய் குமார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

“பிரதமர் மோடியின் ஆத்ம நிர்பார் இயக்கத்திற்கு ஆதரவளிக்கும் வகையில், இந்த விளையாட்டு குறித்த அறிவிப்பை வெளியிடுவதில் பெருமையடைகிறேன். ஃபியர்லெஸ் அண்ட் யுனைடெட் – கார்ட்ஸ்(FAU-G) என்பது தான் அந்த விளையாட்டு.

இந்த விளையாட்டில், பொழுதுபோக்கு என்பதைத் தாண்டி, நமது ராணுவத்தினரின் தியாகங்களையும் விளையாடுவோர் கற்றுக்கொள்வார்கள். இந்த விளையாட்டின் மூலம் திரட்டப்படும் மொத்த நிதியில் 20%, #பாரத்கீவீர் டிரஸ்டுக்கு வழங்கப்படும்” என்றார் அக்சய் குமார்.

மேலும் வாசிக்க: லடாக் எல்லை பிரச்சனையால் 118 சீன செயலிகள் தடை – மத்திய அரசு அதிரடி