லடாக் எல்லையில் இந்தியா – சீனா இடையே மோதல் ஏற்பட்டதையடுத்து, இந்தியாவின் தகவல்களை பாதுகாக்கும் வகையில் டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு இந்தியாவில் தடைவிதிப்பதாக அறிவித்தது மத்திய அரசு.

இந்நிலையில் தற்போது பப்ஜி உள்ளிட்ட மேலும் 118 சீன செயலிகளுக்கு தடை விதிப்பதாக மத்திய அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. இந்தியாவில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பயன்பாட்டாளர்கள் பப்ஜி கேமை விளையாடிவருவது குறிப்பிடத்தக்கது.

இந்த செயலிகள் தடைக்கு காரணம் இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, இந்தியாவின் பாதுகாப்பு, அரசின் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கு ஆகியவற்றிற்கு பாரபட்சமற்றவை என்று மத்திய அரசு தனது அறிவிப்பில் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க: பாஜகவில் இணைய வந்த பிரபல ரவுடி, காவல்துறையைக் கண்டதும் தப்பி ஓட்டம்