அறிவியல் சமூகம் தேசியம் மருத்துவம்

பதஞ்சலியின் கொரோனில்: மத்திய சுகாதாரத்துறையிடம் விளக்கம் கேட்கும் IMA

பதஞ்சலியின் கொரோனில் மருந்து குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம் அளிக்க வேண்டும் என்று இந்திய மருத்துவர்கள் கூட்டமைப்பு (IMA) வலியுறுத்தி உள்ளது. உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம், கடந்த ஜூன் 23 ஆம் தேதியன்று ‘கொரோனில் ஸ்வாசரி’ என்ற மருந்தை அறிமுகப்படுத்தியது. இம்மருந்து கொரோனா வைரஸை குணப்படுத்தும் சக்தி கொண்டது எனவும் பகிரங்கமாக விளம்பரப்படுத்தியது. இம்மருந்தை ஏழு நாட்கள் சோதனை செய்ததில், இம்மருந்தை எடுத்துக் கொண்ட மேலும் வாசிக்க …..

கொரானா சமூகம் தேசியம் மருத்துவம்

பதஞ்சலியின் கொரோனில் மருந்திற்கு ஒப்புதல் அளிக்கவில்லை: உலக சுகாதார அமைப்பு

பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனத்தின் கொரோனில் மருந்திற்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளித்ததாகத் தகவல் பரவிய நிலையில், இதற்கு உலக சுகாதார அமைப்பு மறுப்பு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் உச்சத்திலிருந்த கடந்த ஜூன் மாதம் பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் ‘கொரோனில்’ என்ற ஆயுர்வேத மருந்தை அறிமுகம் செய்தது. இந்த மருந்து அறியவில் பூர்வமாகவே உருவாக்கப்பட்டுள்ளதாகவும், கொரோனாவை குணப்படுத்தும் என்றும் பாபா ராம்தேவ் கூறியிருந்தார். இருப்பினும், அறிவியல் ஆதாரங்களை எதையும் பதஞ்சலி நிறுவனம் மேலும் வாசிக்க …..

சமூகம் தேசியம் மருத்துவம்

கிருமிநாசினியை அடிக்கடி பயன்படுத்தினால் கைரேகை அழியுமாம்- எச்சரிக்கும் மருத்துவர்கள்

கொரோனா வைரசில் இருந்து பாதுகாத்துக் கொள்ள அடிக்கடி கிருமி நாசினியை பயன்படுத்தினால் கைரேகை அழியும் ஆபத்து இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் உலக நாடுகளில் கொரோனா பரவத் தொடங்கியது. இந்தியாவில் கடந்த 2020 மார்ச் மாதம் முதல் பல மாதங்கள் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பின்னர் படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டு, தற்போது மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். இருப்பினும் கொரோனா வைரஸ் பரவலை மேலும் வாசிக்க …..

கொரானா சமூகம் தேசியம் மருத்துவம்

மருத்துவ பிரச்சனை உள்ளவர்கள் கோவாக்சின் எடுத்துக் கொள்ள வேண்டாம்‌- பாரத்‌ பயோடெக்

ஒவ்வாமை, காய்ச்சல்‌, கருவுற்ற தாய்மார்கள் மற்றும்‌ தீவிர மருத்துவ‌ பிரச்சனை உள்ளவர்கள்‌ கோவாக்சின்‌ தடுப்பு மருந்தை எடுத்துக்கொள்ள வேண்டாம்‌ என்று பாரத்‌ பயோடெக்‌ நிறுவனம்‌ அறிவுறுத்தி உள்ளது. இந்தியாவில்‌, பாரத்‌ பயோடெக்‌ நிறுவனத்தால்‌ தயாரிக்கப்பட்ட கோவாக்சின்‌, சீரம்‌ இந்தியா நிறுவனத்தால்‌ தயாரிக்கப்பட்ட கோவிஷீல்ட்‌ ஆகிய இரண்டு தடுப்பூசி மருந்துகள் ஜனவரி 16 ஆம் தேதி முதல் மக்களுக்கு வழங்கப்படுகின்றன. இந்த இரண்டு தடுப்பு மருந்துகளில்‌ எது வேண்டும்‌ என்பதை மக்கள்‌ தேர்ந்தெடுக்க முடியாது என்று மத்திய அரசு மேலும் வாசிக்க …..

தமிழ்நாடு மருத்துவம்

அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் சாந்தா மறைவு.. தலைவர்கள் இரங்கல்

சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் சாந்தா உடல்நலக்குறைவால் இன்று (ஜனவரி 19) அதிகாலை காலமானார். புகழ்பெற்ற புற்றுநோய் மருத்துவ நிபுணரும், சென்னை அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் மருத்துவர் சாந்தா (வயது 93), சென்னை மருத்துவக் கல்லூரியில் 1949 ஆம் ஆண்டு மருத்துவர் பட்டமும், 1955 ஆம் ஆண்டில் எம்.டி. பட்டமும் பெற்றார். அடையாறில் தொடங்கப்பட்ட மருத்துவமனையில் மருத்துவராக தனது பணியை துவங்கினார். ஏழை எளிய மக்களுக்கும் புற்றுநோய் சிகிச்சை எளிதில் கிடைக்க அரும்பணியாற்றியவர். மேலும் வாசிக்க …..

சமூகம் தமிழ்நாடு தேசியம் மருத்துவம்

ஜனவரி 31 முதல் போலியோ சொட்டு மருந்து முகாம்

நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம், ஜனவரி 31 ஆம் தேதி முதல் நடைபெறும் என மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்து உள்ளது. போலியோ நோயை முற்றிலும் ஒழிப்பதற்காக, 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்தாண்டும் போலியோ சொட்டு மருந்து முகாம், வருகிற 17 ஆம் தேதி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், நாடு முழுவதும் நாளை (ஜனவரி 16) கொரோனா தடுப்பூசி மேலும் வாசிக்க …..

கொரானா சமூகம் தமிழ்நாடு தேசியம் மருத்துவம்

கொரோனா தடுப்பூசி எதிரொலி: போலியோ சொட்டு மருந்து முகாம்கள் ஒத்திவைப்பு

நாடு முழுவதும் ஜனவரி 16 முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கும் என மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், குழந்தைகளுக்கான போலியோ சொட்டு மருந்து முகாம்கள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. கொரோனா பாதிப்பில் உலக அளவில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்தியாவில் இதுவரை 10,451,346 பேர் பாதிக்கப்பட்டு, 151,048 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் ஆகிய 2 கொரோனா தடுப்பூசிகளுக்கு அவசரக் கால பயன்பாட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. நாடு மேலும் வாசிக்க …..

சமூகம் தேசியம் மருத்துவம்

மகாராஷ்டிரா மாநில அரசு மருத்துவமனையில் தீ விபத்து- 10 பச்சிளம் குழந்தைகள் பலி

மகாராஷ்டிரா மாநில அரசு மருத்துவமனை குழந்தைகள் சிகிச்சைப் பிரிவில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பச்சிளம் குழந்தைகள் உயிர் இழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் பந்த்ரா மாவட்டத்தில் 4 மாடி அரசு பொது மருத்துவமனை இயங்கி வருகிறது. குறைமாதத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கும், பிறக்கும் போதே ஏதாவது குறைபாடு உள்ள குழந்தைகளுக்கும் சிகிச்சை அளிப்பதற்கென இந்த மருத்துவமனையில் ஸ்பெஷல் வார்டு உள்ளது. இங்குள்ள குழந்தைகள் சிகிச்சைப்பிரிவில் பிறந்து சில நாட்கள் ஆனது முதல் மேலும் வாசிக்க …..

கொரானா சமூகம் தேசியம் மருத்துவம்

நாடு முழுவதும் ஜனவரி 16 முதல் கொரோனா தடுப்பூசி- மத்திய அரசு

நாடு முழுவதும் ஜனவரி 16 ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸுக்கு பல்வேறு நாடுகளும் தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய 2 தடுப்பூசிகளை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு கடந்த சில நாட்களுக்கு முன் அனுமதி வழங்கியது. இதற்கிடையே, நாடு முழுதும், கொரோனா தடுப்பூசிக்கான ஒத்திகை நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் ஏற்கனவே 17 இடங்களில் மேலும் வாசிக்க …..

கொரானா சமூகம் தேசியம் மருத்துவம்

கோ-வின் போலி செயலிகளை டவுன்லோடு செய்ய வேண்டாம்- எச்சரிக்கும் மத்திய அரசு

கொரோனா தடுப்பூசிக்கான கோ-வின் செயலி விரைவில் வெளியாகும், ஆனால் அதற்குள் அதே பெயரில் போலி கொரோனா வைரஸ் தடுப்பூசி செயலிகளை டவுன்லோடு செய்ய வேண்டாம் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. டிஜிட்டல் தளங்களில் கோ-வின் என்ற பெயரில் தற்போது சில போலியான கோவிட்-19 தடுப்பூசி செயலிகள் வெளியாகியுள்ளன. இவற்றை பதிவிறக்கம் செய்யவோ அதில் தனிப்பட்ட தகவல்களை பதிவேற்றம் செய்யவோ வேண்டாம் என மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், மேலும் வாசிக்க …..