அரசியல் தமிழ்நாடு

மனுஸ்மிருதி மேட்டரில் காயத்ரியின் அதிங்கபிரசிங்கியான பதிவால் கணக்கை முடக்கி ட்வீட்டர் அதிரடி

விதிகளை மீறியதற்காக பாஜக தமிழக கலை மற்றும் கலாச்சார பிரிவு தலைவர் காயத்ரி ரகுராமின் கணக்கை ட்விட்டர் சஸ்பெண்ட் செய்தது. மனுஸ்மிருதி குறித்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் அறிக்கை தொடர்பான சர்ச்சையை தொடர்ந்து, மனுஸ்மிருதிக்கு ஆதரவாக நடிகை காயத்ரி ரகுராம் சர்ச்சைக்குரிய தொடர் ட்வீட்களை அவர் வெளியிட்டுள்ளார். இந்நிலையில் காயத்ரியின் ட்விட்டர் கணக்கு ஞாயிற்றுக்கிழமை காலை இடைநிறுத்தப்பட்டது. ‘ட்விட்டர் விதிகளை மீறும் கணக்குகளை ட்விட்டர் இடைநிறுத்துகிறது’ என்று பக்கத்தில் காணப்பட்டது. காயத்ரியின் கணக்கில்பல மேலும் வாசிக்க …..

அரசியல் தமிழ்நாடு

பாஜக கல்விப் பிரிவு மாநில செயலாளர் கடிதத்துக்கும், பாஜகவுக்கும் சம்மந்தம் இல்லை; சொல்கிறார் முருகன்

மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்கக்கூடாது என பாஜகவின் கல்வி பிரிவு மாநில செயலாளர் நந்தகுமார் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு மசோதா வழங்க கோரிய அரசாணை ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க 3 முதல் 4 வாரங்கள் ஆய்வு செய்ய கால அவகாசம் தேவைப்படும் என ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கூறியுள்ளார். இந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் மேலும் வாசிக்க …..

அரசியல் தமிழ்நாடு

மனுநீதியை எதிர்த்து திருமாவளவன் போர்க்கொடி; பாஜக, ஆர்எஸ்எஸ் கலக்கம்

எனக்கு எதிராக சனாதன கும்பல் தவறான பிரச்சாரம் செய்து வருகிறது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார். பெண்களை இழிவு படுத்தும் மனுதர்ம நூலை தடைசெய்ய வேண்டும் என போராட்டம் நடத்திய தொல்.திருமாவளவன் கூறுகையில், “இது மகளிர் குலத்தின் மீதான இழிவை துடைக்கும் போராட்டம். பெண்களை இழிவு படுத்தும் மனுதர்ம நூலை தடை செய்ய வேண்டும். அரசியல் ஆதாயத்துக்காக தன் மீது அபாண்டமாக பழி சுமத்துகின்றனர். திமுக கூட்டணியை சிதறடிக்கவே என் மீது மேலும் வாசிக்க …..

அரசியல் கல்வி தமிழ்நாடு

மாணவர்களுக்கு துரோகம் செய்யும் அதிமுக; போராட்டத்தை முன்னெடுக்கும் திமுக

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் அதிமுக அரசுக்கு எதிராக திமுக நாளை (அக்டோபர் 24) கண்டன ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது. மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை ஆளுநர் அதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. இந்த உள்ஒதுக்கீடு மசோதாவிற்கு ஆளுநர் வேண்டுமென்றே ஒப்புதல் அளிக்காமல் உள்ளதாக குற்றம் சாட்டி, ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் மேலும் வாசிக்க …..

அரசியல் தமிழ்நாடு

திருமாவளவனின் கருத்துக்கு மன்னிப்புக் கேட்க சொல்லும் பாஜக குஷ்பு

மனுஸ்மிருதி எனும் சனாதன நூலை மத்திய, மாநில அரசுகள் தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி சனிக்கிழமை (அக்டோபர் 24) விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவித்திருக்கிறார் தொல். திருமாவளவன். இது தொடர்பாக திருமாவளவன் தமது டிவிட்டர் பக்கத்தில், “மகளிரை இழிவுசெய்யும் மனுஸ்மிருதியைத் தடை செய்! தமிழகமெங்கும் விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்! பிற்படுத்தப்பட்ட மக்களையும், ஆதிக்குடிகளையும்,பெண்களையும் மிகக்கேவலமாக இழிவுபடுத்துவதும் வெறுப்பைப் பரப்புவதுமான மனுஸ்மிருதியை தடை செய்ய வேண்டும்” எனக் கூறியுள்ளார். மேலும், சுமார் மேலும் வாசிக்க …..

அரசியல் தமிழ்நாடு

ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்

தனது தேர்தல் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்டுள்ள வழக்கை நிராகரிக்கக் கோரி, எம்.பி.ரவீந்திரநாத் குமார் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து, வழக்கை எதிர்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்று முடிந்த லோக்சபா தேர்தலில், தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் அதிமுக 20 தொகுதிகளில் போட்டியிட்டது. ஆனால், தேனி தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்ற நிலையில், மற்ற அனைத்து தொகுதிகளிலும் படுதோல்வி அடைந்தது. தேனி தொகுதி பாராளுமன்ற வேட்பாளரான ஓபிஎஸ் மேலும் வாசிக்க …..

அரசியல் தமிழ்நாடு

துணைவேந்தர் சூரப்பா கடிதம் சர்ச்சை: ‘அண்ணா பல்கலைக்கழகத்தை காப்போம்’ என திமுக போர்க்கொடி

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்து பெறும் விவகாரத்தில் துணைவேந்தர் சூரப்பா நேரடியாக மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்தால் சர்ச்சை வெடித்த நிலையில், பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றன. அண்ணா பல்கலைக்கழகம் தன்னாட்சி நிறுவனம் என்கிற அந்தஸ்தைப் பெறுவதற்கு 5 ஆண்டுகளில் ரூ.1,570 கோடி நிதி தேவையை பல்கலைக்கழகமே எளிதில் பூர்த்தி செய்ய முடியும். ஆகவே, உயர் சிறப்பு அந்தஸ்து அளிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மேலும் வாசிக்க …..

கொரானா தமிழ்நாடு

தமிழகத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா- 4879 பேர் பாதிப்பு, 62 பேர் பலி

தமிழகத்தில் தினமும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், இன்று (அக்டோபர் 12) 4,879 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் மேலும் 4,879 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி மொத்த பாதிப்பு 6,61,264-ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 6,07,203 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 5,165 பேர் குணமடைந்துள்ளனர். இன்று மேலும் 62 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் மொத்தம் பலி மேலும் வாசிக்க …..

அமர்வு நீதிமன்றம் குரல்கள் கேளிக்கை சினிமா தமிழ்நாடு வாழ்வியல்

நடிகர் பரோட்டா சூரியிடம் ரூ.2.70 கோடி மோசடி பிரபல நடிகர் தந்தை மீது வழக்கு பாய்ந்தது

நகைச்சுவை நடிகர் பரோட்டா சூரியிடம் ரூ.2.70 கோடி மோசடி  செய்ததாக ஓய்வு பெற்ற டிஜிபி உள்பட இருவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.   இது குறித்து போலீஸ் தரப்பில் செய்தி குறிப்பில் :    சென்னை விருகம்பாக்கத்தில் வசித்து வரும் பிரபல நகைச்சுவை நடிகர் சூரி, சென்னை காவல்துறையில் அண்மையில் ஒரு புகார் அளித்தார்   அதில், கடந்த ‘2015-ம் ஆண்டு அன்புவேல் ராஜன் தயாரிப்பில் ’வீரதீர சூரன்’ படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனேன். மேலும் வாசிக்க …..

உச்ச நீதிமன்றம் தமிழ்நாடு

இலவச வீட்டு மனை பட்டா பயனாளிகள், வேறு வீடு வைத்திருந்தால் பட்டா ரத்து : நீதிமன்றம்

இலவச வீட்டு மனை பட்டா பயனாளிகள், வேறு வீடு வைத்திருந்தால் பட்டாவை ரத்து செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   ஒருவேளை இலவச இடத்தில் வீடு கட்டியிருந்தால் மின் இணைப்பு மற்றும் குடிநீர் இணைப்பை துண்டிக்கலாம் என்று உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது .   மேலும் வேறு ஏதேனும் இடங்கள் அல்லது வீடு இருந்தால் அரசு சார்பில் வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.   சிவகங்கையை சேர்ந்த சக்திவேல் என்பவர் தாக்கல் செய்த மனுவை மேலும் வாசிக்க …..