நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சசருமான ராம் விலாஸ் பாஸ்வான் உடல்நல குறைவு காரணமாக நேற்று காலமானார் .
மேலும் இவரது மகன் சிராக் பாஸ்வான் ட்விட்டரில் தனது இந்தி பதிவில், ”கடந்த சில நாட்களாக எனது தந்தை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருந்தார். நேற்றிரவு திடீரென அவருக்கு உடலில் பாதிப்பு ஏற்பட்டு இருதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது. தேவைபட்டால் மேலும் ஒரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியது இருக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்து இருந்த நிலையில் காலமாகி இருக்கிறார் என்றும் உங்களை மிஸ் செய்கிறேன் பப்பா” என்று பதிவிட்டுள்ளார்..
1946ம் ஆண்டு ஜூலை 5 ம் தேதியில் பிகாரில் உள்ள கஃகாரியாவில் பிறந்தார்.கடந்த ஐம்பது ஆண்டுகளாக அரசியலில் இருந்து வருகிறார். இவர் தலித் முன்னேற்றத்திற்காக போராடியுள்ளார்.
இவர் மறைந்த முன்னாள் பிரதமர் விபி சிங்குடன் இணைந்து மண்டல் கமிஷனை அமல்படுத்தியுள்ளார். எஸ்டி/எஸ்சி (வன்முறை தடுப்பு) சட்டம் அமலுக்கு வந்தது பீகார், உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் விபி சிங்கிற்கு ஆதரவாக, மண்டல் கமிஷனை ஆதரித்து பிரச்சாரங்களிலும் ஈடுபட்டார்.
எட்டு முறை மக்களவை உறுப்பினராகவும் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்துள்ளார்
1969ஆம் ஆண்டு பீகார் சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1974இல் லோகதளம் கட்சி உருவானபோது அதில் இணைந்தார்.
1977இல் ஹாஜீபூரிலிருந்து ஜனதா கட்சியின் சார்பில் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இத்தொகுதியிலிருந்து 1980, 1984, 1989, 1996 மற்றும் 1998 ஆண்டுகளில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2000இல் ஜனதா தளம் கட்சி யிலிருந்து விலகி லோக் ஜனசக்தி கட்சியை (LJP) நிறுவி அதன் தலைவராக விளங்கினார். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் கூட்டுச் சேர்ந்து வேதிப்பொருள் மற்றும் உரத்துறை அமைச்சராகவும் பணி புரிந்தார்.
2004இல் மக்களவைத் தேர்தல்களில் வென்ற பாசுவான் 2009இல் தோல்வியைத் தழுவினார். 2010 முதல் 2014 வரை மாநிலங்களவையில் உறுப்பினராக இருந்த பாசுவான் 2014ஆம் ஆண்டு தமது ஹாஜீபூர் தொகுதியிலிருந்து தேசிய சனநாயகக் கூட்டணி வேட்பாளராக பதினாறாவது மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்
கடந்த சில நாட்களாகவே உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்த மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வானுக்கு அக்டோபர் 7 ம் தேதி இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருந்த நிலையில் நேற்று காலமானார்.
இவருக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
காங்கிரஸ் எம்.பி வசந்தகுமார் கொரோனவால் பலி; அரசியல் கட்சியினர் இரங்கல்