முகநூல் (பேஸ்புக்) பயனாளர்கள் 5 கோடி பேரின் தகவல்கள் திருடு போயிருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கு பாதுகாப்பு குறைபாடுகளே காரணம் என்பது தெரிய வந்துள்ளது. இது மிகவும் கடுமையான பாதுகாப்பு பிரச்சினை என்று பேஸ்புக் நிறுவன தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர் பெர்க் தெரிவித்துள்ளார்.
இதன் விசாரணை ஆரம்பகட்டத்தில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கு பின்னால் இருப்பது யார் என்பது குறித்து இன்னும் கண்டறியப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
பேஸ்புக் நிறுவனம் தனது பயனாளர்களை பாதுகாப்பாக வைத்திருப்பதற்கான திறனை மேம்படுத்துவதற்காக ஆய்வு நடத்தி வருவதாகவும் அவர் கூறியுள்ளார். விரைவில் இதற்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பேஸ்புக் கணக்கில் ஊடுருவல் தகவலை அடுத்து அமெரிக்க பங்குச் சந்தையில் பேஸ்புக்கின் பங்குகள் 2.6% வீழ்ச்சி அடைந்துள்ளன. தகவல் திருட்டு பிரச்னையில் பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ள பேஸ்புக் நிறுவனத்திற்கு இது மேலும் பின்னடைவாக கருதப்படுகிறது.
Trackbacks/Pingbacks