தேர்தல் தேதி அறிவித்த பின்னர் இது வரை 50 கோடி ரொக்கமும் 68 கோடி மதிப்புள்ள தங்கமும் வெள்ளியும் தேர்தல் விதிமுறைகளை மீறியதால்  பிடிப்பட்டதாக இன்று தேர்தல் ஆனையாளர் அறிவித்த நிலையில்.,   திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வங்கியில் இருந்து கொண்டச் செல்லப்பட்ட ரூ.10 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
 
உரிய ஆவணங்கள் இல்லை எனக் கூறி வங்கி பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
 
விசாரணையில் தூத்துக்குடி தமிழ்நாடு மெர்கன்டல் வங்கி கிளைக்கு கோவையிலிருந்து கொண்டு செல்லப்பட்டது தெரியவந்துள்ளது.
 
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் விதிகள் அமலுக்கு வந்துள்ள சூழ்நிலையில் மாநிலம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
குறிப்பாக வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்யப்படுவதை தடுக்கும் நோக்கில், மொத்தமாக பணம் கொண்டு செல்வதை தடுக்க தொடர்ந்து வாகன சோதனை நடத்தப்படுகிறது.
 
இதில் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்படும் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கரடிவாவி பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
 
அவ்வழியே வந்த கன்டெய்னர் வாகனத்தை வழிமறித்து சோதனை செய்ததில், ஆவணமின்றி 10 கோடி ரூபாய் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
 
அவை போத்தனூரில் இருந்து தூத்துக்குடிக்கு எடுத்துச் செல்லப்பட்ட தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் பணம் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
 
இதுபற்றி அந்த வாகனத்தில் வந்தவர்களிடம் விசாரித்தபோது, அது வங்கிக்கு சொந்தமான பணம் என்றும், போத்தனூரில் இருந்து தூத்துக்குடியில் உள்ள வங்கிக்கு கொண்டு செல்வதாகவும் கூறியுள்ளனர்.
 
ஆனால், அவர்களிடம் உரிய ஆவணங்கள் இல்லாததால், பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் கைப்பற்றியுள்ளனர். இதையடுத்து வங்கி நிர்வாகிகள் உரிய ஆவணங்களை ஒப்படைத்தால், பணம் திருப்பித் தரப்படும் என்று தேர்தல் பறக்கும் படையினர் கூறியுள்ளனர்.
 
இதேபோல, கடந்த 2016ம் ஆண்டு தேர்தலின் போது, இதே திருப்பூர் அருகே 570 கோடி ரூபாயுடன் 3 போலி நம்பருடன்  கன்டெய்னர்கள் சிக்கியது. அவைகள் மூன்று  நாட்களுக்கு பின்னர் அவர் எஸ்பிஐ பணம் என்று பாஜக அரசின் நிதி மந்திரி தெர்விக்க அந்த வழக்கு நீதிமன்றம் வரை சென்று   இழுவையில் சென்றது என்பது குறிப்பிடத்தக்கது.