இந்திய ராணுவத்தின் துணை ராணுவ படைப்பிரிவுகளில் ஒன்றான எஸ்எஸ்பி என அழைக்கப்படும் சாஸ்திரா சீமா பல் (சஷஸ்த்திர சீமா பால்) படைப்பிரிவில் காலியாக உள்ள 181 சப்-இன்ஸ்பெக்டர், உதவி சப்-இன்ஸ்பெக்டர், ஹெட்கான்ஸ்டபிள் தரத்திலான துணை மருத்துவ பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்தம் காலியிடங்கள்: 181

காலியிடங்கள் விவரம்:
1. Sub Inspector: (Staff Nurse Female): 23 இடங்கள். சம்பளம்: ₹35,400. வயது வரம்பு: 21 முதல் 30க்குள். அறிவியல் பாடப்பிரிவில் பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஜெனரல் நர்சிங் பாடத்தில் டிப்ளமோ. மத்திய, மாநில நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும். 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

2. Assistant Sub Inspector: 18 இடங்கள். (Pharmacist) அறிவியல் பாடத்தில் பிளஸ் 2 தேர்ச்சியுடன் பார்மசி பாடத்தில் இளநிலை/டிப்ளமோ தேர்ச்சியுடன் பார்மசிஸ்ட்டாக பதிவு செய்திருக்க வேண்டும்.

3. Assistant Sub Inspector (Operatiion Theatre Technician): 2 இடங்கள். அறிவியல் பாடப்பிரிவில் பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஆபரேசன் தியேட்டர் டெக்னீசியன் பாடப்பிரிவில் டிப்ளமோ/சான்றதழ் பெற்று 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

4. Assistant Sub Inspector (Dental Technician): 2 இடங்கள். அறிவியல் பாடத்தில் பிளஸ் 2 தேர்ச்சியுடன் Dental Hygienist பாடத்தில் டிப்ளமோ தேர்ச்சியுடன் ஒரு வருட பணி அனுபவம்.

5. Assistant Sub Inspector (Radiographer): 8 இடங்கள் (பொது-5, ஒபிசி-2, எஸ்சி-1) தகுதி: அறிவியல் பாடத்தில் பிளஸ் 2 தேர்ச்சியுடன் Radio Diagnosis பாடத்தில் டிப்ளமோ தேர்ச்சியுடன் ஒரு வருட பணி அனுபவம். 2 முதல் 5 வரையிலான பணிகளுக்கு வயது வரம்பு: 20 முதல் 30க்குள்.

6. Assistant Sub Inspector: (Stenographer): 54 இடங்கள். பிளஸ் 2 தேர்ச்சியுடன் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் வீதம் 10 நிமிடங்கள் சுருக்கெழுத்தில் எழுதும் திறன் பெற்றிருக்க வேண்டும். சுருக்கெழுத்தில் எழுதியதை இந்தியில் 65 நிமிடங்களுக்குள்ளும், ஆங்கிலத்தில் 50 நிமிடங்களுக்குள்ளும் கம்ப்யூட்டரில் டைப் செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். 2 முதல் 6 வரையிலான பணிகளுக்கு சம்பளம்: ரூ.29,200.

7. Head Constable (Ministerial): 74 இடங்கள். பிளஸ் 2 தேர்ச்சியுடன் இந்தியில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகளும், ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகளும் கம்ப்யூட்டரில் டைப் செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். 6 மற்றும் 7 பணிகளுக்கான வயது வரம்பு: 18 முதல் 25க்குள்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.09.2018

விண்ணப்ப கட்டணம்: ரூ.100ஐ ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். பெண்கள்/எஸ்சி/எஸ்டி/ முன்னாள் ராணுவத்தினருக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, உடல்திறன் தேர்வு, திறன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்புகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் Sashastra Seema Bal என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் தேர்வு பற்றிய முழுமையான விவரங்கள் அறிய..