இந்தோனேஷியாவின் மத்திய பகுதி சுலாவேசி தீவை சுனாமி தாக்கியதில் இது வரை 400 பேர் பலியாகியுள்ளனர் என்று தெரிய வந்த்துள்ளது.

இந்தோனேசியாவின் மத்திய சுலாவேசி தீவில் உள்ள பலு நகரத்தை சுற்றி 78 கிமீ தூரத்தை மையமாக கொண்டு நேற்று காலை, முதலில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது, ரிக்டர் அளவில் 6.1 புள்ளிகளாக பதிவாகியிருந்தது. இதில், ஒருவர் உயிரிழந்தார். 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். 12க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன.இதை தொடர்ந்து, பிற்பகலில் அதே தீவில் மற்றொரு பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. டோங்க்லா நகரத்தில் இருந்து 56 கிமீ தொலைவில் 10 கிமீ ஆழத்தில் இதன் மையம் இருந்தது.

இது ரிக்டர் அளவுகோலில் 7.5 புள்ளிகளாக பதிவானது. பல வீடுகள் இடிந்து சேதமடைந்தன. இதில், 9க்கும் மேற்பட்டோர் பலியானதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவித்தது. நிலநடுக்கத்தை தொடர்ந்து இந்தோனேஷியாவின் மத்திய பகுதி சுலாவேசி தீவை சுனாமி தாக்கியது. இந்நிலையில் இன்று காலையில் 48 பேர் இறந்துள்ளதாக செய்திகள் வெளியாகியது. ஆனால் தற்போதைய நிலையில் பலி எண்ணிக்கை 400 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 2004 ஆம் ஆண்டில் இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் ஏற்பட்ட 9.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் 2 லட்சத்து 30 ஆயிரம் பொது மக்கள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Tags: