டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனக்கு தேவைப்படும் போது தனது ஆன்மாவையும் விற்பார் என பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் விமரிசித்து உள்ளார்.

மத்திய பாஜக அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து, டெல்லியில் விவசாயிகள் கடந்த 20 நாட்களாக கடும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனையொட்டி டெல்லியில் வெளி மாநிலப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் நடத்திய பேச்சு வார்த்தையில் மத்திய அரசு அவர்கள் கோரிக்கையை ஏற்காமல் உள்ளது. இந்நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

காரணம் மூன்று வேளான் சட்டங்களில் ஒரு சட்டத்துக்கு டெல்லி முதல்வர் ஆதரவு தெரிவிப்பதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன. வேளாண் சட்டங்களைத் தீவிரமாக எதிர்த்து வரும் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் இதனால் மிகவும் கோபம் அடைந்துள்ளார்.

இதுகுறித்து கருது தெரிவித்துள்ள அமரீந்தர் சிங், “மத்திய அரசின் எந்த ஒரு போலி வழக்குக்கும் அடிபணியாமல் நான் இருப்பதை ஒவ்வொரு பஞ்சாபியும் அறிவார். அதே நேரத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் தேவைப்படும்போது தனது ஆன்மாவையும் விற்பார் என்பதையும் நாங்கள் அறிவோம்.

இப்போது அதுபோல விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களை ஆதரித்து அவர் தனது ஆன்மாவை விற்றதை இந்த உலகமே அறிந்துள்ளது. இவ்வாறு எதற்காக நீங்கள் செய்தீர்கள்? மத்திய அரசு உங்களுக்கு என்ன அழுத்தத்தை அளித்தது..” எனக் கடுமையாக விமரிசித்து உள்ளார்.

 

டெல்லியில் போராடும் விவசாயிகளை அப்புறப்படுத்தக்கோரி வழக்கு.. உச்சநீதிமன்றம் விசாரணை