தமிழகத்தில் ஆம்னி பேருந்துகள் இயக்கத்திற்கான இணையவழி முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.

லாக்டவுன் 4.0ல் மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்து குறித்து மாநில அரசுகளே முடிவு எடுத்துக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

கொரோனோ ஊரடங்கு காரணமாக பொதுப் போக்குவரத்து முடக்கத்தில் உள்ளது. அத்தியாவசிய பணிகளுக்காகவும், அரசு ஊழியர்களுக்காகவும் மட்டுமே சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. நான்காம் கட்ட ஊரடங்கு மே.31 முடியும் நிலையில், ஜூன் மாதத்திலிருந்து பேருந்து இயக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மேலும் வாசிக்க: 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் மீண்டும் மாற்றம்

இந்நிலையில், ஜூன் 7-ம் தேதி முதல் தமிழகத்தின் பல்வேறு நகரங்களுக்கு மற்றும் பிற மாநிலங்களுக்கும் செல்வதற்கான ஆம்னி பேருந்துகள் முன்பதிவு தொடங்கியுள்ளது.

ஆனால் பேருந்துகள் இயக்கப்படும் தேதி உறுதியானது இல்லை எனவும், இது முன்னேற்பாடான நடவடிக்கை, அரசு அறிவித்த பின்னரே பேருந்துகளை இயக்குவோம் என்றும் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தெரிவித்துள்னர்.

மேலும் ஒரு சில பேருந்துகளில் பண்டிகை நாட்களில் வசூலிக்கபடும் கட்டண விகிதம் வசூலிக்கப்பட்டாலும், முன்பதிவு சீராகவே உள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.