சென்னை புறநகர் ரயிலில் நாளை (டிசம்பர் 23) முதல் பொதுமக்கள் அனைவரும் பயணிக்க அனுமதி வழங்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சென்னை புறநகர் ரயில் சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. கொரோனா வைரஸ் தொற்று கட்டுக்குள் வர படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டது. முதலில் அத்தியாவசிய பணியாளர்களுக்காக குறைந்த அளவில் சென்னை புறநகர் ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டது.

புறநகர் ரயில் சேவை முடக்கத்தால் வேலைக்கு செல்லும் சென்னைவாசிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். ஆனால் சேவை தொடங்கப்பட்டால் சமூக இடைவெளி இல்லாமல் கூட்டம் அதிகமாக கூட வாய்ப்புள்ளதால் சுமார் 9 மாதங்களாக அனுமதி வழங்கப்படவில்லை.

இந்நிலையில் நாளை (டிசம்பர் 23) முதல் பொதுமக்கள் அனைவரும் சென்னை புறநகர் ரயிலில் பயணம் செய்யலாம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ஆனால் கூட்டம் குறைவான நேரத்தில் மட்டுமே பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காலை 7 மணி முதல் 9.30 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் 7 மணி வரையிலும் பயணம் செய்ய தடை தொடர்கிறது.

அனுமதிக்கப்பட்ட நேரம் தொடங்குவதற்கு முன்பாக டிக்கெட் வழங்கப்படும். பயணிகள் ஒரு வழிப் பயணத்திற்கு மட்டுமே டிக்கெட் பெற முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் யாரும் முகக்கவசம் அணியாமல் ரயில் மற்றும் ரயில் வளாகங்களுக்கு வரக்கூடாது என வலியுறத்தப்பட்டுள்ளது.

ஜனவரி-1 முதல் சொத்து வரியுடன் குப்பை கட்டணம்; சென்னை மாநகராட்சி